Singappenne: மகேஷிடம் உதவி கேட்ட ஆனந்தி.. மீண்டும் வருவாரா அன்பு? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Singappenne: ஜெயந்தி, சௌந்தர்யா, முத்துவிடம், “ யார் சொன்னால் அன்பு வருவார் என்று எனக்கு தெரியும். மகேஷ் சார் பேசுவாரு “ என்று அதிர்ச்சி கொடுத்தார் ஆனந்தி.

Singappenne: சிங்கப் பெண்ணே சீரியலில் இருந்து இன்று ( அக். 4 ) வெளியான புரோமோவில், ஜெயந்தி, ஆனந்தி, சௌந்தர்யா ஆகியோர் அன்பு வீட்டிற்கு சென்றார்கள். லோன் பணம் கட்ட முடியாமல் தவிக்கும் காயத்ரியின் விஷயம் எப்படியோ மித்ராவுக்கு தெரிந்து போனது. அதனால் அவர் உதவி செய்வது போல் ஆனந்தி விஷயத்தை தெரிந்து கொள்ள நினைக்கிறார்.
மித்ராவிடன், காயத்ரி, “ லோன் பணம் செலுத்த எப்படியும் பணம் கிடைத்துவிடும் அல்லவா ? “ என கேள்வி கேட்கிறார். அதற்கு மித்ரா, “ பண விஷயத்தை பற்றி நீ கவலைப்பட வேண்டாம், நான் பார்த்து கொள்கிறேன் “ என்றார். அதை மேல் இருந்து ஆனந்தி பார்த்துவிடுகிறார். எதனால் மித்ராவிடம், காயத்ரி பேசி கொண்டு இருக்கிறார் என யோசிக்கிறார்.
அதிர்ச்சி அடைந்த மகேஷ்
மறுபக்கம் மகேஷுக்கு நிறைய லெட்டர் வந்து இருக்கிறது. அதை பாதுகாவலர் வந்து கொடுக்கிறார். வழக்கம் போல் அதை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து அவர் சென்றார். உடனே அவர், ” ஆனந்தி உங்களிடம் கொடுக்க சொல்லி கொடுத்தார் ” என்றார். உடனே அதிர்ச்சி அடைந்து அதை வாங்கி கொண்டார் மகேஷ்.
