தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வீட்டு நாயை வேட்டை நாய் ஆக்கிவிட்டோம்.. இது ஆரம்பம் தான்.. எச்சரித்த வைரமுத்து

வீட்டு நாயை வேட்டை நாய் ஆக்கிவிட்டோம்.. இது ஆரம்பம் தான்.. எச்சரித்த வைரமுத்து

Oct 14, 2024, 10:33 PM IST

google News
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருமழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை வந்த நிலையில் அதுகுறித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருமழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை வந்த நிலையில் அதுகுறித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருமழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை வந்த நிலையில் அதுகுறித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மழை நீர் தேங்கும் பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.

பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் கடந்த 2 நாட்களாகவே கோவை, சேலம், சென்னை, காஞ்சிபுரம், நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அதுமட்டுமின்றி, வீடுகள், கோயில்கள், பேருந்துகள் மழையில் சிக்கி பெரும் சேதங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளும், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேப்போல புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தடையற்ற பால் விநியோகம்

கனமழையை காரணம் காட்டி மக்களின் அத்தியாவசிய தேவையான பால் விநியோக்தை நிறுத்தவோ, தாமதமாக்கவோ கூடாது என ஆவினுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, தங்கு தடையின்றி ஆவின் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளிலும், அதிக பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளிலும் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வீட்டிலிருந்து பணிபுரிய கோரிக்கை

இந்த நிலையில், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை கருத்தில்கொண்ட மக்கள் வேளச்சேரி மேம்பாலத்தில் முன்னெச்சரிக்கையாக தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

வேளச்சேரி மேம்பாலத்தில் படையெடுத்த வாகனங்கள்

சிறுமழைக்கே வேளச்சேரி பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், மக்கள் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு போக்குவரத்தை மேலும் பாதிக்க வைத்தனர். இந்நிலையில், மேம்பாலத்தில் வாகனத்த நிறுத்திய வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்திருந்தனர். மேலும், வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு அரசு அலுவலர்கள் தொடர் கண்காணி்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்துடன், மழை சமயத்தில் தேவையான உதவிகளைப் பெற அவசர உதவி எண்ணையும் வெளியிட்டுள்ளனர்.

வைரமுத்து கருத்து

இந்த நிலையில், பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து மழை குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,

பெருமழை

பெய்யக்கூடும்

வெள்ளத்தின் போக்குவரத்தில்

கால்வாய்களாகக்கூடும்

சாலைகள்

தரையில் குதித்துத்

தற்கொலை

செய்துகொள்ளக்கூடும்

மேகங்கள்

ஏன்?

இயற்கை என்ற

வீட்டு நாயை

வேட்டை நாய்

ஆக்கிவிட்டான் மனிதன்

புவி வெப்பம்

பருவநிலை மாற்றம்

எல்நினோ

எல்லாம்கூடி

மாற்றி மாற்றி எழுதுகின்றன

பூகோளத்தை

இதுவொரு தொடக்கம்தான்

ஜனவரி வரைக்கும்

ஜனத்துயர் இருக்கலாம்

எதிர்கொள்வோம்

அனைத்தும் கடப்போம்;

அனுபவம் பெறுவோம்

மக்களோடு அரசு

அரசோடு மக்கள்

சேரும் நேரம்

தீரும் சிக்கல்

விடியாத இரவுமில்லை;

வடியாத வெள்ளமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் அனைவரும் இயற்கையை சிதைத்ததால் வீட்டு நாயாக இருந்த அது வேட்டை நாயாக மாறிவிட்டது என்றும், இந்த மழை வெறும் ஆரம்பம் மட்டும் தான் ஜனவரி மாதத்தில் மக்கள் மழையால் பெரும் துயரை சந்திக்க நேரிடலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி