Annamalai: ’பாத யாத்திரையால் அண்ணாமலைக்கு சுகர் குறையும்!’ பாஜகவின் எஸ்.வி.சேகர் கிண்டல்!
”En Mann En Makkal Yatra: கூட்டமாக இருக்கும் இடத்தில் போட்டோ எடுத்துக் கொண்டால் ஓட்டாக மாறிவிடுமா?”
நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். அதற்கு வாழ்த்துகள். ஆனால் அதற்கு மேல் இப்போது விமர்சிக்க வாய்ப்பு இல்லை. அவரே இரண்டு ஆண்டுகள் டைம் கேட்டு உள்ளார். கொடி, சின்னம், கொள்கைகளை அவர் அறிவிக்கவில்லை. ஆனால் அரசியலுக்கு வருகிறேன் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
நடிகர் விஜய் அவர்கள் ரசிகர் மன்ற கட்டமைப்பை மிக சிறப்பாக வைத்துள்ளார். அதற்கு காரணம் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள்தான். இப்போது அந்த கட்டமைப்பை அரசியல் கட்டமைப்பாக மாற்ற வேண்டும். ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்பதற்காகவே அதனை எதிர்ப்பது நமக்கு பயம் இருப்பது போன்று இருக்கும், விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறும் என அண்ணமலை கூறி உள்ளது குறித்த கேள்விக்கு, அண்ணாமலை ஆயிரம் சொல்லுவார். அவர் போலீஸ், அரசியலுக்கு புதுசு, தினமும் திருடர்களுடன் பழகி பழகி பொய் சொல்ல கற்றுக் கொண்டார். தேர்தல் என்பதே கூட்டணி பலம்தான். 4 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை வாக்கு வங்கி உள்ள கட்சி தனியாக ஜெயிக்க வேண்டும் என்றால் அனுதாப அலை வீசுவது போன்ற சம்பவம் ஏதாவது நடந்தால்தான் உண்டு. அதுபோன்ற சம்பவத்தை ஏதாவது அவர் எதிர்பார்க்கிறாரா என்று தெரியவில்லை.
அண்ணாமலை மக்களை மட்டுமல்ல, டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களையும் ஏமாற்றிக் கொண்டு வருகிறார். அண்ணாமலையின் பாதயாத்திரை என்ன கைக்கொடுக்கும், அவருக்கு சுகர் இருந்தால் குறையும். ஆனால் அதுவும் ஒரு கிலோமீட்டர்தான் நடக்கிறார். கூட்டமாக இருக்கும் இடத்தில் போட்டோ எடுத்துக் கொண்டால் ஓட்டாக மாறிவிடுமா? அதெல்லாம் எதுவும் மாறாது.
மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி அவர்கள் மீண்டும் ஆட்சியில் அமர்வார். பாஜக கூட்டணியில் அதிமுக இல்லாதது பலவீனம்தான். ஈபிஎஸ் அவர்கள் அதிமுகவை ஒருங்கிணைக்கும் வேலைகளை செய்து வருகிறார். அண்ணாமலை உள்நோக்கத்துடன் வேலை செய்கிறாரே தவிர பாஜகவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை.
கொங்கு மண்டலத்தில் ஈபிஎஸை விட பெரிய ஆளாக காட்டிக்கொள்ள வேண்டும் என அவர் நினைக்கிறார். அந்த எண்ணத்தில் மண்ணு விழும்.
பாஜகவின் தேர்தல் வியூகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு வேறு மாதிரி இருந்தாலும், வட இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி இருக்கும். தமிழ்நாட்டில் அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் முயற்சியில்தான் உள்ளாரே தவிர, மோடி அவர்களின் புகழை கொண்டு செல்லவில்லை.
ஒரு கட்சி தேர்தலில் வெல்ல வேண்டும் என்றால் பூத் கமிட்டி முக்கியம். 10 ஆயிரம் பூத் கமிட்டி கூட இல்லாத நிலையில் கட்சியை அண்ணாமலை வைத்துள்ளார். பாஜக என்பது மிகவும் பலம் பொருந்திய கட்சி, ஆனால் அங்கு திருட்டு வீடியோ எடுத்துக் கொண்டு அடுத்தவர் பலகீனங்களை ஆடியோ எடுப்பது உள்ளிட்டவை நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இது எந்த விதமான வாக்கு வங்கியையும் உருவாக்காது.
டாபிக்ஸ்