அன்புவாக மாறும் ஆனந்தி.. சத்தியம் செய்த பயத்தில் அன்பு.. சிக்குவாரா ஆனந்தி? பரபரப்பான கட்டத்தில் சிங்கப்பெண்ணே..
அன்புவின் அம்மாவிற்கு தெரியாமல் வீட்டை விட்டு கிளம்ப, ஆனந்தியும் அன்புவும் சேர்ந்து தீட்டும் திட்டம் என்ன என்பதை இன்றைய எபிசோடில் காணலாம்.

சிங்கப் பெண்ணே சீரியலில், காயத்ரியை சிலர் கடத்தி வைத்திருந்ததை அறிந்த ஆனந்தி அவளைக் காப்பாற்ற முயன்று, ஹாஸ்டலுக்கு தாமதமாக வந்தார். அப்போது, ஹாஸ்டலுக்குள் நுழைய சுவர் ஏறி குதித்து வார்டனிடம் மாட்டிக் கொண்டார். இதனால், ஆனந்தியை ஹாஸ்டல் வார்டன் வெளியே அனுப்பி விட்டார்.
ஆனந்திக்காக போராடும் மகேஷ்
இதனால் செய்வது அறியாமல் தவித்த ஆனந்தியும் மகேஷும் அன்புவின் உதவியை எதிர்பார்க்கின்றனர். ஆனந்தியை ஒரு நாள் மட்டும் அன்பு வீட்டில் தங்க வைக்குமாறு மகேஷ் கேட்டுக் கொள்கிறார். இந்த சமயத்தில் தனது அம்மாவும் தங்கையும் வெளியே சென்றிருப்பதால், ஆனந்தியை வீட்டில் தங்கவைக்க அன்பு சம்மதம் தெரிவிக்கிறார்.
பாசமாக பார்த்துக் கொள்ளும் அன்பு
பின், நடு இரவில் வீட்டிற்கு வந்த ஆனந்திக்கு அன்பு தோசை எல்லாம் சுட்டுக் கொடுத்து பாசமாக பார்த்துக் கொள்கிறார், பின் அவர் இரவு தூங்குவதற்கு தன்னுடைய அறையையும் தருகிறார். அடுத்த நாள் காலை விடிந்து பார்த்தால், ஆனந்தி வீட்டை தூய்மையாக மாற்றி, சாம்பிராணி எல்லாம் போட்டு அன்புவை அசத்தியுள்ளார், இந்த நிலையில் தான் வெளியூர் சென்றிருந்த அன்புவின் அம்மாவும் தங்கையும் வீட்டிற்கு வந்து அன்புவிற்கும் ஆனந்திக்கும் ஷாக் கொடுத்தனர்.
