தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Shah Rukh Khan Atlee Jawan 10 Sec Clip Leaked

Jawan: அதகள ஆக்சன்.. லீக் ஆன ஷாருக்கான் ஜவான் காட்சி.. அதிர்ச்சியில் படக்குழு!

Mar 11, 2023, 11:47 AM IST

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் ஆக்சன் காட்சி சம்பந்தமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் ஆக்சன் காட்சி சம்பந்தமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் ஆக்சன் காட்சி சம்பந்தமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

4 வருட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் குடியரசு தின பரிசாக வெளியான திரைப்படம் ‘பதான்’. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் உலகம் முழுக்க 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Vj Archana on Prachi Nigam: ‘கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லையா.. 10ம் வகுப்பு பொண்ண போய்’ - வி.ஜே.அர்ச்சனா!

Varalaxmi Sarathkumar: ‘எங்க அப்பாவே அப்படித்தான்; செகண்ட் ஹேண்ட் பைக்க ஓட்ட மாட்டீங்களா?’ - பச்சையாக கேட்ட வரலட்சுமி!

Rathnam Box Office: ஆக்‌ஷன் அலப்பறை.. விஷாலுக்கு வெற்றி வந்ததா? - ரத்னம் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Nayanthara: உடைத்து வெளியே வரும் இயல்பான விஷயமா.. நயன்தாரா கதாபாத்திர தேர்வு பின்னணி என்ன?

ஷாருக்கான் தற்போது பிரபல இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ கடந்த வருடம் வெளியாகி வரவேற்பை பெற்றது. வருகிற ஜூன் மாதம் 2 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் வெளியான வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஷாருக்கானின் ஆக்சன் சம்பந்தமான காட்சி இடம் பெற்றுள்ளது. ஜவான் படத்தில் ஷாருக்கானின் ஜோடியாக நடிகை நயன் தாரா நடித்துள்ளார். இதில் முக்கிய வில்லனாக விஜய் சேதுபதியும், காமெடி வேடத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் மூலமாக அனிருத், இசையமைப்பாளராக பாலிவுட் திரை உலகில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

ஷாருக்கான் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாகவும் அதில் ஒரு கதாபாத்திரம் ராணுவ அதிகாரி என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இதில் தீபிகா படுகோனும் மற்றொரு நடிகையாக நடிப்பதாக கூறப்படுகிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.