Kanguva Release Postponed: ’ரஜினியின் வேட்டையன் படம் எதிரொலி!’ கங்குவா ரிலீஸ் தள்ளி வைப்பு! ஜகா வாங்கினார் சூர்யா!
Kanguva Release Postponed: நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படமும், நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதாக இருந்தது.

Kanguva Release Postponed: ’ரஜினியின் வேட்டையன் படம் எதிரொலி!’ கங்குவா ரிலீஸ் தள்ளி வைப்பு! ஜகா வாங்கினார் சூர்யா!
வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விநியோகிஸ்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வரும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி அக்டோர் 10ஆம் தேதி அன்று கங்குவா திரைப்படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றய தினமே ரஜினி காந்த் நடித்த வேட்டையன் திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமை விஜயதசமியும், அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமையும் தொடர் விடுமுறை நாளாக வருகின்றது.