நாக சைதன்யா- சோபிதா திருமணம்.. பங்கேற்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா? வெளியானது லிஸ்ட்..
Dec 04, 2024, 06:43 AM IST
நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் இன்று அன்னப்பூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற உள்ள நிலையில், திருமணத்தில் பங்கேற்கும் பிரபலங்கள் யார் என்ற பட்டியல் கசிந்துள்ளது.
அக்கினேனி நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் இன்று புதன்கிழமை (டிசம்பர் 4) இன்னும் சில மணி நேரங்களில் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற உள்ளது. அன்னபூர்ணா ஸ்டுடியோவில் உள்ள அக்கினேனி நாகேஸ்வர ராவின் சிலை முன் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமணத்தில் பங்கேற்கும் பிரபலங்கள் யார்?
இரு குடும்பத்தினரும் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை மட்டுமே திருமணத்திற்கு அழைத்துள்ளனர் எனக் கூறப்பட்ட நிலையில், திருமணத்தில் பங்கேற்கும் பிரபலங்கள் யார் யார் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்த திருமணத்தில் நாக சைதன்யா அக்கினேனி மற்றும் சோபிதா துலிபாலா குடும்பத்தினர் மற்றும் ராணா டகுபதி குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள். ராஜமௌலி, சுகுமார் போன்ற திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்பர் எனத் தெரிய வருகிறது.
திருமண நிச்சயதார்த்தம்
கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் நாக சைதன்யா, தெலுங்கு நடிகை சோபிதா துலிபாலா ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. . இதனை நாக சைதன்யாவின் தந்தையும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்தார். இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகசைதன்யா - சோபிதா இடையிலான உறவு குறித்தும், டேட்டிங் குறித்தும் உலா வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சோபிதாவிற்கு மஞ்சள் சடங்கு
நாக சைதன்யா- சோபிதா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், மக்கள் இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், திருமணம் பற்றிய அறிவிப்புகளை இருவர் தரப்பிலிருந்தும் வெளிவராத நிலையில், கடந்த மாதம் சோபிதாவிற்கு உறவினர்கள் சூழ பாரம்பரிய முறைப்படி மஞ்சள் சடங்கு நடைபெற்றது. இதற்கான புகைப்படங்களை சோபிதா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
டிசம்பர் 4ல் டும் டும் டும்
தெலுங்கு திருமணங்களில் முக்கிய சடங்காக இருக்கும் உலக்கை, உரலில் மஞ்சள் அடிக்கும் நிகழ்வு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் இவர்களின் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி இன்று இவர்களின் திருமணம் நடைபெறுகிறது.
எளிமையான திருமணம்
சைதன்யாவும் சோபிதாவும் தனக்கு ஆடம்பரமாக திருமணம் செய்ய விருப்பம் இல்லை எனக் கூறினர். அதனால் தான் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்துள்ளோம். மேலும், சைதன்யா அவரது திருமண ஏற்பாடுகளை அவரிடமே விட்டுவிடுமாறு கூறினார்.
இது எனக்கு பெரிய நிவாரணத்தை தந்தது. இதனால், நானும் சைதன்யாவிடமே அனைத்து பொறுப்புகளையும் கொடுத்து விட்டேன். இதனால், அவர்களுக்கான பொறுப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியது என நடிகரும் நாக சைதன்யாவின் தந்தையுமான நாகார்ஜூனா கூறியுள்ளார்.
வதந்தி
நாக சைதன்யா சோபிதா துலிபாலா திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளதாகவும் இதற்காக இந்த ஜோடிக்கு சுமார் 50 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இந்தத் தகவலை நாக சைதன்யா முற்றிலும் மறுத்துவிட்டார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்