ரூல்ஸை மீறிய ஜாக்குலின்.. நடு ராத்திரியில் சம்பவம் செய்த பாய்ஸ் டீம்.. என்ன செய்தார் ஜாக்குலின்?
ஜாக்குலின் நடு இரவில் ஆண்கள் அணியின் பக்கம் சென்றதால் அவர் வீட்டின் விதிமுறைகளை மீறிவிட்டார் என்று அவருக்கு அப்போதே தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே ஆண்கள் அணி பெண்கள் அணி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேலும், ஆண்கள் அணி இருக்கும் இடத்திற்கு பெண்களும், பெண்கள் அணி இருக்கும் இடத்திற்கு ஆண்களும் வரக்கூடாது என வீட்டின் நடுவே கோடு கிழித்து பஞ்சாயத்தை தொடங்கி வைத்தது பிக்பாஸ்.
இதையடுத்து, இரு அணிகளும் தங்கள் பக்கம் உள்ள இடத்திற்குள் வந்தால், என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து அதை பிக்பாஸிடம் அனுமதியும் வாங்கி வைத்திருந்தனர்.
ரூல்ஸை மீறிய ஜாக்குலின்
இந்நிலையில், நேற்று இரவு பிக்பாஸ் வீட்டில் பாதிபேர் தூங்கிய நிலையில், வீட்டின் நடுவே வந்து கொண்டிருந்த ஜாக்குலின், எதிர்பாராத விதமாக ஆண்கள் அணி பக்கம் சென்றுவிட்டார். பின் அவர் உடனே பெண்கள் அணிப் பக்கம் வந்துவிட்டார். இதனை கவனித்த ஜெஃப்ரி, ஜாக்குலினை சக போட்டியாளர்களிடம் மாட்டிவிட்டார்.