Singapenne Serial: அழகன் இல்லையா.. காதலை தியாகம் செய்யும் அன்பு - அப்போ ஆனந்தி காதலுக்கு என்ன நிலைமை?
Singappenne Serial: ஆனந்தி, " அழகன் யார் அவனை இன்றாவது நான் பார்க்கலாமா? " என்று கேட்டார். இதனால் கடுப்பான அன்பு, " இனிமேல் அழகன் வரமாட்டான். அவன் செத்துப் போய் விட்டான் " என்றார்.

Singappenne Serial: சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து இன்று ( அக். 25 ) வெளியான புரோமோவில், அதில், தங்களது சொந்த நிலத்தை மீட்க உதவிய அன்புவை பற்றி ஆனந்தி மிகவும் உயர்வாக தன்னுடன் வேலை பார்க்கும் ஜெயந்தி மற்றும் முத்துவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் பணத்தை தான் கொடுத்து உதவவில்லை மகேஷ் தான் கொடுத்தார் என்று சொல்ல முடியாமல் குற்ற உணர்ச்சியில் இருக்கிறார் அன்பு.
காதலை புரிந்து கொள்ள வேண்டும் ஆனந்தி
மற்றொரு பக்கம் அன்புவை அழைத்து மகேஷ், " என் காதலை ஆனந்தி புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவள் மனதிற்குள் இருக்கும் அழகன் அழிய வேண்டும். அதை உன்னால் மட்டுமே செய்ய முடியும் அன்பு" என்றார்.
உணவு இடைவேளை முடித்த பிறகு அன்பு மற்றும் ஆனந்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆனந்தி, " அழகன் யார் அவனை இன்றாவது நான் பார்க்கலாமா? " என்று கேட்டார். இதனால் கடுப்பான அன்பு, " இனிமேல் அழகன் வரமாட்டான். அவன் செத்துப் போய் விட்டான் " என்று கோபமாக சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார்