தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vj Archana On Prachi Nigam: ‘கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லையா.. 10ம் வகுப்பு பொண்ண போய்’ - வி.ஜே.அர்ச்சனா!

Vj Archana on Prachi Nigam: ‘கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லையா.. 10ம் வகுப்பு பொண்ண போய்’ - வி.ஜே.அர்ச்சனா!

Apr 28, 2024, 06:47 PM IST

எனக்கு அப்படி அல்ல. எனக்கு வெற்றிதான் முக்கியம். என் உருவத்தை வைத்து, என் ஆசிரியர்களோ, சக மாணவர்களோ ஒரு போதும் என்னை கேலி செய்தது இல்லை. நானும் இதைப் பற்றி ஒருநாளும் கவலைப்பட்டதும் இல்லை
எனக்கு அப்படி அல்ல. எனக்கு வெற்றிதான் முக்கியம். என் உருவத்தை வைத்து, என் ஆசிரியர்களோ, சக மாணவர்களோ ஒரு போதும் என்னை கேலி செய்தது இல்லை. நானும் இதைப் பற்றி ஒருநாளும் கவலைப்பட்டதும் இல்லை

எனக்கு அப்படி அல்ல. எனக்கு வெற்றிதான் முக்கியம். என் உருவத்தை வைத்து, என் ஆசிரியர்களோ, சக மாணவர்களோ ஒரு போதும் என்னை கேலி செய்தது இல்லை. நானும் இதைப் பற்றி ஒருநாளும் கவலைப்பட்டதும் இல்லை

உத்திரபிரதேச மாநிலத்தின் சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியான 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், இவர் தன்னுடைய கடின உழைப்பால் 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். ஆனால் அவரது சாதனை அவரது தோற்றத்தால் மழுங்கடிக்கப்பட்டு விட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Salman Khan: மான் வேட்டை விவகாரம்; மன்னிப்புக்கேட்ட முன்னாள் காதலி; ‘மான கொன்னது சல்மான் அதனால அவன்தான்-பிஷ்னோய் சமூகம்

Saindhavi Prakash: ‘எல்லா நேரமும் அப்படியே இருக்க முடியாது.. நானும் மனுஷிதானே.. எனக்கும் வலிக்கும்..’ - சைந்தவி பேட்டி

Karthigai Deepam: ‘ரம்யா காதலனாக மாறும் கார்த்திக்.. விவரம் தெரியாமல் விளையாடும் தீபா’ - கார்த்திகை தீபம் அப்டேட்

Radikaa Sarathkumar : ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்தலயா? சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை வெளுத்து வாங்கிய ராதிகா

ஆம், அவரின் உருவத்தை பார்த்த நெட்டிசன்கள், அவரை கடுமையாக ட்ரோல் செய்தனர். இதற்கு பதிலடி கொடுத்த அவர், இப்படி கிண்டல் செய்வது, ட்ரோல் செய்வதை மட்டுமே சிலர் முழுநேர தொழிலாக வைத்திருக்கின்றனர். 

எனக்கு அப்படி அல்ல. எனக்கு வெற்றிதான் முக்கியம். என் உருவத்தை வைத்து, என் ஆசிரியர்களோ, சக மாணவர்களோ ஒரு போதும் என்னை கேலி செய்தது இல்லை. நானும் இதைப் பற்றி ஒருநாளும் கவலைப்பட்டதும் இல்லை” என்றார். 

இந்த நிலையில அவருக்கு ஆதரவாக பிக்பாஸ் விஜே அர்ச்சனா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “என்னுடைய கடந்த இன்ஸ்டா ஸ்டோரியை அனைவரும் பார்த்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அதை பார்க்கும் பொழுது, உண்மையில் எனது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 

பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த ஒரு மாணவி, இனிமேல்தான் அவர் உலகத்தையே பார்க்கப் போகிறார். இனிதான் அவர் கல்லூரி செல்ல வேண்டும். அடுத்தடுத்த விஷயங்களை செய்ய, அவர் தயாராக வேண்டும். 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தும் கூட, தன்னுடைய தோற்றத்தின் காரணமாக அவரின் புகழ் மறைக்கப்பட்டு இருக்கிறது. 

இது உண்மையில் அனுமதிக்கவே முடியாதது. அந்த பெண்ணிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் தற்போது எதையெல்லாம் கடந்து வருகிறாரோ என்று எனக்குத் தெரியவில்லை. நாம் நம்முடைய கருத்துரிமையை வெளிப்படுத்துவதில் சில அடிப்படை விதிகள் இருக்கின்றன. 

அதில், சரியானவற்றை பேசியே ஆக வேண்டும் என்பதும் இருக்கிறது. சரியானவற்றை பேசி ஆக வேண்டும் என்பது ஏன் அடிப்படை விதிகளில் இருக்கிறது என்றால், மக்களுக்கு அநீதி நடக்கும் பொழுது, அதை எதிர்த்து குரல் கொடுக்கும் அந்த உரிமை தேவை என்பதற்காக. 

அதனால்தான், அது அந்த அடிப்படை விதிகளில் இருக்கிறது. ஆனால், அதை நாம் எங்கு அநியாயம் நடக்கிறதோ, அங்கு அதனை பெரிதாக பயன்படுத்துவது கிடையாது. இங்கு ஒரு சிறிய பெண், உத்தரப்பிரதேசத்தில் மாநில அளவில் 10 -ம் வகுப்பில் முதலிடம் பெற்றிருக்கிறார்.

ஆனால், நம் கண்ணுக்குத் தெரிவது அந்த பெண்ணுடைய முகத்தோற்றம். சைபர் புல்லிங் என்பது மிகவும் சீரியஸாக மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் அதனுடைய வீரியம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. 

கண்டிப்பாக, இதற்கு ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். ஒவ்வொரு முறையும் சைபர் கிரைம் போலீசாரிடம் சென்று எனக்கு இதுபோல ஆகிவிட்டது, நடந்து விட்டது என்று சொல்லி புகார் சொல்லிக் கொண்டே இருக்க முடியாது. 

அப்படி செய்தால், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1000 புகார்கள் சைபர் கிரைம் போலீசாருக்கு செல்லும். ஆகையால் சரியான சட்டம் ஏற்ற வேண்டும் என்பதுதான் இதற்கான தீர்வாக இருக்கும் என்பதை நான் நம்புகிறேன். 

அதுதான் என்னுடைய கண்களுக்கு தெரிகிறது. அதைத் தாண்டி வேறு எதுவும் தற்போது எனக்கு தெரியவில்லை. நான் உண்மையில் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள். நான் இதை நினைத்து மிகவும் அசிங்கப்படுகிறேன்.” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி