தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தனுஷ் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு? ரஜினி வீட்டில் குழாயடி சண்டை.. குண்டைத் தூக்கிப் போட்ட பத்திரிகையாளர்

தனுஷ் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு? ரஜினி வீட்டில் குழாயடி சண்டை.. குண்டைத் தூக்கிப் போட்ட பத்திரிகையாளர்

Nov 24, 2024, 08:47 AM IST

google News
நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருவருடன் தொடர்பில் உள்ளதால் தான் தனுஷ் விவாகரத்து கேட்டார் என பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருவருடன் தொடர்பில் உள்ளதால் தான் தனுஷ் விவாகரத்து கேட்டார் என பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருவருடன் தொடர்பில் உள்ளதால் தான் தனுஷ் விவாகரத்து கேட்டார் என பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

நடிகர் தனுஷும், ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற மகன்கள் உள்ள நிலையில், திருமணமாகி சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

விவாகரத்தை உறுதி செய்த தனுஷ்

இவர்கள் இருவரின் விவாகரத்து முடிவும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, அவை உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், தனுஷூம் ஐஸ்வர்யாவும் விவாகரத்து முடிவை கைவிடுவார்கள் என தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது, தனுஷூம் ஐஸ்வர்யாவும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களின் விவாகரத்து முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இது கோலிவுட் வட்டாரத்தை பரபரப்பாக்கிய நிலையில், பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கிங் 24X7 எனும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல வெளிவராத தகவல்களை கூறியுள்ளார்.

தனுஷ் குடும்பத்தை மதிக்காத லதா

தனுஷிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் திருமணமான நாளில் இருந்தே, லதா ரஜினிகாந்த், தனுஷின் குடும்பத்தை பெரிதாக மதிப்பதில்லையாம். அவர் அந்தஸ்திலும் சாதியிலும் தாம் தான் உயர்ந்தவர் எனும் நினைப்பில் இருக்கிறாராம் எனக் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யாவிற்கு வேறு ஒருவருடன் பழக்கம்

மேலும், ஐஸ்வர்யா தனுஷை பிரிவதாக அறிவித்த சமயத்தில் அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்தார். அது தனுஷ் குடும்பத்திற்கு தெரிந்ததால் தான் இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதானது.

இவர்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைத்தால், நிச்சயம் தனுஷிற்கு 2ம் திருமணம் நடக்கும் என அவரது தந்தை கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். விவாகரத்து முடிந்த கையோடு, தனது சொந்தத்திலேயே தனுஷிற்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பேன் எனவும் கூறியுள்ளார்.

ரஜினி மீது கோவம்

ரஜினியின் மருமகன் தனுஷ் என்ற பேச்சு போய், தனுஷின் மாமனார் ரஜினி என மாறிய அளவிற்கு தனுஷின் வளர்ச்சி இருக்கிறது. இருந்தாலும், தனுஷ் மீது வரும் விமர்சனங்கள் ஐஸ்வர்யாவை மேலும் கோபத்தை அடையச் செய்கிறது. அவர் அம்மா நடிகைகளை கூட விட்டுவைக்க மாட்டார் என தொடர்ந்து புகார்கள் வருவதை தடுக்க முடியவில்லை.

இது இப்படி இருக்க, ரஜினி வீட்டிலேயே ஐஸ்வர்யாவிற்கும் அவரது தங்கை சௌந்தர்யாவிற்கும் அடிக்கடி சண்டை நடக்கிறது. சௌந்தர்யாவின் விவாகரத்து முடிவை ஏற்ற நீங்கள் ஏன் என் விவாகரத்திற்கு தடையாக இருக்கிறீர்கள் என ஐஸ்வர்யா வாதம் செய்கிறார்.

அக்கா- தங்கை சண்டை

அத்துடன், சௌந்தர்யாவின் குழந்தையை லதா ரஜினிகாந்த் தான் பார்த்துக் கொள்கிறார். அந்தக் குழந்தையின் மீது மட்டும் 600 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. இதனால் தான் இந்த அக்கறையா எனவும் அவர் கேள்வி எழுப்பினாராம்.

அதுமட்டுமின்றி, சௌந்தர்யாவிற்காக படம் நடித்துக் கொடுத்த அப்பா ஏன் எனக்காக நடித்துக் கொடுப்பதில்லை என சண்டையிட்டு தான் லால் சலாம் படத்தில் நடிக்க வைத்தாராம்.

குடும்பத்தால் தவிக்கும் ரஜினி

கோச்சடையான் படத்தில் தான் நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிந்தும் ரஜினி நடித்தார். இந்த படத்தை ரஜினி செய்தே ஆக வேண்டும் என லதா கொடுத்த அழுத்தத்தினாலே ரஜினி நடித்தார்.

படம், கதை, பாடல், நடிகர்கள் என அனைத்திலும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கும் ரஜினி காந்த், அவரது குடும்பம் கொடுத்த அழுத்தத்தால் தான் பல தோல்வி படங்களில் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்,

அவர், வயதாகிவிட்டது ஓய்வெடுக்கலாம் என நினைத்தாலும் ஒரு படத்திற்கு 300 கோடி வருகிறகு. அதை ஏன் வேண்டாம் என சொல்ல வேண்டும். போய் நடித்துவிட்டு வா என அவருக்கு அழுத்தம் தருகின்றனர். இதனால், ரஜினி ஓய்வெடுக்க முடியாமல் தவிக்கிறார்.

ரஜினி எண்ணம் பலிக்காது

மருமகன் தனுஷ் சினிமாவில் நல்ல நிலையில் இருக்கிறார். அவரை தக்க வச்சிட்டு வாழ்க்கையில் அப்படியே போய்விடலாம் என ரஜினி திட்டமிடுகிறார். ஆனால், அவர் மகள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார். தனக்கு வேண்டாம் என்றால் வேண்டாம் என அடாவடியாக கூறுவதால் ரஜினியால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி