Singapenne serial: பழிவாங்க கிளம்பிய ஆனந்தி; போட்டுக்கொடுத்த மித்ரா.. பதற்றத்தில் மகேஷ்! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று-sun tv singapenne serial today latest episode promo on august 28 th and 2024 anbu attacked by fighters - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: பழிவாங்க கிளம்பிய ஆனந்தி; போட்டுக்கொடுத்த மித்ரா.. பதற்றத்தில் மகேஷ்! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று

Singapenne serial: பழிவாங்க கிளம்பிய ஆனந்தி; போட்டுக்கொடுத்த மித்ரா.. பதற்றத்தில் மகேஷ்! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று

Kalyani Pandiyan S HT Tamil
Aug 28, 2024 03:32 PM IST

Singapenne serial: இன்னொரு பக்கம் செல்வி கையில் பச்சை குத்திக் கொண்டு கருகருவன ஒருத்தன் சுத்தி கொண்டு இருந்தான் என்று ஆனந்திடம் சொல்ல, அவனை நான் சும்மா விட மாட்டேன் என்று அவள் கிளம்புகிறாள். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne serial: பழிவாங்க கிளம்பிய ஆனந்தி; போட்டுக்கொடுத்த மித்ரா.. பதற்றத்தில் மகேஷ்! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று
Singapenne serial: பழிவாங்க கிளம்பிய ஆனந்தி; போட்டுக்கொடுத்த மித்ரா.. பதற்றத்தில் மகேஷ்! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று

இதற்கிடையே மித்ரா மகேஷின் அப்பாவிற்கு ஃபோன் செய்து மகேஷ் இங்கிருக்கும் பிரச்சினைகளுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று போட்டுக் கொடுக்கிறாள். இன்னொரு  பக்கம் செல்வி கையில் பச்சை குத்திக் கொண்டு கருகருவன ஒருத்தன் சுத்தி கொண்டு இருந்தான் என்று ஆனந்திடம் சொல்ல, அவனை நான் சும்மா விட மாட்டேன் என்று அவள் கிளம்புகிறாள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

சிங்கப்பெண்ணே சீரியலில், நேற்றைய தினம் அன்பும், ஆனந்தியும் செல்வியை பள்ளியில் விட்டுச் சென்று திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது, ரவுடிகள் சில பேர், அவர்கள் வண்டியின் மீது டயரை விட்டார்கள். இதில் தடுமாறிய அன்பு, வண்டியை நிறுத்தினான். நிறுத்திய அடுத்த கனமே ரவுடிகள் அவனை அடிக்கப் பாய்ந்தார்கள். 

ஆனால், அன்பு முதலில் நிதானமாக பேசினான். தேவையில்லாத பிரச்சினை வேண்டாம். என் அருகில் ஒரு பெண் இருக்கிறாள். எதுவாக இருந்தாலும் பின்னர் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று சமாதானம் பேசினான். ஆனால் ரவுடிகள் அதைக் கேட்ட பாடில்லை. மாறாக, தாங்கள் கொண்டு வந்திருந்த கட்டைகளைக் கொண்டு அன்புவை அடிக்க பாய்ந்தார்கள். 

அன்பை விட்டு விடுங்கள்

வேறு வழியில்லாமல் அன்பும், சண்டைக்குச் செல்ல வேண்டிய நிலைமை வந்துவிட்டது. இதற்கிடையே அவர்களுக்கும் அன்புக்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. அவர்கள் அடித்ததில் அன்புவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த ஆனந்தி தயவுசெய்து அன்பை விட்டு விடுங்கள் என்று ரவுடிகளிடம் எவ்வளவோ கெஞ்சி, கூத்தாடி பார்த்தாள்.  

ஆனால் ரவுடிகள் கடைசிவரை கேட்காமல், அன்புடன் சண்டை செய்வதிலேயே குறியாக இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அன்பு அவர்களை சமாளிக்கும் நிலைக்கு வந்து விட்டான். அவர்களை அடித்துக் கொண்டிருக்கும் பொழுதே, பின்னால் அரவிந்த் வந்துவிட்டான்.  

அவனை அடிக்க ரவுடிகளை அனுப்பினால், ரவுடிகள் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்களே என்று கடுப்பான அரவிந்த், முகமூடியை போட்டுக்கொண்டு தானே களத்தில் இறங்கினான். அன்பு அடித்துக் கொண்டிருக்கும் போதே, பின்னாலிருந்து வந்தவன் அன்பு தலையில் ஓங்கி அடித்தான். அதன் பின்னர் அரவிந்தும், அன்பும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அன்புவால் அரவிந்தை சமாளிக்க முடியவில்லை. 

இதையடுத்து திடீரென உள்ளே புகுந்த மகேஷ், அரவிந்தை வெளுத்து வாங்கினான். இதை பார்த்த இதர ரவுடிகள் தலைதெறித்து ஓடினார்.மகேஷ் எவ்வளவோ முயன்றும் அரவிந்தின் முகமூடியை கழட்ட முடியவில்லை. இதையடுத்து ஆனந்தி முதலில் அன்புவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்துவோம் என்று சொல்ல, மகேஷ் ஆனந்தி அன்பை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த செய்தியை அன்புவின் அம்மாவிடம் அவர்கள் சொல்ல, அவரோ அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். இதற்கிடையே அன்பை அடிக்காமல் போன விரக்தியில் அரவிந்த் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தான்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.