Top 10 Cinema News: மவுனம் கலைத்த மம்மூட்டி முதல் சூர்யாவிற்கு நன்றி சொன்ன ரஜினி வரை - டாப் 10 சினிமா நியூஸ்!
Sep 01, 2024, 06:27 PM IST
Top 10 Cinema News: மவுனம் கலைத்த மம்மூட்டி, கங்குவா அப்டேட், சூர்யாவிற்கு நன்றி சொன்ன ரஜினி உள்ளிட்ட இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
இன்றைய (செப்டம்பர் 01, 2024) டாப் 10 சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
மவுனம் கலைத்த மம்மூட்டி
ஹேமா கமிட்டி பரிந்துரைகளை நான் வரவேற்கிறேன். தவறு செய்தவர்களுக்கான தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்யும். அதேவேளையில், சினிமாவில் அதிகார மையம் என்று எதுவும் இல்லை. சினிமா வாழ வேண்டும் என்று மலையாள நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ளார்.
கங்குவா அப்டேட்
கங்குவா படம் தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவே பெருமைப்படும் அளவிற்கு வந்திருக்கிறது. ரசிகரோடு ரசிகராக அந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. கண்டிப்பாக விரைவில் அப்டேட் வரும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.
ஹேமா கமிட்டி அறிக்கை - ரஜினி சொன்ன பதில்
திரையுலகில் புயலை கிளப்பி இருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திம் இன்றைய தினம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.
கூலி படத்தில் இணைந்த கன்னட நடிகர் உபேந்திரா
வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 'கூலி' படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா நடிக்கவுள்ளதை படக்குழு அதிகார்ப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்தில் அவர் கலீஷா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
'சரிபோதா சனிவாரம்' பாக்ஸ் ஆபிஸ் விபரம்
நானி, பிரியங்கா மோகன், எஸ். ஜே சூர்யா நடித்துள்ள 'சரிபோதா சனிவாரம்' திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சரிபோதா சனிவாரம் படம் வெளியாகிய முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ.52.18 கோடி வசூலை ஈட்டியுள்ளது
'தி கோட்' சூப்பர் ஸ்டாருக்கான கதை - வெங்கட் பிரபு
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட்' படத்தின் கதையை தான் முதன்முதலில் எழுதும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்குத்தான் எழுதியதாக இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'தி கோட்' படத்தின் கதையை தான் கொரோனா ஊரடங்கு காலத்தில் எழுதியதாகவும், இந்தக் கதையை முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தனுஷை மனதில் வைத்து எழுதியதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அதன் பின்னர்தான் இந்தப் படம் விஜய் சாருக்கு சொன்னதாகவும் இரண்டு கதாபாத்திரங்களிலும் அவரே நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
செல்வராகவன் உருக்கம்
'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்காக பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் வெளிப்படையாக வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். அந்த வீடியோவில், 'ஆயிரத்தில் ஒருவன்' கொடுத்த ரணங்கள், வலிகள், காயங்கள் என மனம் முழுக்க வலித்துக் கொண்டே தான் இருக்கும். அவ்வளவு வலியை யாருமே அனுபவித்திருக்க மாட்டார்கள். அந்தப் படம் தொடங்கப்பட்ட போது புதிய அனுபவத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ஜெயசூர்யா
என் மீதான பொய்யான பாலியல் புகார்களால் நானும், என் குடும்பத்தினரும் நொறுங்கிப் போயுள்ளோம் என்று மலையாள நடிகர் ஜெயசூர்யா கூறியுள்ளார்.
நடிகர் பாலய்யாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
சினிமா துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் பாலய்யாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், 'ஆக்ஷன் கிங்! கலெக்ஷன் கிங்! டயலாக் டெலிவரி கிங்! என்னுடைய அன்புச் சகோதரர் பாலய்யா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த ரஜினி
சூர்யாவின் அன்பிற்கும், பாசத்திற்கும் நன்றி. அவரின் 'கங்குவா' படமும் நல்லா போகனும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவி்ததுள்ளார். 'வேட்டையன்' ரிலீஸை ஒட்டி 'கங்குவா' ரிலீஸை தள்ளி வைப்பதாக நடிகர் சூர்யா கூறியது தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினி இவ்வாறு பதிலளித்துள்ளார்.
டாபிக்ஸ்