தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அழகனைக் காண அலைந்து திரியும் ஆனந்தி.. முடிவுகட்ட நினைக்கும் மகேஷ்.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்

அழகனைக் காண அலைந்து திரியும் ஆனந்தி.. முடிவுகட்ட நினைக்கும் மகேஷ்.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்

Nov 08, 2024, 07:31 AM IST

google News
ஆட்டோக்காரர் கொடுத்த தகவலை அடுத்து தான் காதலித்த அழகன் யார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆனந்தி மிகவும் போராடி வருகிறார்.
ஆட்டோக்காரர் கொடுத்த தகவலை அடுத்து தான் காதலித்த அழகன் யார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆனந்தி மிகவும் போராடி வருகிறார்.

ஆட்டோக்காரர் கொடுத்த தகவலை அடுத்து தான் காதலித்த அழகன் யார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆனந்தி மிகவும் போராடி வருகிறார்.

அன்பு வீட்டில் தங்கி இருக்கும் ஆனந்தி, வெளியே சென்று கொண்டிருக்கும் சமயத்தில், ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆனந்தியிடம் அழகன் குறித்து தகவல் கொடுப்பார். மேலும் அவர், அழகனை சில நாட்களுக்கு முன் பார்த்ததாக கூறுவார். இதனால் ஆனந்தி எப்படியாவது அழகனை கண்டுபிடிக்க வேண்டும் என நினைப்பார்.

தேடுதல் வேட்டையில் இறங்கிய ஆனந்தி

இந்நிலையில், அழகன் குறித்த தகவல் கிடைத்ததால் ஆனந்தியால் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர் தொடர்பான இடங்களில் தேடி வருகிறார். இதை பற்றி எதுவும் தெரியாத அன்பு, ஆனந்தி வேலை செய்யும் கார்மெண்ட்லிற்கு சென்று ஆனந்தியைத் தடுக்க நினைக்கிறார். அப்போது தான் ஆனந்தி இன்று வேலைக்கே வரவில்லை என்பது அன்புவிற்கு தெரிந்தது.

அதற்குள்ளாக அழகன் குறித்த தகவல் மகேஷிற்கு கிடைக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், அழகன் யாராக இருந்தாலும் சரி அவனை நான் நாளைக்குள் கண்டுபிடிப்பேன் என முடிவெடுத்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

விழி பிதுங்கிய அன்பு

முன்னதாக, அழகன் குறித்து தகவலறிந்த ஆனந்தி, என்ன செய்வது என்று புரியாமல் அன்புவிற்கு போன் செய்துள்ளார். அப்போது, நான் சொல்வதைக் கேட்டு கோபப்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் பேசவே ஆரம்பிக்கிறார்.அப்போது, அவர் அழகன் குறித்து தான் கேள்விப்பட்ட அனைத்து விஷயங்களையும் அன்புவிடம் கூறினார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அன்பு விழி பிதுங்கி நின்றான்.

அதே சயமத்தில், மித்ரா கம்பெனியில் உள்ள லெட்டர் ஒன்றை கண்டுபிடித்து, அதிலுள்ள கையெழுத்தை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்க நினைக்கிறார். இதற்கு கருணாகரனை தனக்கு துணையாக வைக்க விரும்புகிறார். இதுகுறித்து இன்று சிங்கப்பெண்ணே சீரியலில் வரும் காட்சிகளின் தொகுப்பை ப்ரோமோவாக சன் டிவி வெளியிட்டுள்ளது.

அழகனாக மாறி ஆனந்தியை காதலித்த அன்பு

முன்னதாக, அழகன் என்ற பெயரில் ஆனந்தியிடம் போனில் பேசியும், பரிசுகள் கொடுத்தும் காதலித்து வந்தார் அன்பு. பின், தன்னைவிட மகேஷ் தான் ஆனந்திக்கு பொருத்தமானவர் என நினைத்து ஆனந்தியிடம் அழகனாக உங்களை ஏமாற்றியது நான் தான் என்பதை எவ்வளவு கூற நினைத்தும் முடியாமல் தவித்து வந்தார், இந்நிலையில், தற்போது ஆனந்தியே அன்புவைக் காதலிக்கும் நிலைக்கு வந்த பிறகு, அழகன் குறித்து ஆனந்தி பேசியதால் அன்புவிற்கு பதட்டம் ஏற்பட்டது.

மகேஷ் தான் ஆனந்திக்கு சரியானவர்

மகேஷின் பணபலமே ஆனந்தியை அவளது எல்லா கஷ்டங்களிலிருந்தும் காப்பாற்றும் என்று நம்பிய அன்பு, அதற்காக ஆனந்தியை மகேஷுக்கு விட்டுக் கொடுக்க துணிந்தான். இதையடுத்து அன்பின் மனசாட்சியான அழகன், அவன் முன் தோன்றி, நீ செய்வது மிக மிக தவறு என்று எச்சரிக்கிறது.

அன்புவைத் துரத்திய மனசாட்சி

ஆனாலும், தன்னுடைய மனசாட்சியுடன் வாக்குவாதம் செய்த அன்பு, மகேஷ் தான் ஆனந்திக்கு சரியாக இருப்பார் என்று சொன்னான். அதற்கு அழகன், மகேஷ் தரப்பிலிருந்து மட்டும் நீ யோசிக்கிறாயே, ஆனந்தி யாரை காதலிக்கிறாள் என்ற ரீதியில் நீ ஏன் யோசிக்க மறுக்கிறாய் என்று கேள்வி கேட்கிறது. அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அன்பு, நீ இங்கிருந்து செல்லவில்லை என்றால், கத்தியை எடுத்து நான் என்னை நானே குத்திக் கொள்வேன் என்று மிரட்ட, உன்னை பார்த்தால் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது என்று சொல்லி அழகன் அங்கிருந்து கிளம்பியது குறிப்பிடத்கக்கது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி