தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Simbhu: கோலிவுட்டில் தலையெடுத்த புதிய ட்ரெண்ட்! சிவகார்த்திகேயனை பின்தொடர்ந்த சிம்பு - தக்லைஃப் குழு ஹேப்பி

Actor Simbhu: கோலிவுட்டில் தலையெடுத்த புதிய ட்ரெண்ட்! சிவகார்த்திகேயனை பின்தொடர்ந்த சிம்பு - தக்லைஃப் குழு ஹேப்பி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 05, 2024 04:59 PM IST

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை பின்தொடர்ந்து நடிகர் சிம்பு, தக்லைஃப் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்துள்ளார். டெக்னீஷியன்களுக்கு செட்டில் வைத்து பிரியாணி விருந்து வைப்பது கோலிவுட்டில் புதிய ட்ரெண்ட் ஆக தலையெடுத்துள்ளது. சிம்புவின் ட்ரீட்டால் தக்லைஃப் குழு ஹேப்பி ஆகியுள்ளது.

சிவகார்த்திகேயனை பின்தொடர்ந்த சிம்பு, தக்லைஃப் குழு ஹேப்பி
சிவகார்த்திகேயனை பின்தொடர்ந்த சிம்பு, தக்லைஃப் குழு ஹேப்பி

ட்ரெண்டிங் செய்திகள்

த்ரிஷா, சான்யா மல்கோத்ரா,ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்பட பலரும் படத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் முறையாக கமல்ஹாசன் - சிம்பு இணைந்து இந்த படத்தில் நடிக்கிறார்கள். இதனால் படத்தின் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிரியாணி விருந்து

இதையடுத்து தக்லைஃப் படக்குழுவினருக்கு திடீரென பிரியாணி விருந்து வைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் நடிகர் சிம்பு. படத்தின் பணியாற்றிய டெக்னீஷியன்களுக்கு நடிகர் சிம்பு பிரியாணி பரிமாறும் விடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

சிம்புவின் இந்த திடீர் பிரியாணி விருந்துக்கான பின்னணி காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட கட்சி பெற்றிருக்கும் வெற்றியை கொண்டாடும் விதமாக சிம்பு பிரியாணி ட்ரீட் வைத்திருப்பதாகவும் சிலர் கொளுத்து போட்டு வருகின்றனர். ஆனால் உண்மை பின்னணி என்ன என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.

முன்னதாக அமரன் படத்தின் ஷுட்டிங் நிறைவுற்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர்களுக்கு பிரியாணி விருந்து வைத்தார். அதே போல் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ், தான் நடித்து வரும் வளையம் படத்தின் குழுவினர்களுக்கு பிரியாணி ட்ரீட் வைத்தார்.

இவர்களுக்கு அடுத்தபடியாக தற்போது சிம்புவும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளார். இதன் மூலம் நடிகர்கள் படத்தில் பணியாற்றும் டெக்னீஷியன்களுக்கு பிரியாணி ட்ரீட் வைக்கும் புதிய ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

பொதுவாக பிறந்தநாள் அல்லது படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் பணியாற்றியவர்களுக்கு விருந்து வழங்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடனும், அல்லது இடைப்பட்ட நேரத்தில் இதுபோன்ற விருந்துகள் களை கட்டி வருகிறது.

கமலின் மகனாக சிம்பு

தக்லைஃப் படத்தில் கமல்ஹாசன், சக்திவேல் நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் நாயகன் படத்தில் இடம்பெறும் வேலு நாயக்கருடன் தொடர்புடையதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

அத்துடன், தக்லைஃப் படத்தில் சிம்பு, கமலின் மகனாக தோன்றவுள்ளாராம். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வரும் சிம்பு, டாப் ஹீரோவான கமலின் மகன் கதாபாத்திரத்தில் நடிப்பது படத்தின் கதைக்கு வலு சேர்ப்பதாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

தக்லைஃப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் - ஸ்ரீகர் பிரசாத். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே 2024ஆம் ஆண்டின் மிக பெரிய ரிலீஸாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்