Singappenne Serial: அழகன் யார்? அன்புவிடம் மல்லுக்கு நிற்கும் ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியல்-singappenne serial today episode promo on september 26 2024 indicates anandhi want to know about azhagan - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singappenne Serial: அழகன் யார்? அன்புவிடம் மல்லுக்கு நிற்கும் ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியல்

Singappenne Serial: அழகன் யார்? அன்புவிடம் மல்லுக்கு நிற்கும் ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியல்

Aarthi Balaji HT Tamil
Sep 26, 2024 11:05 AM IST

Singappenne Serial: அன்புவை சந்திக்கும் ஆன்ந்தி, “ நான் நாளைக்கு உங்களுக்காக கம்பெனியில் காத்திருப்பேன். இவன் தான் அழகன் என்று என்னிடம் வந்து நீங்க சொல்ல வேண்டும் “ என கோபமாக பேசுகிறார்.

Singappenne Serial: அழகன் யார்? அன்புவிடம் மல்லுக்கு நிற்கும் ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியல்
Singappenne Serial: அழகன் யார்? அன்புவிடம் மல்லுக்கு நிற்கும் ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியல்

இந்த பக்கம் ஆனந்தி, “ யார் கிட்ட கேட்டா, அழகனை பற்றி தெரிய வரும் என்பது எனக்கு தெரியும். அதை கண்டு பிடித்து நான் அழைத்து வந்து உங்கள் முன்பாக நிற்க வைக்கிறேன் “ என தனது தோழிகளிடம் அழுது கொண்டே பேசி வருகிறார்.

அழகன் யார்

இரவு அன்புவை சந்திக்கும் ஆன்ந்தி, “ நான் நாளைக்கு உங்களுக்காக கம்பெனியில் காத்திருப்பேன். இவன் தான் அழகன் என்று என்னிடம் வந்து நீங்க சொல்ல வேண்டும் “ என கோபமாக பேசுகிறார்.

இத்தகைய நிகழ்வுகள் இன்றைய ( அக். 26 ) புரோமோவில் இடம் பெற்று இருக்கின்றன. விரிவாக என்ன நடக்கும் என்பதை இன்று இரவு 9 மணிக்கு சன் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

நேற்றைய எபிசோட்

சிங்கப்பெண்ணே சீரியலின் நேற்றைய ( அக். 24 ) எபிசோட்டில் தங்களது சொந்த நிலத்தை மீட்க உதவிய அன்புவை பற்றி ஆனந்தி மிகவும் உயர்வாக தன்னுடன் வேலை பார்க்கும் ஜெயந்தி மற்றும் முத்துவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் பணத்தை தான் கொடுத்து உதவவில்லை மகேஷ் தான் கொடுத்தார் என்று சொல்ல முடியாமல் குற்ற உணர்ச்சியில் இருக்கிறார் அன்பு.

அந்த நேரம் என்று பார்த்து உஷா அக்கா அங்கே வந்து நீங்க எல்லாரும் வேலை செய்யாமல் என்ன பேசி கொண்டு இருக்கீங்க என கேட்டு சத்தம் போட்டார். இதனால் கடுப்பான முத்து, அவரிடம் சண்டைக்கு நின்றார்.

அன்பு vs மகேஷ்

மற்றொரு பக்கம் அன்புவை அழைத்து மகேஷ், " என் காதலை ஆனந்தி புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவள் மனதிற்குள் இருக்கும் அழகன் அழிய வேண்டும். அதை உன்னால் மட்டுமே செய்ய முடியும் அன்பு. என்ன செய்தாலும், எவ்வளவு நடந்தாலும் அந்த அழனை, ஆனந்தி மறக்கவே இல்லை. 

10 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி

நான் தான் 10 லட்சம் ரூபாய் கொடுத்து உதவினேன், அழகன் ஏன் அப்போது வரவில்லை. ஆனந்தி வீட்டில் இருக்கும் பிரச்னைகளை தீர்க்க என்னால் மட்டுமே முடியும் “ என சொல்கிறார். அதற்கு பிறகு தான் ஆனந்திக்கு தான் சரியானவன் இல்லை என்பது புரிந்து கொள்கிறார் அன்பு.

உணவு இடைவேளை முடித்த பிறகு அன்பு மற்றும் ஆனந்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆனந்தி , " அழகன் யார் அவனை இன்றாவது நான் பார்க்கலாமா? " என்று கேட்டார். இதனால் கடுப்பான அன்பு, " இனிமேல் அழகன் வரமாட்டான். அவன் செத்துப் போய் விட்டான் " என்று கோபமாக சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார். ஆனந்தி அதிர்ச்சி அடைந்து நின்றார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.