Vettaiyan: ‘குறி வச்சா இரை விழனும்..’ -சூர்யாவுடன் மோதும் ரஜினிகாந்த்! -வேட்டையன் ரிலீஸ் தேதி இங்கே!
Vettaiyan: ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வெளியாகும் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாக இருக்கிறது.

லைகா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'வேட்டையன்' அக்டோபர் 10 2024-அன்று வெளியாகிறது. இதன் மூலம் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தோடு வேட்டையன் மோதுவது உறுதியாகி இருக்கிறது.
ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'வேட்டையன்'. ரஜினிகாந்தின் 170 வது திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தை ஜெய்பீம் திரைப்பட புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். பேட்ட, தர்பார், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய பிறகு அவர் நான்காவது முறையாக மீண்டும் இந்தப்படத்தில் ரஜினியுடன இணைந்திருக்கிறார்.
அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அந்தா கனூன், கெராஃப்தார் மற்றும் ஹம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக இந்தப்படத்தில் இணைந்து இருக்கின்றனர். மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் இந்தப்படத்தில் ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் பான்-இந்தியா சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.
