ஆட்டையை கலைக்கும் அன்பு; மட்டையாவாரா மகேஷ்?.. அழகு ஆனந்தி யாருக்கு? சடுகுடு ஆடும் காதல்!- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி, அன்பை கொலை செய்ய முயற்சி நடந்தது. அதை அவர்கள் மகேஷிடம் கூற, அவன் அதிர்ச்சி அடைந்தான்

சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து இன்று வெளியான புரோமோவில், அன்பும், ஆனந்தியும் தங்களுக்கு நேர்ந்த கொலை முயற்சியை மகேஷிடம் எடுத்துக்கூறினர். இதைக்கேட்ட மகேஷ் அதிர்ச்சி அடைந்தான். இன்னொரு பக்கம் அன்பு வேலையை விட்டு கிளம்ப முடிவு எடுத்து, ராஜினாமா கடிதத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவனது மனசாட்சி அவன் முன் தோன்றி, நீ இப்போது இழப்பது வேலை மட்டுமல்ல, ஒரு பெண்ணுடைய மனதுதான் என்று எச்சரிக்கிறது. மற்றொரு பக்கம், ஆனந்தி அன்புவை நான் வேலையை விட்டு செல்ல விட மாட்டேன் என்று சொல்ல, அவனது நண்பன், அது நடக்கவே நடக்காது என்ற ரீதியில் சவால் விடுகிறான். ” இவை தொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.
நேற்று நடந்தது என்ன?
சிங்கப்பெண்ணே சீரியலில் நேற்றைய தினம், அன்பு அம்மாவின் பார்வையில் மண்ணைத்தூவி, ஆனந்தியை போர்வையை வைத்து மறைத்து, ஒரு வழியாக அவனது வீட்டில் இருந்து வெளியே கொண்டு வந்தான். ஆனாலும் அவனது அம்மாவிற்கும், தங்கைக்கும் இவன் ஏன் திடீரென்று இப்படி நடந்து கொள்கிறான் என்ற சந்தேகம் வந்தது. இருப்பினும், அவர்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.