Marumagal: கூட்டுக்குடும்பத்தை விரும்பும் ஆதிரை.. கல்யாணம் முடிந்த முதல்நாளே தனிக்குடும்பம் போகத்துடிக்கும் பிரபு!-marumagal serial 12th august episode aadirai who wants joint family and prabu wants to be single family what next - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal: கூட்டுக்குடும்பத்தை விரும்பும் ஆதிரை.. கல்யாணம் முடிந்த முதல்நாளே தனிக்குடும்பம் போகத்துடிக்கும் பிரபு!

Marumagal: கூட்டுக்குடும்பத்தை விரும்பும் ஆதிரை.. கல்யாணம் முடிந்த முதல்நாளே தனிக்குடும்பம் போகத்துடிக்கும் பிரபு!

Marimuthu M HT Tamil
Aug 12, 2024 01:03 PM IST

Marumagal: கூட்டுக்குடும்பத்தை விரும்பும் ஆதிரை.. கல்யாணம் முடிந்த முதல்நாளே தனிக்குடும்பம் போகத்துடிக்கும் பிரபு.. இருவருக்கும் திருமணம் நடக்குமா என்பதை மருமகள் சீரியலில் பார்த்தால் தெரிந்துவிடும்.

Marumagal: கூட்டுக்குடும்பத்தை விரும்பும் ஆதிரை.. கல்யாணம் முடிந்த முதல்நாளே தனிக்குடும்பம் போகத் துடிக்கும் பிரபு!
Marumagal: கூட்டுக்குடும்பத்தை விரும்பும் ஆதிரை.. கல்யாணம் முடிந்த முதல்நாளே தனிக்குடும்பம் போகத் துடிக்கும் பிரபு!

இன்றைய எபிசோடிற்கான புரோமா:

திருமணத்தில் பெண் பார்க்கும் வைபவத்தில் பிரபுவும் ஆதிரையும் தனித்தனியாகப் பேசுகின்றனர். அப்போது மனதில் ஆதிரை, ’ஆரம்பத்தில் பிரபு நடந்துகொள்ளும் விதத்தை வைத்து இவருக்கெல்லாம் யார் மனைவியாக வரப்போறாங்கனு யோசிச்சேன். ஆனால், எப்போது, எங்களுடைய குடும்பத்தையும் பிரபு சமமாகப் பார்க்கிறார் என்பது தெரிந்ததும் பிரபுதான் என் புருஷன்னு முடிவுபண்ணிட்டேன்’ என மனதுக்குள் நினைத்துக்கொள்கிறார்.

ஆதிரையைப் பார்த்த பிரபு மனதுக்குள், ‘எதிரிக்கு எதிரி நண்பன். எப்போது அந்த வேல்விழியை ஆதிரை அடிச்சால் என்று தெரிஞ்சதோ.. அப்பவே முடிவுபண்ணிட்டேன், ஆதிரை தான் என் பொண்டாட்டினு’’ என்று மனதுக்குள் நினைக்கிறார், பிரபு. பின் வீட்டிற்குச் சென்றதும் தனிப்பட்ட முறையில் பிரபு தனக்கு உங்களைப் பிடித்ததுவிட்டதாகவும்,தங்களுக்கு ஓகேவா என போனில் கேட்க, டபுள் ஓகே எனக்கூறுகிறார், ஆதிரை. இதுதான் முதல் புரோமோவில் இடம்பெற்றுள்ளது.

இரண்டாவது புரோமோவில், தன் தந்தை தில்லையை அழைத்துப் பேசும் பிரபு, ‘ கல்யாணம் முடிஞ்ச முதல் நாளே, தான் தனிக்குடுத்தனம் போகணும்’ என்கிறார்.

தனிப்பட்ட முறையில் தில்லை சென்று ஆதிரை சந்தித்து பேசுகிறார். அப்போது ஆதிரை தில்லையிடம், ‘’ நீங்களும் என் அப்பாவும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்ங்கிறதால், நம்ம இரண்டு குடும்பமும் ஒன்றாக இருக்கணும்னு ஆசையாக இருக்குது’’ என முடிகிறது.

ஆதிரை கூட்டுக்குடும்பம் வேண்டும் என்கிறாள். பிரபு தனிக்குடும்பத்துக்கு தயார் ஆகிறார். இருவருக்கும் திருமணம் நடக்குமா என்பதை இன்று சன் டிவியில் 8 மணிக்குப் பார்த்தால் தெரிந்துவிடும்.

முந்தைய எபிசோட்:

மருமகள் சீரியலில் தாய் அற்ற பிள்ளைகளை வளர்த்து வரும் சிவப்பிரகாசம், வாட்டர் கேன் பிசினஸ்செய்து வரும் நிலையில், தேவா என்னும் இன்னொரு வாட்டர் கேன் பிசினஸ் செய்துவருபவரிடம் இருந்துபோன் வருகிறது. அதில் சிவப்பிரகாசத்தின் வாகனம் தங்கள் வசம் இருப்பதாகச் சொல்கிறார், தேவா. இதைத்தொடர்ந்து தேவாவின் இடத்துக்குச்சென்று அதை மீட்கப்பேசும் சிவப்பிரகாசத்தைக் கத்தியை வைத்து குத்தப்பார்க்கிறார், தேவா.

அப்போது உள்ளே புகும் சிவப்பிரகாசத்தின் மூத்த மகள் ஆதிரை, அவர்களிடம் சண்டைபோட்டு தன் தந்தையைக் காப்பாற்றுகிறார். இதுவேல்விழி நடத்திய சதி என்பதை உணர்ந்த ஆதிரை, அவர்களை அடித்து ஓட விட்டதுபோல உன்னையும் அடித்து ஓட விட்டுவிடுவேன் என்கிறார். அப்போது வேல்விழியோ பதிலுக்கு உன்னை தான் அடிக்கமாட்டேன் என்றும்,உன் மனம் நோகும்படிதான் மரண அடியாக அடிப்பேன் என்றும் எச்சரிக்கிறாள்.

இந்தப் பிரச்னைக்குப் பின், சிவப்பிரகாசம் தன் மகள் ஆதிரையை முதலில் திருமணம்செய்துகொள்ள வலியுறுத்துகிறார். பின், இதைத்தொடர்ந்து பெண் கேட்ட தன் நண்பன் தில்லையிடம் சிவப்பிரகாசம், தன் மகள் திருமணத்துக்குச் சம்மதித்துவிட்டாள் என்று சொல்கிறார். இதையடுத்து பெண் பார்க்கும் படலம் நடக்கிறது.

பின் தில்லை தன் மகன் பிரபு, தன் வயதான தாய் அனைவரையும் அழைத்துக்கொண்டு சிவப்பிரகாசம் வீட்டுக்குப் பெண் பார்க்கச்செல்கிறார்.

அப்போது சிவப்பிரகாசம்,தனக்கு அம்மா சோறு கொடுத்த நிகழ்வுகளை எல்லாம்பேசி நெகிழ்ச்சியாகிறார். வாசலில் சிறிதுநேரம் போனில் பேசிவிட்டு, தனியாகப் பெண் பார்க்கும் வீட்டிற்குள் வரும் பிரபுவுக்கு தான், மனதிற்குள் விரும்பிய வாட்டர்கேன் போடும் பெண்ணின் வண்டியைப் பார்த்ததும் குஷியாகிவிடுகிறான். அதனைத்தொடர்ந்து பெண்ணின் வீட்டில் மகிழ்ச்சியாகப் போய் அமர்கிறான், பிரபு.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.