மீண்டும் வந்த அழகன்.. விழி பிதுங்கும் அன்பு.. சதித்திட்டம் தீட்டும் மித்ரா.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்
தான் காதலித்த அழகன் குறித்த தகவல் தெரியவந்துள்ளதாக ஆனந்தி அன்பவிடம் கூறி அன்புவை விழி பிதுங்கச் செய்துள்ளார்.
ஹாஸ்டலை விட்டு வெளியேற்றப்பட்ட ஆனந்தி, அன்பு வீட்டில் தங்கி இருந்து தனது சின்னச் சின்ன ஆசைகளையும் அன்பு மூலம் நிறைவேற்றிக் கொண்டு மிகவும் சந்தோஷமாக இருக்கிறாள். அன்பு குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட நினைத்த ஆனந்தி, அன்புவின் தங்கை யமுனாவின் உதவியோடு முஸ்லீம் பெண்ணாத மாறி அன்பு வீட்டிற்குள் நுழைவார்.
அழகன் குறித்து தெரிந்து கொள்ளும் ஆனந்தி
இந்நிலையில், ஆட்டோவில் வெளியே சென்று கொண்டிருக்கும் ஆனந்தியடம், ஆட்டோ டிரைவர் அழகன் குறித்த தகவலைத் தருவார். அவர், அழகனை சில நாட்களுக்கு முன் பார்த்ததாக கூறுவார். இதைக்கேட்ட ஆனந்தி, என்ன செய்வது என்று புரியாமல் அன்புவிற்கு போன் செய்துள்ளார். அப்போது, நான் சொல்வதைக் கேட்டு கோபப்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் பேசவே ஆரம்பிக்கிறார்.
விழி பிதுங்கிய அன்பு
அப்போது, அவர் அழகன் குறித்து தான் கேள்விப்பட்ட அனைத்து விஷயங்களையும் அன்புவிடம் கூறினார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அன்பு விழி பிதுங்கி நின்றான்.
அதே சயமத்தில், மித்ரா கம்பெனியில் உள்ள லெட்டர் ஒன்றை கண்டுபிடித்து, அதிலுள்ள கையெழுத்தை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்க நினைக்கிறார். இதற்கு கருணாகரனை தனக்கு துணையாக வைக்க விரும்புகிறார். இதுகுறித்து இன்று சிங்கப்பெண்ணே சீரியலில் வரும் காட்சிகளின் தொகுப்பை ப்ரோமோவாக சன் டிவி வெளியிட்டுள்ளது.
அழகனாக மாறி ஆனந்தியை காதலித்த அன்பு
முன்னதாக, அழகன் என்ற பெயரில் ஆனந்தியிடம் போனில் பேசியும், பரிசுகள் கொடுத்தும் காதலித்து வந்தார் அன்பு. பின், தன்னைவிட மகேஷ் தான் ஆனந்திக்கு பொருத்தமானவர் என நினைத்து ஆனந்தியிடம் அழகனாக உங்களை ஏமாற்றியது நான் தான் என்பதை எவ்வளவு கூற நினைத்தும் முடியாமல் தவித்து வந்தார், இந்நிலையில், தற்போது ஆனந்தியே அன்புவைக் காதலிக்கும் நிலைக்கு வந்த பிறகு, அழகன் குறித்து ஆனந்தி பேசியதால் அன்புவிற்கு பதட்டம் ஏற்பட்டது.
மகஷே ஆனந்திக்கு சரியானவர்
மகேஷின் பணபலமே ஆனந்தியை அவளது எல்லா கஷ்டங்களிலிருந்தும் காப்பாற்றும் என்று நம்பிய அன்பு, அதற்காக ஆனந்தியை மகேஷுக்கு விட்டுக் கொடுக்க துணிந்தான். இதையடுத்து அன்பின் மனசாட்சியான அழகன், அவன் முன் தோன்றி, நீ செய்வது மிக மிக தவறு என்று எச்சரிக்கிறது.
அன்பை துரத்திய மனசாட்சி
ஆனாலும், தன்னுடைய மனசாட்சியுடன் வாக்குவாதம் செய்த அன்பு, மகேஷ் தான் ஆனந்திக்கு சரியாக இருப்பார் என்று சொன்னான். அதற்கு அழகன், மகேஷ் தரப்பிலிருந்து மட்டும் நீ யோசிக்கிறாயே, ஆனந்தி யாரை காதலிக்கிறாள் என்ற ரீதியில் நீ ஏன் யோசிக்க மறுக்கிறாய் என்று கேள்வி கேட்கிறது. அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அன்பு, நீ இங்கிருந்து செல்லவில்லை என்றால், கத்தியை எடுத்து நான் என்னை நானே குத்திக் கொள்வேன் என்று மிரட்ட, உன்னை பார்த்தால் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது என்று சொல்லி அழகன் அங்கிருந்து கிளம்பியது குறிப்பிடத்கக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்