ரஞ்சித் செய்த தரமான செயல்.. செம காண்டில் பெண்கள்.. என்ன பார்த்தா முட்டாள் மாதிரி தெரியுதா? புலம்பி தள்ளும் ஜாக்குலின்!
Oct 10, 2024, 07:11 AM IST
ரஞ்சித், தயாரிப்பாளர் ரவீந்தர் உடன் சேர்ந்துக் கொண்டு சண்டை போடுவது போல போட்ட பிராங்க் ஜாக்குலின் உள்ளிட்ட பெண் போட்டியாளர்களை கடுப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.
விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 மூன்று தினங்களுக்கு முன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என நடிகர் விஜய் சேதுபதி தொகுத்த வழங்குகிறார். மூன்று தினங்களுக்கு முன் இந்த சீசன் கோலாகலமாக தொடங்கியது.
இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் போட்டியாளராக எலிமெண்ட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த முறை உள்ளே போட்டியாளர்கள் ஆண்கள், பெண்கள் எனத் தனி தனியாக பிரிக்கபட்டனர். அவர்கள் இருவருக்கும் தனித் தனியாக டாஸ்க் வழங்கப்படுகிறது.
அதிகளவு சண்டை
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு 3 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், அதிகளவு சண்டை நடந்துள்ளது. பெண்கள் அவர்கள் அணிக்குள்ளும், ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் சண்டையிட்ட நிலையில், இன்று மிகவும் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் இருந்த ஆண்கள் அணி நேற்று 2ஆக பிளவுபட்டுள்ளது.
நேற்று ரஞ்சித், தயாரிப்பாளர் ரவீந்தர் உடன் சேர்ந்துக் கொண்டு சண்டை போடுவது போல போட்ட பிராங்க் ஜாக்குலின் உள்ளிட்ட பெண் போட்டியாளர்களை கடுப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.
நீ ஏன் அந்தப் பொன்ன மிரட்டுறீங்க
நேற்று அந்த பிராங்கில், நடிகர் ரஞ்சித் ரவீந்தரை அடிக்கப் பாய்ந்து செல்வதும் அவரை சக போட்டியாளர்கள் தடுப்பதும் நடந்துள்ளது. அதுமட்டுமின்றி, இருவரும் போட்டியின்போது ஒருவருக்கு ஒருவர் ஒருமையிலும் பேசி உள்ளனர். முதலில், கோவமாக உள்ள ரஞ்சித் ஏன் தேவையில்லாத வேலையை பண்றீங்க என ரவீந்தரிடம் ஆவேசமாக கேட்கிறார். அப்போது, பவித்ரா நீங்க கலாய்குற மூட்ல இருக்கிங்களா என ரஞ்சித்திடம் கேள்வி எழுப்புகிறார்.
இதற்குள் பதிலளித்த ரவீந்தர், யார் தேவையில்லாம பேசுறா, நீ ஏன் அந்தப் பொன்ன மிரட்டுறீங்க என கேள்வி எழுப்புகிறார். அப்போது கையை இறக்கி பேசுங்க என மீண்டும் கோவப்பட்ட ரஞ்சித் ரவீந்தரை அடிக்கப் பாய்கிறார்.
ஜாக்குலின் சமாதானம்
நீங்க ஒன்னும் பாஸ் கிடையாது. கேள்வி கேட்க. பிக்பாஸ் மட்டும் தான் பாஸ் என கோவமாக பேசுகிறார். இதற்கிடையில், ரஞ்சித்தை தடுக்க வந்த அருண் கீழே விழுகிறார்.தன்னை தடுக்க ஒரு கும்பல் இருக்கும் போது, அவர்களையும் சேர்த்தே முன் இழுத்து சென்று கோவத்தை காட்டியுள்ளார் ரஞ்சித். மேலும், கையை நீட்டிப் பேச நான் ஒன்னும் உங்க வீட்டு வேலைக்காரன் கிடையாது எனவும் கூறியுள்ளார். பின், ரவீந்தர் ஆவேசமாக எழுந்து நிற்க முயற்சி செய்து ஏய் நீ என்ன பண்ணிறுவ என அதட்டுகிறார். அவரை ஜாக்குலின் சமாதானம் செய்கிறார்.
எமோஷனல் முட்டாள் மாதிரி தெரியுதா?
கடைசியில் இருவரையும் அனைவரும் சமாதானப்படுத்தி ஒருவருக்கொருவர் மன்னிப்புக் கேட்க சொல்ல அப்போ ரஞ்சித் பாட்டு பாடி இது பிராக் என சிரிக்கிறார். ரவீந்தர் ரஞ்சித் இருவரும் கட்டி பிடித்து சிரிக்கிறார்கள். இதைப் பார்த்த பெண்கள் செம ஷாக் ரியாக்சன் கொடுக்கிறார்கள். பின்னர் ஜாக்குலின் எப்போதும் போல அழுது புலம்புகிறார். என்னை பார்த்தா என்ன எமோஷனல் முட்டாள் மாதிரி தெரியுதா? என புலம்பித் தவித்து வருகிறார்.
முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறுவாரா?
இந்தவாரம் நானினேஷனில் இருக்கும் ரஞ்சித்திற்கு ஆர்மியே உருவாகி விட்டது. ஓட்டிங்கும் அவருக்கு அதிகரித்து வருகிறது. இதுவரை செளந்தர்யாவுக்கு அதிக வாக்குகளும் அவரை தொடர்ந்து முத்துக்குமார், ரஞ்சித்துக்கு வாக்குகள் அதிகரித்துள்ளன. டேஞ்சர் ஜோனில் அருண் பிரசாத், ஜாக்குலின் மற்றும் ரவீந்தர் உள்ளனர். கடைசி இடத்தில் ஜாக்குலின் மற்றும் ரவீந்தர் உள்ள நிலையில், முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறுவாரா? அல்லது ஜாக்குலின் வெளியேறுவாரா என்கிற கேள்விகள் அதிகரித்துள்ளன.