தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னாங்க… நரிக்கூட்டம் ஜனனி

அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னாங்க… நரிக்கூட்டம் ஜனனி

Aarthi V HT Tamil

Aug 17, 2022, 12:19 PM IST

நரிக்கூட்டம் ஜனனி தன்னை பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள் என கூறியுள்ளார்.
நரிக்கூட்டம் ஜனனி தன்னை பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள் என கூறியுள்ளார்.

நரிக்கூட்டம் ஜனனி தன்னை பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள் என கூறியுள்ளார்.

யூ-டியூப்பில் வரும் பிரபலங்கள் பலரும் தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் நரிக்கூட்டம் யூ-டியூப் சேனலில் நடித்து பிரபலமானவர் ஜனனி. 

ட்ரெண்டிங் செய்திகள்

Aavesham OTT: ரூ. 150 கோடி வசூல் செய்த ஆவேஷம்.. ஓடிடியில் எப்போது ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும்?

Archana Bigg Boss: என் ஹீரோ.. இறுதியாக சீரியல் நடிகருடன் காதலில் விழுந்த அர்ச்சனா

Karthigai Deepam: கார்த்திக்,தீபாவின் சாந்தி முகூர்த்தம்!அபிராமியின் சர்ப்ரைஸ் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

20 Years Of Perazhagan: 2 ஜோடிகளின் காதல்.. மாற்றுத்திறனாளியாக நடித்த சூர்யா..மறுக்கப்பட்ட தேசிய விருது - பேரழகனின் கதை

இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஆனால் படத்தின் இயக்குநர் தன்னிடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யுமாறு கேட்டதாக கூறியுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், "ஒரு படத்தில் நடிக்க நான் தேர்வு செய்யப்பட்டேன். எல்லா புரொசிஜரும் முடிந்து, கடைசியாக நீங்க தான் இந்த ரோல் பண்றீங்க என சொன்னார்கள். 

ஆனால் ஒரு ரெண்டு அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கும், உங்களுக்கு ஓகே என்று சொன்னால் உடனே முடிந்துவிடும் என சொன்னார்கள்.

ஒரு செகண்ட் அப்படியே அதிர்ச்சி ஆகிட்டேன். ஒன்னுமே வேண்டாம் என்று நான் நோ சொல்லிட்டேன். தயாரிப்பாளர், இயக்குநர் அல்லது ஹீரோ கூட அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள். 

நான் வேண்டாம் என சொல்லியும் அவர்கள் எங்களை விடவில்லை. பின்னர் 3, 5, 8 10, 15 லட்சம் ரூபாய் வரை அதுக்கு ஒத்துக்க என்னிடம் பேரம் பேசினார்கள். நான் முடியவே முடியாதுன்னு சொல்லி மறுத்ததும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனது.

இதில் வேடிக்கை என்னவென்றால் உங்க தோழிகளை யாராவது ரெஃபர் செய்ய சொன்னாங்க. நானே வரமாட்டேன் என சொல்றேன். என் பிரெண்ட்ஸ அனுப்பு வேனான்னு சொன்னாங்க” என்றார். இந்த செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.