The GOAT: 'தி கோட்' ரஜினிக்கான கதையா?..உண்மையை உடைத்த இயக்குநர் வெங்கட் பிரபு..விஜய் ரசிகர்கள் ஷாக்!-director venkat prabhu says the goat film script was first wrote for rajinikanth - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Goat: 'தி கோட்' ரஜினிக்கான கதையா?..உண்மையை உடைத்த இயக்குநர் வெங்கட் பிரபு..விஜய் ரசிகர்கள் ஷாக்!

The GOAT: 'தி கோட்' ரஜினிக்கான கதையா?..உண்மையை உடைத்த இயக்குநர் வெங்கட் பிரபு..விஜய் ரசிகர்கள் ஷாக்!

Karthikeyan S HT Tamil
Sep 01, 2024 04:12 PM IST

The GOAT: 'தி கோட்' படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு உடன் முதல் முறையாகவும், இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் இரண்டாவது முறையாகவும் விஜய் இணைந்து உள்ளார்.

The GOAT: 'தி கோட்' ரஜினிக்கான கதையா?..உண்மையை உடைத்த இயக்குநர் வெங்கட் பிரபு..விஜய் ரசிகர்கள் ஷாக்!
The GOAT: 'தி கோட்' ரஜினிக்கான கதையா?..உண்மையை உடைத்த இயக்குநர் வெங்கட் பிரபு..விஜய் ரசிகர்கள் ஷாக்!

AI தொழில்நுட்பத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்

'தி கோட்' திரைப்படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் AI தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடித்துள்ளதைப் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.

இரட்டை வேடத்தில் விஜய்

மிகுந்த பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் தளபதி விஜய் நடித்துள்ளார். இதற்காக அமெரிக்கா சென்ற அவர், அதி நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தனது உடல் அமைப்பு, தோற்றம், அசைவுகள் உள்ளிட்டவற்றை துல்லியமாக பதிவு செய்தார். 'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு வி எஃப் எக்ஸ் செய்த லோலா நிறுவனம் 'கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளில் பங்காற்றி இருப்பது ஆகும்.

யுவன் சங்கர் ராஜா இசை

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்துக்கான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.

நான்கு பாடல்கள்

'தி கோட்' படத்தில் இருந்து இதுவரை 4 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ‘தி கோட்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், விசில் போடு, ஏப்ரல் 14 சித்திரை முதல் நாளை ஒட்டி ரிலீஸ் செய்யப்பட்டது. அடுத்து நடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி, தி கோட் படத்தின் 2-வது பாடலான ’சின்ன சின்ன கண்கள்’ பாடல் ரிலீஸானது. இப்பாடலில் அடுத்து தி கோட் படத்தில் இருந்து ‘ஸ்பார்க்’ பாடல் வெளியானது. அதைத் தொடர்ந்து, 4-ஆவதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை ஒட்டி, ஆகஸ்ட் 31ஆம் தேதி 'மட்ட’ என்னும் பாடலை ‘தி கோட்’ படக்குழு வெளியிட்டது.

முதன்முறையாக விஜயுடன் இணைந்த வெங்கட் பிரபு

'தி கோட்' படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு உடன் முதல் முறையாகவும், இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் இரண்டாவது முறையாகவும் விஜய் இணைந்து உள்ளார்.

சூப்பர்ஸ்டாருக்கான கதை

இந்நிலையில் 'தி கோட்' படத்தின் கதையை தான் முதன்முதலில் எழுதும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்குத்தான் எழுதியதாக இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'தி கோட்' படத்தின் கதையை தான் கொரோனா ஊரடங்கு காலத்தில் எழுதியதாகவும், இந்தக் கதையை முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தனுஷை மனதில் வைத்து எழுதியதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அதன் பின்னர்தான் இந்தப் படம் விஜய் சாருக்கு சொன்னதாகவும் இரண்டு கதாபாத்திரங்களிலும் அவரே நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.