ஒரு வழியாக ஒன்று சேர்ந்த காதல்.. குட்டையை குழப்ப வந்த மித்ரா.. பளார் விட்ட மகேஷ்.. சிங்கப்பெண்ணே அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஒரு வழியாக ஒன்று சேர்ந்த காதல்.. குட்டையை குழப்ப வந்த மித்ரா.. பளார் விட்ட மகேஷ்.. சிங்கப்பெண்ணே அப்டேட்

ஒரு வழியாக ஒன்று சேர்ந்த காதல்.. குட்டையை குழப்ப வந்த மித்ரா.. பளார் விட்ட மகேஷ்.. சிங்கப்பெண்ணே அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Nov 23, 2024 11:20 AM IST

ஆனந்தியும் அன்புவும் தங்கள் காதலை ஒருவருவருக்கொருவர் கூறிக் கொண்ட நிலையில், இவர்களைத் தேடி மகேஷ் மிகவும் கோவத்துடன் வருகிறான்.

ஒரு வழியாக ஒன்று சேர்ந்த காதல்.. குட்டையை குழப்ப வந்த மித்ரா.. பளார் விட்ட மகேஷ்.. சிங்கப்பெண்ணே அப்டேட்
ஒரு வழியாக ஒன்று சேர்ந்த காதல்.. குட்டையை குழப்ப வந்த மித்ரா.. பளார் விட்ட மகேஷ்.. சிங்கப்பெண்ணே அப்டேட்

அன்புவிற்கு பளார்

அழகன் என்பவனே இல்லை என அன்பு கூறிய நிலையில், அன்புவை கன்னத்தில் பளார் பளார் என அறைந்த ஆனந்தி, அழகன் கொடுத்த செயினை வைத்து அன்புதான் அழகன் என்பதை தான் கண்டுபிடித்து விட்டதாகவும், அழகனாக இருக்கும் அன்புவை எனக்கு பிடிக்கும் எனவும் கூறி அன்புவை ஊருக்கு செல்ல விடாமல் தடுக்கிறாள்.

இந்நிலையில், தங்கள் இருவரின் காதல் குறித்தும் மகேஷ் சாருக்கு தெரிவிக்க வேண்டும் என ஆனந்தி கூறுவது தொடர்பான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

கோயிலுக்கு செல்லும் காதலர்கள்

அந்த வீடியோவில், வங்கதேசம் கிளம்பிய அன்புவை தன் காதலால் தடுத்து நிறுத்தியுள்ளார் ஆனந்தி. பின் இருவரும் சேர்ந்து கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுகின்றனர்.

அந்த சமயத்தில், மித்ராவுடன் அன்புவைத் தேடி மகேஷ் வருகிறார். அந்த சமயத்தில், ஆனந்தியையும் அன்புவையும் மகஷ் மூலமாக பழிவாங்க நினைத்த மித்ரா, மகேஷை தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தார்.

இந்நிலையில், நம் காதல் குறித்து மகேஷ் சாருக்கு சொல்லியே ஆக வேண்டும் என கோயிலில் இருந்துகொண்டே ஆனந்தி கூறுகிறாள்.

மகேஷுடன் வரும் மித்ரா

அன்பு சொல்வதைக் கேட்காமல், அவள் மகேஷ் சாருக்கு போன் செய்கிறாள். அந்த சமயத்தில், மகேஷ், மித்ராவுடன் கோயில் முன் காரில் வந்து இறங்குகிறாள். மித்ரா இருக்கும் போது எப்படி இதுகுறித்து மகேஷிடம் பேசுவது என்ற தயக்கத்தில் ஆனந்தியும் அன்புவும் இருக்கிறார்கள்.

மித்ராவை அறைந்த மகேஷ்

இந்த சமயத்தில், இருவரையும் ஒன்றாக பார்த்ததால் மகேஷ் கோபமாக இருப்பார் எனக் கருதி அவர்களை அடிக்குமாறு கூறுகிறாள். ஆனால், மகேஷோ மித்ராவின் கன்னத்தில் பளார் என அறைகிறான்.

மகேஷ் ஏன் மித்ராவை அறைகிறான், மித்ரா, கருணாகரன், மகேஷ் அம்மாவின் திட்டம் மகேஷிற்கு தெரிந்து விட்டதா என்பதை இனி வரும் நாட்களில் தான் பார்க்க வேண்டும்.

அழகனை அறிந்த ஆனந்தி

முன்னதாக, அழகன் காதல் பரிசாக அனுப்பிய பாதி டாலர் செயின் இப்போது 2ஆக இருப்பதைப் பார்க்கிறாள். இதனால், பதறிப்போன ஆனந்தி செயினை எடுத்து பார்த்த போது அதில் அன்புவின் முகம் இருந்தது. இதன்மூலம் தன்னை இத்தனை நாள் உருகி உருகி காதலித்தத அழகன் அன்புதான் என்பதை உறுதி செய்துகொண்டாள்.

அன்பு தங்கை கூறிய உண்மை

இதையடுத்து, வேகமாக வந்து அன்புவிற்கு ஆனந்தி போன் செய்கிறாள். ஆனால். அன்பு அந்த போனை எடுக்க தயக்கம் காட்டுகிறான். இதையெல்லாம் ஆட்டோ டிரைவர் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்போது, அன்புவின் தங்கை போன் செய்து, அன்பு தான் அழகன் என்பதையும், உங்களை பிரிய மனம் இல்லாமல் தான் அன்பு வங்கதேசத்திற்கு செல்வதாகவும், அந்த டாலரை ஒட்டி வைத்தது தான் தான் என்றும் கூறுகிறார். அத்துடன் நில்லாமல், அன்புவை இனி எந்த காரணத்திற்காகவும் நீங்கள் பிரியக் கூடாது. எப்படியாவது அவனை தடுத்து நிறுத்துங்கள் எனக் கூறுகிறாள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.