Marumagal serial: ரொமன்ஸ் மூடில் பிரபு.. முட்டுக்கட்டை போடு ஆதிரை.. கதிகலங்கிய தில்லை..' -மருமகள் சீரியலில் இன்று!-sun tv marumagal serial today promo on august serial 16 2024 aathirai meet prabhu - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: ரொமன்ஸ் மூடில் பிரபு.. முட்டுக்கட்டை போடு ஆதிரை.. கதிகலங்கிய தில்லை..' -மருமகள் சீரியலில் இன்று!

Marumagal serial: ரொமன்ஸ் மூடில் பிரபு.. முட்டுக்கட்டை போடு ஆதிரை.. கதிகலங்கிய தில்லை..' -மருமகள் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 16, 2024 12:50 PM IST

Marumagal serial: அவளுக்கு போன் போடுங்கள் என்று மனோகரி சொல்ல, ஆதிரையை காப்பாற்ற அவளுடைய குழந்தைகள் எதை எதையோ சொல்லி சமாளிக்கிறார்கள். - மருமகள் சீரியலில் இன்று!

Marumagal serial: ரொமன்ஸ் மூடில் பிரபு.. முட்டுக்கட்டை போடு ஆதிரை.. கதிகலங்கிய தில்லை..' -மருமகள் சீரியலில் இன்று!
Marumagal serial: ரொமன்ஸ் மூடில் பிரபு.. முட்டுக்கட்டை போடு ஆதிரை.. கதிகலங்கிய தில்லை..' -மருமகள் சீரியலில் இன்று!

ஆனால் அவன் முறைக்க, ரோகிணியிடம் தனியாக பேசும் தில்லை, அட்மிஷனுக்கு பிரபு சம்மதிக்கவில்லை என்றாலும், ஆதிரை இந்த வீட்டிற்கு மருமகளாக வந்த பின்னர், அவளிடம் சொல்லி பிரபுவை சம்மதிக்க வைப்பதாக உறுதி கொடுக்கிறார். இதற்கிடையே ஆதிரை சிவப்பிரகாசத்திடம் நிச்சயதார்த்தத்தை கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்ளலாமா என்று கேட்கிறாள். 

ரொமன்ஸ் மூடில் பிரபு!

நேற்றைய எபிசோடில், ஆதிரையை சந்திக்கும் பிரபு தான் செய்த தவறுகளை லாவகமாக கையாண்டதற்கு ஆதிரைக்கு நன்றி கூறினான். கூடவே ஒரு பொக்கேவையும் ஆதிரையிடம் கொடுக்க, ஆதிரையோ நடுரோட்டில் வைத்தா பொக்கே தருவது என்று கேட்க, நான் நடுரோட்டில் வைத்து தரவில்லையே.. ரோட்டின் ஓரமாக தானே வைத்து தருகிறேன் என்று வாதம் செய்தான். இதையடுத்து இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையே நேரம் ஆனதை எண்ணி பதட்டப்பட்ட ஆதிரை, நான் வீட்டில் வாட்டர் கேன் போடுகிறேன் என்று சொல்லி வந்திருக்கிறேன். ஆகையால் நான் சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்கிறாள். அதற்கு பிரபு இப்போது தான் வந்தீர்கள், அதற்குள் செல்கிறீர்களே என்று கேட்டான். ஆனாலும், அவன் சொல்வதைக் கேட்காத ஆதிரை, உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட்டாள். இந்தப் பக்கம் மனோகரி தன்னுடைய பிள்ளைகளிடம் ஆதிரை எங்கே. இவ்வளவு நேரம் ஆகியும் அவள் ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று வாதம் செய்து கொண்டிருக்கிறாள்.

தந்திரத்தை தவிடுபொடியாக்கிய மனோகரி

இதற்கிடையே, அவளுக்கு போன் போடுங்கள் என்று மனோகரி சொல்ல, ஆதிரையை காப்பாற்ற அவளுடைய குழந்தைகள் எதை எதையோ சொல்லி சமாளிக்கிறார்கள். அதற்குள் ஆதிரை அங்கு வந்து விட்டாள். இதையடுத்து மனோகரி, ஆதிரையிடம் எங்கே சென்றாய் என்று கேட்க, அவள் வாட்டர் கேன் போடச் சென்றதாகச் சொல்லி சமாளிக்கிறாள்.

ஆனால் அவள் கையில் இருக்கும் பொக்கேவை மறந்து விட்டார். இதையடுத்து மனோகரி கட்டன் ரைட்டாக வாட்டர் கேன் போடுவதற்கு பொக்கேவெல்லாம் தருகிறார்களா? என்று கேட்க, ஆதிரையோ தான் தங்கப்பதக்கம் வாங்கியதற்காக, தன்னுடைய நண்பி ஒருவர் தனக்கு வாழ்த்து சொல்லி, இந்த பொக்கேவை தந்ததாகச் சொல்லி சமாளிக்கிறாள்.

இந்த நிலையில், ஆதிரை மனோகரியின் மகள் மகன் ஆகிய மூன்று பேரும் ஜாலியாக சமாளித்து விட்டதாக சொல்லி பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், தான் ஆதிரை அப்பாவுக்கு மூர்த்தி அண்ணன் கடையில் சூப்பர் மார்க்கெட் வைத்து கொடுக்க வேண்டும். அதற்கு மனோகரி அம்மா பத்திரத்தை அடமானம் வைப்பதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கான வேலையை நாம் தொடங்க வேண்டும் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு அதிர்ச்சியான மனோகரி மகள், அதை நான் எப்படி செய்ய முடியும் என்று கேட்க, நீ மெதுவாக அது குறித்தான டாபிக்கை எடு, அதன்பின்னர் நான் வந்து சேர்ந்து கொண்டு அது பற்றி நாம் மனோகரி அம்மாவிடம் பேசலாம் என்று கூறினாள். இதையடுத்து அந்த பேச்சு நடக்கிறது. ஆனால் மனோகரி சுதாரித்து 3 பேரையும் வெளுத்து எடுக்கிறாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.