Marumagal: ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்த நினைக்கும் ஆதிரை.. ஷாக் ஆகும் பிரபு.. திருமணத்தை நிறுத்த துடிக்கும் சொந்தங்கள்
Aug 17, 2024, 01:37 PM IST
Marumagal: ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்த நினைக்கும் ஆதிரை செயல்பாடால் ஷாக் ஆகும் பிரபு மற்றும் இவர்களின் திருமணத்தை நிறுத்த துடிக்கும் சொந்தங்கள் பற்றி இன்றைய மருமகள் எபிசோடு பேசுகிறது.
Marumagal: சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியலில், ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கான புரோமோ இன்றுவெளியாகியுள்ளது. இந்த மருமகள் சீரியல் மாலை 8 மணிக்கு, சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.
இன்றைய புரோமோ:
மருமகள் புரோமோவில் தில்லையின் மகள் ரோகிணி நிச்சயதார்த்தப் புடவையை விலை அதிகமாக வாங்கவேண்டும் என தன் தந்தையிடம் கூறுகிறார். மேலும், மருமகள் புரோமோவில், ஆதிரை பிரபுவிடம் போனில் பேசும்போது, செலவைப் பற்றி கவலைப்படாமல் ஆடம்பரமாக திருமணம் செய்யவேண்டும் என்கிறார். தவிர, அதைக்கேட்டதும் அய்யய்யோ எனக் கதறுகிறார், பிரபு. பிரபுவின் நிச்சயத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என அவரது உறவினர்கள் திட்டமிடுகின்றனர்.
முந்தைய எபிசோட்:
மருமகள் சீரியலில் தாய் அற்ற பிள்ளைகளை வளர்த்து வரும் சிவப்பிரகாசம், வாட்டர் கேன் பிசினஸ்செய்து வரும் நிலையில், தேவா என்னும் இன்னொரு வாட்டர் கேன் பிசினஸ் செய்துவருபவரிடம் இருந்துபோன் வருகிறது. அதில் சிவப்பிரகாசத்தின் வாகனம் தங்கள் வசம் இருப்பதாகச் சொல்கிறார், தேவா. இதைத்தொடர்ந்து தேவாவின் இடத்துக்குச்சென்று அதை மீட்கப்பேசும் சிவப்பிரகாசத்தைக் கத்தியை வைத்து குத்தப்பார்க்கிறார், தேவா.
அப்போது உள்ளே புகும் சிவப்பிரகாசத்தின் மூத்த மகள் ஆதிரை, அவர்களிடம் சண்டைபோட்டு தன் தந்தையைக் காப்பாற்றுகிறார். இதுவேல்விழி நடத்திய சதி என்பதை உணர்ந்த ஆதிரை, அவர்களை அடித்து ஓட விட்டதுபோல உன்னையும் அடித்து ஓட விட்டுவிடுவேன் என்கிறார்.
இந்தப் பிரச்னைக்குப் பின், சிவப்பிரகாசம் தன் மகள் ஆதிரையை முதலில் திருமணம்செய்துகொள்ள வலியுறுத்துகிறார். பின், இதைத்தொடர்ந்து பெண் கேட்ட தன் நண்பன் தில்லையிடம் சிவப்பிரகாசம், தன் மகள் திருமணத்துக்குச் சம்மதித்துவிட்டாள் என்று சொல்கிறார். இதையடுத்து பெண் பார்க்கும் படலம் நடக்கிறது.
பின் தில்லை தன் மகன் பிரபு, தன் வயதான தாய் அனைவரையும் அழைத்துக்கொண்டு சிவப்பிரகாசம் வீட்டுக்குப் பெண் பார்க்கச்செல்கிறார்.
அங்கு இரு குடும்பத்துக்கும் ஒத்துப்போகிறது. நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்திற்கானப் பணிகள் நடக்கின்றன.
இதற்கிடையே ஆதிரையைச் சந்திக்கும் பிரபு, தான் செய்த தவறுகளை லாவகமாக கையாண்டதற்கு ஆதிரைக்கு நன்றி கூறினான். கூடவே ஒரு பொக்கேவையும் ஆதிரையிடம் கொடுக்க, ஆதிரையோ நடுரோட்டில் வைத்தா பொக்கே தருவது என்று கேட்க, நான் நடுரோட்டில் வைத்து தரவில்லையே.. ரோட்டின் ஓரமாக தானே வைத்து தருகிறேன் என்று வாதம் செய்தான். இதையடுத்து இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே நேரம் ஆனதை எண்ணி பதற்றப்பட்ட ஆதிரை, தான் வீட்டில் வாட்டர் கேன் போடுகிறேன் என்று சொல்லி வந்திருக்கிறேன். ஆகையால்,தான் சீக்கிரம் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று சொல்விட்டுக் கிளம்புகிறாள்.
இந்தப் பக்கம் மனோகரி தன்னுடைய பிள்ளைகளிடம் ஆதிரை எங்கே, இவ்வளவு நேரம் ஆகியும் அவள் ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று வாதம் செய்து கொண்டிருக்கிறாள்.
பிரபுவுக்கும் ஆதிரைக்கும் கல்யாணம் நடக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், ரோகிணிக்கு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு அட்மிஷன் கிடைத்திருப்பதாக தில்லை பிரபுவிடம் சொல்கிறான்.
ஆனால் அவன் முறைக்க, ரோகிணியிடம் தனியாக பேசும் தில்லை, அட்மிஷனுக்கு பிரபு சம்மதிக்கவில்லை என்றாலும், ஆதிரை இந்த வீட்டிற்கு மருமகளாக வந்த பின்னர், அவளிடம் சொல்லி பிரபுவை சம்மதிக்க வைப்பதாக உறுதி கொடுக்கிறார். இதற்கிடையே ஆதிரை சிவப்பிரகாசத்திடம் நிச்சயதார்த்தத்தை கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்ளலாமா என்று கேட்கிறாள்.
டாபிக்ஸ்