மகேஷூக்கு கால்கட்டு.. முக்காடு போட்ட பவித்ராவின் மூளைச்சலவை.. சிக்கினாளா ஆனந்தி! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மகேஷூக்கு கால்கட்டு.. முக்காடு போட்ட பவித்ராவின் மூளைச்சலவை.. சிக்கினாளா ஆனந்தி! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

மகேஷூக்கு கால்கட்டு.. முக்காடு போட்ட பவித்ராவின் மூளைச்சலவை.. சிக்கினாளா ஆனந்தி! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Published Oct 16, 2024 11:30 AM IST

பவித்ரா மகேஷின் அம்மாவை மூளைச்சலவை செய்து, அவனுக்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்து விட்டாள். இன்னொரு பக்கம் ஆனந்தி ஒரு வழியாக அன்புவின் அம்மாவின் வீட்டில் இருந்து தப்பித்து விட்டாள்.

மகேஷூக்கு கால்கட்டு.. முக்காடு போட்ட பவித்ராவின் மூளைச்சலவை.. சிக்கினாளா ஆனந்தி! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
மகேஷூக்கு கால்கட்டு.. முக்காடு போட்ட பவித்ராவின் மூளைச்சலவை.. சிக்கினாளா ஆனந்தி! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

இன்னொரு பக்கம் மித்ராவின் திட்டப்படி, மகேஷின் அம்மா அவனுக்கு விரைவில் ஒரு கல்யாணத்தை செய்து வைக்க வேண்டும்;அப்போதுதான் அவன் நமது வழிக்கு வருவான் என்றும் கூறுகிறார். இதைக் கேட்டு மித்ரா சந்தோஷம் அடைகிறாள்” இவை தொடர்பான நிகழ்வுகள் அதில் இடம் பெற்று இருக்கின்றன.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

சிங்கப்பெண்ணே சீரியலின் கடந்த எபிசோடில், அன்புவின் வீட்டில், ஆனந்தியை மகேஷ் விட்டு சென்றிருந்த நிலையில், திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக, கோயிலுக்குச் சென்ற அன்புவின் அம்மாவும் தங்கையும் வந்து விட்டார்கள். 

இதையடுத்து ஆனந்தியை எப்படி மறைப்பது என்று யோசித்த அன்பு, முதலில் மொட்டை மாடியில் அவளை மறைத்து வைத்தான். அதன் பின்னர் ஒரு போர்வையை எடுத்து, அதன் பின்னால் அவளை மறைத்து, வீட்டை விட்டு வெளியே கொண்டுவர முயற்சி செய்தான்.

இன்னொரு பக்கம் ஆனந்தியின் நண்பிகள் ஆனந்தியை நடு இரவில் வெளியே அனுப்பியதற்காக ஹாஸ்டல் வார்டனை சாடினர். அதற்கு அவர், அவள் எங்கே சென்றிருந்தாள் என்ற உண்மையை கூறாத காரணத்தினால்தான், அவளை ஹாஸ்டல் உள்ளே அனுமதிக்க வில்லை என்றார். மேலும் அவள் எங்கே சென்றிருந்தாள் என்ற உண்மையைக் கூறிவிட்டு, ஹாஸ்டலுக்குள் வரலாம் என்றும் பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.