வங்கதேசத்துக்கு புறப்பட்ட அன்பு.. அழகன்தான் அன்பு என அறிந்து சேஸ் செய்யும் ஆனந்தி.. பரபரக்கும் சிங்கப்பெண்ணே சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வங்கதேசத்துக்கு புறப்பட்ட அன்பு.. அழகன்தான் அன்பு என அறிந்து சேஸ் செய்யும் ஆனந்தி.. பரபரக்கும் சிங்கப்பெண்ணே சீரியல்

வங்கதேசத்துக்கு புறப்பட்ட அன்பு.. அழகன்தான் அன்பு என அறிந்து சேஸ் செய்யும் ஆனந்தி.. பரபரக்கும் சிங்கப்பெண்ணே சீரியல்

Marimuthu M HT Tamil Published Nov 21, 2024 08:22 AM IST
Marimuthu M HT Tamil
Published Nov 21, 2024 08:22 AM IST

வங்கதேசத்துக்கு புறப்பட்ட அன்பு.. அழகன்தான் அன்பு என அறிந்து சேஸ் செய்யும் ஆனந்தி.. பரபரக்கும் சிங்கப்பெண்ணே சீரியல் குறித்த அப்டேட்டினைப் பார்க்கலாம்.

வங்கதேசத்துக்கு புறப்பட்ட அன்பு.. அழகன்தான் அன்பு என அறிந்து சேஸ் செய்யும் ஆனந்தி.. பரபரக்கும் சிங்கப்பெண்ணே சீரியல்
வங்கதேசத்துக்கு புறப்பட்ட அன்பு.. அழகன்தான் அன்பு என அறிந்து சேஸ் செய்யும் ஆனந்தி.. பரபரக்கும் சிங்கப்பெண்ணே சீரியல்

நேற்றைய சீரியல் அப்டேட்: 

ஆனந்தியிடம் அழகன் என்ற பெயரில் கடிதம் எழுதி காதலித்தது தான் தான் என்ற உண்மை தெரியக் கூடாது என்பதற்காகவும், தான் இங்கிருந்தால் மகேஷுடன் ஆனந்திக்கு கிடைக்கும் நல்ல வாழ்க்கைப் பாதிக்கும் என்றும் நினைத்து அன்பு வங்கதேசத்திற்கு வேலைக்குக் கிளம்புகிறான்.

அன்புவை அவரது தங்கையும், ஆனந்தியும், நண்பன் முத்துவும் எவ்வளவோ தடுத்தும், அன்பு தன் முடிவை மாற்றிக்கொள்ளாமல் வெளிநாட்டிற்கு கிளம்பிவிட்டான்.

இந்நிலையில், ஆனந்தி மேல் தனக்கு எவ்வித காதலும் இல்லை எனக்கூறிய அன்பு, இத்தனை நாள் ஆனந்தி மறைந்து இருந்தபோது, படுத்து தூங்கிய தலையணை கவரை வெளிநாட்டிற்குப் போகும்போது எடுத்துச் சென்றுள்ளார். இது அவரது தங்கைக்கு தெரியவர உடனே போன் செய்து இதுபற்றி விசாரிக்கிறார். ஆனால், அன்பு என்ன சொல்வது எனத்தெரியாமல் திணறி வருகிறார்.

இந்த சமயத்தில் தான் விதி அன்பு வாழ்க்கையில் விளையாடுகிறது. ஆனந்தி, எந்த ஆட்டோ டிரைவர் மூலம் அழகனை பற்றி மீண்டும் தெரிந்துகொண்டாலோ அதே ஆட்டோவில் தான் அன்பு வெளிநாட்டிற்கு செல்வதற்காக கிளம்பிச்செல்கிறான். இதையடுத்து, அழகன் தன் ஆட்டோவில் இருப்பதை எப்படியாவது ஆனந்தியிடம் சொல்லிவிட வேண்டும் என ஆட்டோ டிரைவர் ஆனந்திக்குப் போன் செய்கிறார்.

அன்புதான் அழகன் என்பதை அறிந்துகொண்ட ஆனந்தி:

அந்த சமயத்தில், வேலை நேரத்தில் அழுது கொண்டிருக்கிறாள், ஆனந்தி. இதைப் பார்த்த முத்து, எப்படியாவது அன்பு தான் அழகன் என்பதை ஆனந்தியிடம் கூற வேண்டும் என முயற்சி செய்கிறான். அப்போது அன்புவை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்காரர் போன் செய்கிறார். தன்னுடைய போன் தான் அடிக்கிறது என்பதை அறிந்த ஆனந்தி, அதை லாக்கரில் இருந்து எடுக்க வரும்போது சிக்கிக்கொள்கிறாள். அதில் ஆனந்திக்கு அழகன் அனுப்பிய பொருட்களைப் பார்த்துவிடுகிறார், மேல் அதிகாரி கருணாகரன்.

இதனையடுத்து அலுவலகத்தில் ஆனந்திக்கு அழகன் அனுப்பிய பரிசுப்பொருட்களை மேல் அதிகாரி கருணாகரன் எரிக்க முயற்சிக்கிறார். அப்போது அதை எரித்தால் நடப்பதே வேறு என மிரட்டுகிறார், ஆனந்தி.

ஆட்டோவில் சென்றுகொண்டிருக்கும்போதே அன்பு, மகேஷிடம் போன் செய்து தான் ஊருக்குச் செல்வதைச் சொல்கிறான். அப்போது அன்பு, தன்னிடம் தாங்கள் சரியாகப் பேசாதது பற்றி வருத்தப்படுகிறார்.

அதைத்தொடர்ந்து அங்கிருக்கும் கிஃப்ட் டாலரில் அன்பு தன் போட்டோவையும் ஆனந்தி போட்டோவையும் டாலரில் சேர்த்து வைப்பதை அறிந்துகொள்கிறார், ஆனந்தி. இறுதியில் அன்புதான் அழகன் என ஆனந்திக்கு தெரியவருகிறது. 

இன்றைய சீரியல் அப்டேட்:

சிங்கப்பெண்ணே நவம்பர் 21ஆம் தேதிக்குண்டான ப்ரோமோவில் அன்புவை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவர் சொன்ன தகவலின்படி அவரைச் சந்திக்கிறார், ஆனந்தி. அப்போது அன்புதான் அழகன் என்ற உண்மையை ஆட்டோ டிரைவரிடம் சொல்கிறார். அப்போது அவர், ‘ நீ ரொம்ப லேட்டுமா’ என கடிந்துகொள்கிறார். பிறகு அன்புவை இறக்கிவிட்ட பஸ் நிலையத்திற்கு ஆனந்தியை அழைத்துச் செல்கிறார்.

முன்னதாக, அன்புவின் தங்கை ஆனந்திக்கு போன் அடித்து எந்தக் காரணத்துக்காகவும் அன்புவை பிரியக்கூடாது எனக் கேட்கிறார். அதேபோல், ஆட்டோ டிரைவரிடம் அன்பு பேருந்து நிலையத்தில் வைத்து தான் வங்கதேசம் செல்வதாகக் கூறுகிறார். அதற்கு அவர், ‘ நீ எங்கு வேண்டுமென்றாலும் போங்க தம்பி. ஆனால், ஆனந்தியின் காதல் உன்னை வந்து சேர்க்கும்’ என்று நம்பிக்கை சொல்கிறார். இதையடுத்து அன்புவும் ஆனந்தியும் சேர்வார்களா என்ன நடக்கப்போகிறது என்பதை இன்றைய சீரியலில் பார்ப்போம்.