ஹாஸ்டலில் இருந்து துரத்தப்பட்ட ஆனந்தி.. தன் வீட்டில் தங்க வைக்க முயற்சிக்கும் மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Oct 11, 2024, 11:12 AM IST
ஹாஸ்டலில் இருந்து துரத்தப்பட்ட ஆனந்தி.. தன் வீட்டில் தங்க வைக்க முயற்சிக்கும் மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பது குறித்துப் பார்ப்போம்.
தினமும் இரவு 9 மணிக்கு சன் டிவியில் சிங்கப்பெண்ணே ஒளிபரப்பாகிறது. இந்நிலையில், அக்டோபர் 11ஆம் தேதிக்கான புரோமோ வெளியாகியிருக்கிறது.
இன்றைய எபிசோட்:
சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோவில் கதையின் நாயகியான ஆனந்தி, தன்னுடன் ஹாஸ்டலில், தங்கியிருக்கும் காயத்திரியைக் காப்பாற்றுவதற்காக, விடுதியின் சுற்றுச்சுவரில் இருந்து ஹாஸ்டலுக்குள் குதிக்கிறார்.இதைப் பார்த்த ஹாஸ்டலின் வார்டன், ’’ஆனந்தியை வெளியில் அனுப்பச்செய்வதைத் தவிர, வேறு வழியில்லை’’ எனச்சொல்லி, வெளியில் அனுப்பிவிடுகிறாள். அதன்பின் ஆனந்தியின் ஹாஸ்டலுக்கு காரில் வந்து இறங்கும் மகேஷ், ஆனந்தியின் நிலையை அறிந்து அவளை அழைத்துக்கொண்டு, தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது மகேஷின் தாய் , ஆனந்தியை தன் வீட்டில் தங்க அனுமதிக்கமாட்டேன் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். பின் அவரை அழைத்துக்கொண்டு அன்புவின் வீட்டுக்குச் செல்லும் மகேஷ், ஆனந்தியை அன்புவின் வீட்டில் தங்க வைக்குமாறு கேட்கிறார். இதனால் சொல்வது அறியாமல் அதிர்ச்சிக்கு ஆளாகிறார், அன்பு.
அன்புவின் வீட்டில் தங்கப்போகும் ஆனந்தி:
மற்றொரு சிங்கப்பெண்ணே புரோமோவில், ஆனந்தியை தன் வீட்டில் தங்க வைக்க முயற்சி எடுக்கும் மகேஷை பார்த்து அவரது தாய், ‘ இவள் இந்த வீட்டில் தங்கினாள், நான் இந்த வீட்டில் தங்கமாட்டேன்’ என உறுதியாகச் சொல்கிறார். மேலும் தான் அழுது புலம்பியதற்கும் ஆனந்தி வெளியில் போனதற்கும் நீ தான் காரணம் என ஆனந்தியின் மேனேஜர் பெண்ணைப் பார்த்துச் சொல்கிறார். பரபரப்பான இந்தச் சூழலில் சிங்கப்பெண்ணே சீரியல் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நேற்றைய எபிசோட்:
சுவர் ஏறி ஹாஸ்டலுக்குள் வரும் ஆனந்தி அனைவரும் முன்னிலையில் மாட்டிக்கொள்கிறாள். அப்போது ஹாஸ்டலின் வார்டனிடம், ஆனந்தியினை பழிவாங்கத்துடிக்கும் மற்றும் மகேஷை ஒருதலையாகக் காதலிக்கும் மேல் அதிகாரி மித்ரா, அப்பிரச்னையைக் கொம்புசீவி விடுகிறார். குறிப்பாக அப்பெண், ‘’சொன்னால் நம்பமாட்டேன் சொன்னீங்க. இப்போது கையும் களவுமாக மாட்டுனாளா’’என ஹாஸ்டல் வார்டனிடம் போட்டுவிடுகிறாள். இதனால் ஆத்திரமான வார்டன், ‘ஏன் ஆனந்தி சுவர் ஏறி குதிச்சு வர்ற’ எனக் கேட்கிறார். இதனால் அனைவர் முன்னிலையில் ஆனந்தி தலைகுனிவைச் சந்திக்கிறார்.
ஆனந்தியை சிக்கலில் மாட்டிவிட்ட மித்ரா:
வார்டனும் விடாமல் ‘ஏன் சுவர் ஏறி குதிச்சு வர்ற’ எனக் கேட்கிறார். உடனே அவ்விடம் வருகிறார், டெலிவரி பணிசெய்யும் ஆனந்தியின் தோழி. இருப்பினும், ஆனந்தியின் உயர் அதிகாரி மித்ரா, ‘என்ன மேடம் திரும்ப திரும்ப அவளிடம் காரணம் கேட்குறீங்க. நல்ல விஷயத்துக்காக போயிருந்தால் உங்ககிட்ட தகவல் சொல்லிட்டு போயிருப்பாள். வரும்போது கேட் வழியே வந்திருப்பாள். அவள் ஏதோ திருட்டுத்தனம் பண்ணப்போயிருக்காள். அதனால் தான் இப்படி சுவர் ஏறி குதிச்சு வருகிறாள். இனிமேல் இவளுக்குத் தண்டனை தான் கொடுக்கணும்’ என ஏற்றிவிடுகிறாள்,மித்ரா.
அப்போது ஆனந்தி, ஹாஸ்டலின் வார்டனிடம் ஹாஸ்டலின் விதியை மீறி ஏன் நடந்தாய் எனக் கேட்டு, அதற்கான காரணத்தைக் கேட்க முயற்சிக்கிறார். உடன் தங்கியிருக்கும் பெண்கள், ஆனந்தி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கின்றனர். அப்போது ஹாஸ்டல் வார்டன் நடந்ததைச் சொல்லவில்லை என்றால் உன் கேரக்டரை பிறர் தவறாகப் புரிந்துகொள்வர் என்று எச்சரிக்கிறார். மேலும், அழகன் விஷயத்தில் ஆனந்திக்கு நடந்தது பற்றியும், அன்புவுடன் குடோனில் தங்கிய விஷயம் எவ்வாறு திரிக்கப்பட்டது பற்றியும் ஹாஸ்டல் வார்டன் எடுத்துரைக்கிறார். அப்படியே நேற்று முடிந்தது.
டாபிக்ஸ்