“ரஜினி ஒரு பயந்தாங்கோலி.. ஷாட் கரெக்டா வச்சா கூட.. முடிவே எடுக்கத்தெரியாத காமெடி பீஸ்” - வெளுத்து விட்ட கிருஷ்ணன்
ரஜினிகாந்த் அரசியலுக்கு செட் ஆக மாட்டார். காரணம் என்னவென்றால், அவர் ஒரு பயந்தாங்கோலி. ஒரு ஷாட் வைத்தாலே, ஷார்ட் ஓகேவா ஓகேவா ஓகேவா என்று பலமுறை கேட்டு குழம்புவார். அவரால் திடமாக ஒரு முடிவை எடுக்க முடியாது - கிருஷ்ணன்
கவிதாலாயா கிருஷ்ணன் ரஜினிகாந்த் ஒரு காமெடி பீஸ் என்று பேசியிருக்கிறார்.
ரஜினி ஒரு காமெடி பீஸ்
இது குறித்து ஆகாயம் யூடியூப் சேனலுக்கு பேசிய அவர், “கமல் போல ஒரு நடிகனை இனி இந்த சினிமா பார்க்க முடியாது. அவருக்கு கர்வம் இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். என்னை நம்பி ஒருவர் 100 கோடி போட்டு பணம் போடுகிறார் என்றால், எனக்கு கர்வம் இருக்காதா என்ன? அதை நான் கர்வம் என்று கூற மாட்டேன். அதை அவர் திறமை மீது அவர் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை என்று கூறுவேன்.
அடுத்த தலைமுறைக்கு ரஜினி ஒரு காமெடி பீஸ். போன முறை இதே போல ஒரு பேட்டியில் நான் சொன்னபோது, என்னை எல்லோரும் அடிக்க வந்து விட்டார்கள். தமிழ் சினிமாவிற்கு உதவும் வகையில் அவர் என்ன செய்திருக்கிறார் சொல்லுங்கள்? கமல் சினிமாவிற்கு மெனக்கெட்டது போல ரஜினி மெனக்கிடவில்லை.
ரஜினியை நான் முதல் நாள் ஷூட்டிங்கில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் ஸ்டாராக மாறுவார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர் இவ்வளவு பெரிய ஸ்டாராக மாறுவார் என்று எதிர்பார்க்கவில்லை; ஏன் பாலச்சந்தரே இதை எதிர்பார்த்து இருக்க மாட்டார். ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரங்கள் எதுவுமே எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது கிடையாது; ஆனால், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த கதாபாத்திரங்கள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
பாட்ஷாவில் யார் நடித்திருந்தாலும்
பாட்ஷாவில் யார் நடித்திருந்தாலும் அந்த படம் ஓடி இருக்கும் காரணம் அந்த படத்தின் கதை அவ்வளவு வலிமையானது. அதில் ரஜினிகாந்த் நடித்ததால் அந்த படம் சில்வர் ஜூப்ளி திரைப்படமாக வெற்றி பெற்றது. அதாவது அந்த திரைப்படத்திற்கு அவருடைய அந்த நட்சத்திர அந்தஸ்து பெரும் அளவில் உதவி புரிந்தது. நாயகன் படத்தில் கமலை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் ஓடி இருக்கும். ஆனால் கமல் நடித்ததால் அது மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது; ஆனால் அவ்வை சண்முகி போன்ற திரைப்படங்களை கமல்ஹாசன் ஒருவரால்தான் செய்ய முடியும்.
கமலுக்கு இவ்வளவு திறமைகள் இருந்தும் அவரை விட ரஜினி மக்களால் பெருமளவு கொண்டாடப்பட்டது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அபூர்வ சகோதரர்கள் திரைப்பட ரிலீஸின் பொழுது அவரது திரைப்படத்தை விட, ராமராஜன் படத்தை அதிக தொகை கொடுத்து வாங்கினார்கள். அது கமலுக்கு மன வருத்தத்தை தந்துவிட்டது. இதனையடுத்து அந்த படத்தை அவரே ரிலீஸ் செய்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ரஜினிகாந்த் அரசியலுக்கு செட் ஆக மாட்டார். காரணம் என்னவென்றால், அவர் ஒரு பயந்தாங்கோலி. ஒரு ஷாட் வைத்தாலே, ஷார்ட் ஓகேவா ஓகேவா ஓகேவா என்று பலமுறை கேட்டு குழம்புவார். அவரால் திடமாக ஒரு முடிவை எடுக்க முடியாது” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்