Simbu Marriage: மறுபடியுமா.. நடிகையுடன் ரிலேஷன் ஷிப்பில் இருக்கும் சிம்பு? - திருமணம் எப்போது?
Sep 26, 2024, 03:09 PM IST
Simbu Marriage: சிம்புவுக்கும், நடிகை நிதி அகர்வாலுக்கும் திருமணம் நடக்க போவதாக வதந்திகள் பரவி வருகிறது.
Simbu Marriage: சிம்பு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவானார் .
அதன் பிறகு சில வெற்றிப் படங்களை கொடுத்த சிம்பு , பல சர்ச்சைகள், எதிர்மறை விமர்சனங்களுக்குப் பிறகு இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் .
மாஸான ரீ - எண்டரி
கிட்டத்தட்ட முப்பது கிலோ எடையை குறைத்துவிட்டு ரீ- எண்டரி கொடுத்தார், மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். கடைசியாக இவர் நடித்த பத்து தல படம் ரசிகர்களிடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடித்து உள்ளார். இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் சிம்புவுக்கு பெரிய பக்க பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
41 கடந்தும் திருமணம் செய்யவில்லை
இருப்பினும், 41 வயதாகும் சிம்பு இன்னும் திருமணமாகாமல் தனிமையில் இருக்கிறார். இதன் காரணமாக அவரது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன .
சிம்பு திருமணம்
இதனிடையே பல பிரச்னைகள், சர்ச்சைகள் வந்து கொண்டிருந்த நேரத்தில் சிம்புவின் பெற்றோர் ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் சிம்புவுக்கு திருமணத்திற்காக வரன் தேடி வருகிறார்கள்.
நடிகையுடன் ரிலேஷன் ஷிப்
சிம்புவுக்கும், நடிகை நிதி அகர்வாலுக்கும் திருமணம் நடக்க போவதாக வதந்திகள் பரவி வருகிறது. இருவரும் சில காலமாக லிவ் - இன் ரிலேஷன் ஷிப்பில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். விரைவில் இது தொடர்பாக சிம்பு தரப்பினர் அல்லது நிதி அகர்வால் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பரவிய வதந்தி
இவர்களது திருமணம் குறித்த செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளியானது. அப்போதும் இருவரும் இதற்கு பதிலளிக்கவில்லை.
முன்னதாக தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரின் மகளை, சிம்பு திருமணம் செய்ய இருப்பதாகவும் , அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது . இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி திரையுலக ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறி இருந்தது.
சிம்புவுக்கும், தெலுங்கு சினிமா நடிகரின் மகளுக்கு திருமணம் என பரவி வந்த செய்தி முற்றிலும் வதந்தி என அவர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு கூட சிம்பு இலங்கையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகின.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்