TOP 10 NEWS: ’அதி கனமழை எச்சரிக்கை முதல் வடகிழக்கு பருவமழை வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!
TOP 10 NEWS: வடகிழக்கு பருவமழை காலம், அதிகனமழை எச்சரிக்கை, ஜி.என்.சாய்பாபாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல், சென்னையில் மேம்பாலங்கள் கட்ட திட்டம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
1.பக்கிம்காம் கால்வாயில் ஆய்வு
சென்னை பக்கிம்காம் கால்வாயின் முகத்துவாரம் அமைந்து உள்ள முட்டுக்காட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
2.வடகிழக்கு பருவமழை தொடக்கம்
சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் பேட்டி. வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளில் அக்டோபர் 15, 16 ஆகிய தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தகவல்.
3.அக்டோபர் 16ஆம் தேதி அதிகனமழை எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் அக்டோபர்16ஆம் தேதி அன்று அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
4.ஜி.என்.சாய்பாபா மறைவுக்கு முதல்வர் இரங்கல்
பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா மறைவு மனித உரிமை செயல்பாட்டு சமூகத்துக்கு பேரிழப்பு ஒதுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக போராடியவர் ஜி.என்.சாய்பாபா சிவில் உரிமைகளை பாதுகாக்க ஜி.என்.சாய்பாவின் நெஞ்சுரம் வாய்மைக்கான நிலைத்த அடையாளம்; அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
5.சென்னையில் புதிய மேம்பாலங்கள்
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நெசன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் 3ஆவது அவென்யூ சாலைகளில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு திட்டம்.
6.ஈ.பி.எஸ்க்கு எம்.ஆர்.கே கேள்வி
கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதானதற்காக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவருக்கு வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை திமுக அரசு மீட்டு கலைஞர் பூங்காவை உருவாக்கினால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் கோபம் வராது? என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கேள்வி.
7.திமுக அரசு மீது எல்.முருகன் விமர்சனம்
"முழுக்க முழுக்க வேதனையான ஆட்சி. சொத்து வரி, மின் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு. டாஸ்மாக் கடைகளை மூடுவோம்னு சொல்லிட்டு மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள்” திறக்கப்பட்டு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்.
8.போக்சோ கைதி தற்கொலை
புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட போக்சோ வழக்கு விசாரணைக் கைதி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது. அஜாக்கிரதையாக செயல்பட்டதாக இரு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். போக்சோவில் கைதாகி சிறையில் இருந்த ரமேஷ் (46) என்பவர் வலிப்புநோய் காரணமாக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு களைக்கொல்லி மருந்தைக் குடித்து அவர் தற்கொலை செய்துள்ளார். பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக நவநீதகிருஷ்ணன், வல்லரசு ஆகிய இரு காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை.
9.கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து வழக்குப்பதிவு
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு அளித்த புகாரின் பேரில் கொருக்கு பேட்டை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
10.ரயிலில் தொங்கிய சிறுவன் படுகாயம்
சென்னை ராயபுரத்தில் ரயிலில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்த 16 வயது சிறுவன் மின் கம்பத்தில் மோதி படுகாயம், சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

டாபிக்ஸ்