Marumagal: திருமண அவசரத்தில் தந்தை.. கெடுக்க நினைக்கும் தாய் - ஆதிரை, பிரபு திருமணம் நடக்குமா?
Marumagal: ஆதிரையின் சித்தி அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம் என நினைக்கிறார். ஆனால் அதற்கு ஆதிரை, “ இப்போ நான் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால், அப்பாவின் மனசு ரொம்ப கஷ்டப்படும் அம்மா. அப்பாவை தேவதனை செய்ய வைக்க என்னால் முடியாது ” என சொல்லிவிட்டார்.
Marumagal: சன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர், மருமகள். இந்த சீரியலில் இன்றைய எபிசோடிற்கான( ஆகஸ்ட் 13 ) ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இன்றைய ப்ரோமோ
ஆதிரையின் சித்தி அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம் என நினைக்கிறார். ஆனால் அதற்கு ஆதிரை, “ இப்போ நான் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால், அப்பாவின் மனசு ரொம்ப கஷ்டப்படும் அம்மா. அப்பாவை தேவதனை செய்ய வைக்க என்னால் முடியாது ” என சொல்லிவிட்டார்.
வேதவள்ளி, பிரபுவிற்கு பெண் பார்த்து இருக்கும் விஷயத்தை தந்தையிடம் சொல்லிவிட்டார். அதற்கு அவர், “ இதற்கு எல்லாம் காரணம் உங்க அம்மா தானா? “ என கேட்க உடபே வேதவள்ளி, ஆமாம் அப்பா எல்லாவற்றிருக்கும் அம்மா தான் காரணம் என்று ஏத்திவிட்டார். அத்துடன் இன்றைய நாளிற்கான ப்ரோமோ முடிந்தது.
நேற்றைய எபிசோட்
நேற்றைய எபிசோட்டில் திருமணத்தில் பெண் பார்க்கும் வைபவத்தில் பிரபுவும், ஆதிரையும் தனி தனியாகப் பேசுகின்றனர். அப்போது மனதில் ஆதிரை, “ ஆரம்பத்தில் பிரபு நடந்து கொள்ளும் விதத்தை வைத்து இவருக்கெல்லாம் யார் மனைவியாக வரப்போறாங்கனு யோசிச்சேன். ஆனால், எப்போது, எங்களுடைய குடும்பத்தையும் பிரபு சமமாகப் பார்க்கிறார் என்பது தெரிந்ததும் பிரபு தான் என் புருஷன்னு முடிவு பண்ணிட்டேன்’ என மனதுக்குள் நினைத்து கொள்கிறார்.
ஆதிரை தான் என் பொண்டாட்டி
ஆதிரையைப் பார்த்த பிரபு மனதுக்குள், ” எதிரிக்கு எதிரி நண்பன். எப்போது அந்த வேல்விழியை ஆதிரை அடிச்சால் என்று தெரிஞ்சதோ.. அப்பவே முடிவு பண்ணிட்டேன், ஆதிரை தான் என் பொண்டாட்டினு ’’ என்று மனதுக்குள் நினைக்கிறார், பிரபு.
பின் வீட்டிற்குச் சென்றதும் தனிப்பட்ட முறையில் பிரபு தனக்கு உங்களைப் பிடித்ததுவிட்டதாகவும்,தங்களுக்கு ஓகேவா என போனில் கேட்க, டபுள் ஓகே எனக்கூறுகிறார், ஆதிரை. இதுதான் முதல் புரோமோவில் இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது புரோமோவில், தன் தந்தை தில்லையை அழைத்துப் பேசும் பிரபு, ‘ கல்யாணம் முடிஞ்ச முதல் நாளே, தான் தனிக்குடுத்தனம் போகணும்’ என்கிறார்.
தனிப்பட்ட முறையில் தில்லை சென்று ஆதிரை சந்தித்து பேசுகிறார். அப்போது ஆதிரை தில்லையிடம், ‘’ நீங்களும் என் அப்பாவும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்ங்கிறதால், நம்ம இரண்டு குடும்பமும் ஒன்றாக இருக்கணும்னு ஆசையாக இருக்குது’’ என முடிகிறது.
ஆதிரை கூட்டு குடும்பம் வேண்டும் என்கிறாள். பிரபு தனி குடும்பத்துக்கு தயார் ஆகிறார். இருவருக்கும் திருமணம் நடக்குமா என்பதை இன்று சன் டிவியில் 8 மணிக்குப் பார்த்தால் தெரிந்துவிடும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்