அழகனுடன் கொண்டாட்டத்தில் இறங்கிய ஆனந்தி.. சந்தோஷம் ஒரு பக்கம்.. தவிப்பு ஒரு பக்கம்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
Nov 26, 2024, 07:05 AM IST
அன்பு தான் அழகன் என்பதை தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திய ஆனந்தி அன்புடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
கார்மெண்ட்சில் வேலை செய்யும் ஆனந்திக்கு, அழகன் என்ற பெயரில் கடிதம் வந்த வண்ணம் இருந்தது. நாளுக்கு நாள் அந்த கடித போக்குவரத்து ஆனந்திக்கு காதலாக மாறியது.
அழகனை கண்டுபிடித்த ஆனந்தி
இந்நிலையில், அந்த அழகன் யார் என்பதை கண்டுபிடிக்க ஆனந்தி மிகவும் முயற்சி எடுத்தார். அதன் விளைவாக தன் நெருங்கிய நண்பன் அன்பு தான் அழகன் என்பதை கண்டுபிடித்தார்.
இதையடுத்து, ஆனந்தியை பிரிந்து வங்கதேசம் செல்ல இருந்த அன்புவை, தடுத்து நிறுத்தி தன் காதலை வெளிப்படுத்தினார் ஆனந்தி. இந்த சமயத்தில், தன்னை சுற்றி சுற்றி வரும் மகேஷிற்கு இந்த உண்மை தெரிய வேண்டும் என நினைத்து அவருக்கு போன் செய்கிறார். பின் ஆனந்தியும் அன்புவும் இருக்கும் கோயிலுக்கு மகேஷ் மித்ராவுடன் வந்தார்.
மித்ராவின் சூழ்ச்சியை அறிந்த மகேஷ்
அப்போது, அன்புவும் ஆனந்தியும் ஒன்றாக இருப்பதைப் பார்த்து மித்ரா மகேஷை ஏற்றி விடுகிறாள். அன்பு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். அதனால் அவரை அடிக்கவும் சொல்கிறார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மகேஷ், மித்ராவை பளார் என அறைகிறான். நடப்பது புரியாமல் தவித்த மித்ராவிடம் அழகன் பெயரில் பார்சல் அனுப்பி, அன்புவையும் மகேஷையும் பிரிக்க அன்பு கையெழுத்திலேயே கடிதம் எழுதியது மித்ரா தான் என்ற உண்மை தனக்கு தெரியும் என்றும், நீயும் என் அம்மாவும் பேசியதை தான் கேட்டதாகவும் கூறி, இனி மித்ராவை தன் கண்முன்னே இருக்க கூடாது எனவும் திட்டுகிறான்.
மன்னிப்பு கேட்ட மகேஷ்
இதையடுத்து, அன்பு ஆனந்தி அழகான நட்பை நான் தவறாக புரிந்துகொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என இருவரிடமும் மன்னிப்பு கேட்டான். அத்துடன் அன்பு வங்கதேசம் போக வேண்டாம். பழையபடி, எனக்கு துணையாக கார்மெண்டிசில் வந்து பணியாற்ற வேண்டும். எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என மகேஷ் கூறுகிறான்.
அன்பு வீட்டிலேயே தங்கும் ஆனந்தி
அத்துடன் நில்லாமல், ஆனந்தி புது ஹாஸ்டலுக்கு போக வேண்டாம். அவர் பழைய ஹாஸ்டலுக்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்வதாகவும் அதுவரை அன்பு வீட்டிலேயே தங்குமாறும் கூறினான். இந்த சமயத்தில் ஆனந்தி மகேஷிடம் உண்மையை கூற முற்பட்ட நிலையில், அன்பு அவரை தடுத்துவிட்டான்.
அழகனை அறிமுகம் செய்யும் ஆனந்தி
இந்த நிலையில், தான் உருகி உருகி காதலித்த ஆழகன் யார் என்பதை கண்டுபிடித்து விட்டதாகவும், அவரை உங்களுக்கு எல்லாம் அறிமுகம் செய்து வைப்பதாகவும் ஆனந்தி கார்மெண்ட்சில் உள்ள அவரது நண்பர்களிடமும் ஹாஸ்டல் நண்பர்களிடமும் கூறுகிறாள்.
இதையடுத்து, இவர்கள் அனைவரும் ஒரு ஹோட்டலுக்கு வந்து அழகனுக்காக காத்திருக்கின்றனர். அப்போது, அழகனாக என்ட்ரி கொடுக்கிறார் அன்பு. இதைப் பார்த்த முத்துவும் சௌந்தர்யாவும் சந்தோஷப்படும் நிலையில், ஹாஸ்டல் நண்பர்களுக்கு சற்று குழப்பம் ஏற்பட்டது.
கொண்டாட்டத்தில் அன்பு, ஆனந்தி
இதற்கிடையில், ஹோட்டலுக்கு வந்த மகேஷ், அன்புவும் ஆனந்தியும் என்ன செய்கின்றனர். அவர்கள் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை பார்க்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் அங்கும் இங்கும் நடந்துக கொண்டிருக்கிறார்.
ஆனால், ஹோட்டலுக்குள் அன்புவும் ஆனந்தியும் தங்களது சந்தோஷமான நாளை கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்