Simbu: ஆந்திரா, தெலங்கானா மக்களை மகிழ்வித்த சிம்பு! முதல் தமிழ் நடிகராக வெள்ள நிவாரண நிதி..எவ்வளவு தெரியுமா?-simbu turn to be first actor donating flood relief fund for andra and telanaga state - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Simbu: ஆந்திரா, தெலங்கானா மக்களை மகிழ்வித்த சிம்பு! முதல் தமிழ் நடிகராக வெள்ள நிவாரண நிதி..எவ்வளவு தெரியுமா?

Simbu: ஆந்திரா, தெலங்கானா மக்களை மகிழ்வித்த சிம்பு! முதல் தமிழ் நடிகராக வெள்ள நிவாரண நிதி..எவ்வளவு தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 11, 2024 05:50 PM IST

Simbu: ஆந்திரா, தெலங்கானா மக்களை மகிழ்வித்த சிம்பு, முதல் தமிழ் நடிகராக வெள்ள நிவாரண நிதியை இரு மாநிலங்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். தமிழ் முன்னணி நடிகர்கள் வேறு யாரும் தெலுங்கு மாநிலங்களின் வெள்ளத்துக்கு உதவிடாத நிலையில், சிம்பு செய்திருக்கும் உதவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Simbu: ஆந்திரா, தெலங்கானா மக்களை மகிழ்வித்த சிம்பு! முதல் தமிழ் நடிகராக வெள்ள நிவாரண நிதி..எவ்வளவு தெரியுமா?
Simbu: ஆந்திரா, தெலங்கானா மக்களை மகிழ்வித்த சிம்பு! முதல் தமிழ் நடிகராக வெள்ள நிவாரண நிதி..எவ்வளவு தெரியுமா?

இதையடுத்து ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதி அளித்துள்ளார்.

சிம்பு நிவாரண நிதி

கடந்த மாதம் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலம் பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் வெள்ள நிவாரண நிதியாக பெரும் தொகையை அளித்தனர்.

இதைத்தொடர்ந்து கோலிவுட் நடிகரரான சிம்பு, இரு மாநிலங்களுக்கான வெள்ள நிவாரண நிதியாக ரூ. 6 லட்சம் வழங்கியுள்ளார். சிம்புவின் இந்த செயலால் தெலுங்கு சினிமா ரசிகர்கள், பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஆந்திரா, தெலங்கானா வெள்ளம்

ஆந்திர பிரதேசத்தில் மட்டும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ள நீரில் சிக்கி அன்றாட வாழ்க்கை வாழ முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகினர்.

குறிப்பாக ஆந்திராவின் முக்கிய நகரமாக கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்திருக்கும் விஜயவாடாவில் நாலாபுறமும் வெள்ள நீர் சூழ்ந்தது. தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில அரசு இணைந்து நிவாரண பணிகளை மேற்கொண்டதுடன், வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களையும் பத்திரமாக மீட்டனர்.

வெள்ள பாதிப்பு காரணமாக ஆந்திரா, தெலங்கானாவில் சில நாள்கள் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. அங்குள்ள பல்வேறு அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

சிம்பு புதிய படம்

கடைசியாக சிம்பு நடிப்பில் பத்துதல திரைப்படம் கடந்த ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கி வரும் தக் ஃலைப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து வருகிறார் சிம்பு. இது தவிர கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை STR 48 என அழைத்து வருகிறார்கள்.

இதேபோல் சிம்பு - கெளதம் மேனன் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு லேட்டஸ்ட் பேச்சு

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, " நம்மோடு உடன் இருப்பவர்கள் நம்மை விட்டு போய் சென்றுவிடுவார்கள். கூடவே இருப்பது உடம்பு மட்டும்தான். உடம்பை சரியாக வைத்து கொள்ள வேண்டும். அது எனக்கு தாமதமாக தான் புரிந்தது.

எனவே உங்கள் உடம்பை விட்டுவிடாதீர்கள். பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார்.

41 வயதாகும் சிம்பு தமிழ் சினிமாவில் அதிக வயதாகும் பேச்சிலராக இருந்து வருகிறார். அவரது திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் வெளியான வண்ணம் இருந்தாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார். சிம்புவின் தங்கை, சகோதரர் ஆகியோர் திருமணமாகி குழந்தைகளுக்கு பெற்றோர்களாக இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.