சத்யராஜ் - கவுண்டமணி காம்போவின் தெறி காமெடி..சூனா பானாவாக வடிவேலு கலக்கல் - தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்ட்
Dec 02, 2024, 06:33 AM IST
சத்யராஜ் - கவுண்டமணி காம்போவின் தெறி காமெடி, சூனா பானாவாக வடிவேலு கலக்கல், விக்ரம் கேரியரில் திருப்புமுனை, வட சென்னை வாழ்க்கையை கூறிய மோகன் ஜியின் படம் உள்பட தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்டை பார்க்கலாம்
தமிழில் டிசம்பர் 2ஆம் தேதியான இன்று பெரிய ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்களை கவர்ந்து ஹிட்டான படங்களும், விமர்சகரீதியாக பாராட்டுகளை பெற்ற படங்களும் வந்துள்ளன. அந்த வகையில் தமிழில் இன்று வெளியான படங்களின் லிஸ்டை பார்க்கலாம்
வீரக்கனல்
ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி, எம். சரோஜா பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க ஜி.கே. ராமு இயக்கத்தில் வெளியான வரலாற்று ஆக்ஷன் திரைப்படம் வீரக்கனல். கே.ஏ. தங்கவேலு, பி.எஸ். வீராப்பா, எம்.என். நம்பியார் உள்பட பலரும் நடித்தில் நடித்துள்ளார். 1960இல் வெளியான இந்த படம் கத்தி சண்டை காட்சிகள், பிரமிக்க வைக்கும் காஸ்ட்யூம், நடனம் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கமர்ஷியல் படமாக இருந்தது. ஜெமினி கணேசனுக்கு ஹிட் படமாக அமைந்த வீரக்கனல் வெளியாக இன்றுடன் 74 ஆண்டுகள் ஆகிறது
சகாதேவன் மகாதேவன்
மறைந்த இயக்குநர் ராமநாரயணன் இயக்கத்தில் மோகன், எஸ்.வி.சேகர், பல்லவி, மாதுரி, எஸ்.எஸ். சந்திரன், கோவை சரளா உள்பட பலர் நடித்திருந்த இந்த படம் காமெடி படமாக 1988இல் வெளியானது. வேலை இல்லாத இளைஞர்கள் பிழைப்பு தேடி நகரத்துக்கு வருவதும் அங்கு அவர்கள் ஒரு பிரச்னையில் சிக்கி தப்பிப்பதையும் நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள். வயிறு குலுங்கு சிரிக்க வைத்த ரசிகர்கள் கவர்ந்த தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி படமாக திகழும் சகாதேவன் மகாதேவன் படம் வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகள் ஆகிறது
பறவைகள் பலவிதம்
இரட்டை இயக்குநர்களான ராபர்ட்-ராஜசேகர் இயக்கத்தில் ராம்கி - நிரேஷா நடிப்பில் வெளியான மசாலா திரைப்படம் பறவைகள் பலவிதம். படத்தில் ஜனகராஜ் காமெடி பெரிதாக அந்த காலகட்டத்தில் பேசப்பட்டது. இந்த படத்தின் பாடல்களுக்கு இசையை எஸ்.ஏ. ராஜ்குமார் அமைந்திருந்த நிலையில், பின்னணி இசையை வித்யாசாகர் அமைத்தார். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படமாக பறவைகள் பலவிதம் இருந்தது.
புதிய மன்னர்கள்
விக்ரம், மோகனி, பாபு கணேஷ், விவேக், ப்ருத்விராஜ், ஸ்ரீமன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் அரசியல் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்தது. விக்ரமன் இயக்கியிருந்த புதிய மன்னர்கள் 1994இல் வெளியான நிலையில், அரசியலில் நுழைத்து மாற்றம் செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கு அரசியல்வாதிகளால் ஏற்படும் தொல்லைகளும், அதில் இருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையும் சொல்லும் விதமாக படம் இருக்கும். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் படத்தில் பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. இந்த படத்தில் நடிக்கும்போது தான் மணிரத்னம் தனது பம்பாய் படத்தில் நடிப்பதற்காக விக்ரமை கேட்டுள்ளார். புதிய மன்னர்கள் படத்துக்காக நீண்ட தலைமுடி வளர்த்து இருந்ததால் பம்பாய் படத்தை மிஸ் செய்தார் விக்ரம். அத்துடன் புதிய மன்னர்கள் படமும் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றாலும் சராசரியாகவே ஓடியது. விக்ரம் கேரியரில் ஏமாற்றமாக அமைந்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது.
மாமன் மகள்
சத்யராஜ், மீனா, கவுண்டமணி, மணிவண்ணன், ஜெயச்சித்ரா உள்பட பலர் நடிக்க குரு தனபால் இயக்கத்தில் ரெமான்டிக் காமெடி படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம் மாமன் மகள். படத்தில் சத்யராஜ் - கவுண்டமணி - மணிவண்ணன் காம்போ காமெடி ரசிகர்களின் வயிற்றை புண்ணாக்கும் விதமாக அமைந்திருந்தன. ஜெயச்சித்ரா வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆதித்யன் இசையில் படத்தின் பாடல்களும் ஹிட்டாகின. 1995இல் வெளியான இந்த படம் சத்யாராஜுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்ததுடன் சிறந்த பொழுதுபோக்கு படமாகவும் உள்ளது
கண்ணாத்தாள்
கரண், நீனா, வடிவேலு, வடிவுக்கரசி, மணிவண்ணன், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்த பக்தி திரைப்படம் கண்ணாத்தாள். படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப தமிழில் வந்த அம்மன் படமாக இருக்கும் இதில் நீனா, கண்ணாத்தாள் கதாபாத்திரத்திலும், கரண் வில்லனாகவும் நடித்திருப்பார்கள். வடிவேலுவின் பட்டையை கிளப்பும் காமெடிகளில் ஒன்றான சூனா பானா காமெடி இந்த படத்தில் தான் இடம்பிடித்துள்ளது. இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. 1998இல் வெளியான இந்த படம் அம்மன் படங்களுக்கே உண்டான வழக்கமான கதையம்சத்தில் உருவாகியிருந்தாலும் பல்வேறு திருப்பங்கள் தரும் விதமாக இருக்கும் திரைக்கதை ரசிகர்களை கவர்ந்து, படமும் ஹிட்டாகியது. கிராமத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தமிழ் சினிமாவின் சிறந்த பக்தி படமாக இருந்து வரும் கண்ணாத்தாள் வெளியாகி 26 ஆண்டுகள் ஆகிறது.
பழைய வண்ணார்பேட்டை
அரசியல் ட்ராமா பாணியில் உருவாகியிருந்த பழைய வண்ணார்பேட்டை படத்தை துரெபதி, பாகாசூரன் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கியுள்ளார். சன் மியூசிக் தொகுப்பாளராக நன்கு அறியப்பட்ட பிரஜின், ரிச்சார்டு, கருணாஸ், ரோபோ ஷங்கற், ஆஷ்மிதா உள்பட பலர் நடித்திருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. வட சென்னை மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்த தமிழ் சினிமாக்களின் ஒன்றாக இருந்து வரும் பழைய வண்ணார் பேட்டை படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் ஆகிறது
மாவீரன் கிட்டு
சுசீந்திரன் இயக்கத்தில் ஆர். பாத்திபன், விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ஹரீஷ் உத்தமன் உள்பட பலர் நடித்த பீரியட் ஆக்ஷன் ட்ராமா பாணியில் 2016இல் வெளியான படம் மாவீரன் கிட்டு. தலித் மக்களின் உரிமைக்காக போராடும் நாயகனின் வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு சம்பவங்களையும், திருப்பங்களையும் சொல்லும் படமாக மாவீரன் கிட்டு இருந்தது. விறுப்பான திரைக்கதை அமசத்துடன் உருவாகியிருந்த போதிலும் கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த படம் சராசரி ஹிட் படமாக மாறியது. இந்த படத்தின் மூலம் பிரபல பாடலாசிரியரான யுகபாரதி, வசனகர்த்தவானார்.
டாபிக்ஸ்