ரன்னிங்.. சேசிங் என அழகனைத் தேடிப்பிடித்து பளார் விட்ட ஆனந்தி.. அரண்டு போய் நின்ற அன்பு.. சிங்கப்பெண்ணே அப்டேட்
அழகன் என்பவனே இல்லை என அன்பு ஆனந்தியிடம் கூறியதால் கோபமடைந்த ஆனந்தி, அன்புவின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார்.
சிங்கப்பெண்ணே சீரியலில், ஆனந்திக்கு மகேஷால் கிடைக்க உள்ள நல்ல வாழ்க்கை என் காதலால் கெட்டுவிடக் கூடாது என அன்பு வங்கதேசத்திற்கு வேலைக்கு செல்கிறான்.
கருணாகரனை எச்சரித்த ஆனந்தி
இதற்கிடையில், ஆனந்தி அழகன் நினைவாக வைத்திருந்த பொருட்களை மகேஷ் கூறியதால் கருணாகரன் கார்மெண்ட்ஸ் மாடியில் எரிக்க முயற்சி செய்கிறான். இதை அறிந்து அங்கே வந்த ஆனந்தி, பொருட்களை எல்லாம் கைப்பற்றி, கருணாகரனை எச்சரித்து அனுப்புகிறாள்.
அழகன் யார் என்பதா அறியும் ஆனந்தி
அந்த சமயத்தில் தான், அழகன் காதல் பரிசாக அனுப்பிய பாதி டாலர் செயின் இப்போது 2ஆக இருப்பதைப் பார்க்கிறாள். இதனால், பதறிப்போன ஆனந்தி செயினை எடுத்து பார்த்த போது அதில் அன்புவின் முகம் இருந்தது. இதன்மூலம் தன்னை இத்தனை நாள் உருகி உருகி காதலித்தத அழகன் அன்புதான் என்பதை உறுதி செய்துகொண்டாள்.
அன்பு தங்கை கூறிய உண்மை
இதையடுத்து, வேகமாக வந்து அன்புவிற்கு ஆனந்தி போன் செய்கிறாள். ஆனால். அன்பு அந்த போனை எடுக்க தயக்கம் காட்டுகிறான். இதையெல்லாம் ஆட்டோ டிரைவர் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்போது, அன்புவின் தங்கை போன் செய்து, அன்பு தான் அழகன் என்பதையும், உங்களை பிரிய மனம் இல்லாமல் தான் அன்பு வங்கதேசத்திற்கு செல்வதாகவும், அந்த டாலரை ஒட்டி வைத்தது தான் தான் என்றும் கூறுகிறார்.
அத்துடன் நில்லாமல், அன்புவை இனி எந்த காரணத்திற்காகவும் நீங்கள் பிரியக் கூடாது. எப்படியாவது அவனை தடுத்து நிறுத்துங்கள் எனக் கூறுகிறாள்.
அன்புவை தேடிப் பிடித்த ஆனந்தி
இவற்றை எல்லாம் கேட்ட ஆனந்தி, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்று, அன்புவை தேடி தேடி அலைகிறாள். அப்போது, ஒரு பேருந்தில் இருந்த அன்புவைப் பார்த்த அவள், பேருந்தை துரத்திச் செல்கிறாள்.
பின், அன்புவை கண்டுபிடித்து, நிறுத்தி என் அழகன் இருக்கானா இல்லையா என கேள்வி எழுப்புகிறாள். அதற்கு பதிலளித்த அன்பு, அழகன் இல்லை எனக் கூறினான்.
அன்பு கன்னத்தில் அறைந்த ஆனந்தி
அன்பு சொன்ன இந்த வார்த்தையால் மிகவும் கோபமடைந்த ஆனந்தி, அன்புவின் கன்னத்தில் பளார் என அறைகிறாள். இதனால் , அன்பு செய்வது அறியாது நிற்கிறான். மேலும், அழகன் குறித்த உண்மை ஆனந்திக்கு தெரிந்துவிட்டதா என்ற சந்தேகமும் அவர் மனதிற்குள் எழுகிறது. இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
அடுத்து நடப்பது என்ன?
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அன்பு தான் அழகன் என தான் தெரிந்துகொண்டதை ஆனந்தி கூறுவாளா? அன்புவின் மனதை மாற்றி வீட்டிற்கு கூட்டிச் செல்வாளா? இவர்கள் இருவரின் காதல் நிறைவேறுமா? இனி மகேஷ் என்ன செய்யப் போகிறார் என்பதை எல்லாம் வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்