EPS: 'மழைநீர் வடிகால் அமைக்காமல் கமிஷன் வாங்குவதில் அரசு குறியாக இருந்துள்ளது' - ஈபிஎஸ்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps: 'மழைநீர் வடிகால் அமைக்காமல் கமிஷன் வாங்குவதில் அரசு குறியாக இருந்துள்ளது' - ஈபிஎஸ்

EPS: 'மழைநீர் வடிகால் அமைக்காமல் கமிஷன் வாங்குவதில் அரசு குறியாக இருந்துள்ளது' - ஈபிஎஸ்

Marimuthu M HT Tamil
Dec 09, 2023 02:40 PM IST

மழை நீர் வடிகால் அமைக்கும் பணியினை இரண்டரை ஆண்டு காலம் கிடப்பில் போட்டுவிட்டு திமுக அமைச்சர்கள் கமிஷன் வாங்குவதிலேயே குறியாக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

'மழை நீர் வடிகால் பணிகள் 90% நிறைவடைந்துவிட்டதாக முன்பு தெரிவித்துவிட்டு தற்போது 51% தான் முடிவடைந்துள்ளதாக முதலமைச்சரும் அமைச்சர்களும் பொய் பேசுகின்றனர்’ - ஈபிஎஸ்
'மழை நீர் வடிகால் பணிகள் 90% நிறைவடைந்துவிட்டதாக முன்பு தெரிவித்துவிட்டு தற்போது 51% தான் முடிவடைந்துள்ளதாக முதலமைச்சரும் அமைச்சர்களும் பொய் பேசுகின்றனர்’ - ஈபிஎஸ்

வடசென்னை பகுதிகளில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிவாரணப்பொருட்களை வழங்கிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

அதில், ''மழை நீர் வடிகால் பணிகள் 90% நிறைவடைந்துவிட்டதாக முன்பு தெரிவித்துவிட்டு தற்போது 51% தான் முடிவடைந்துள்ளதாக முதலமைச்சரும் அமைச்சர்களும் பொய் பேசிக் கொண்டிருக்கின்றனர். மழை நீர் வடிகால் அமைக்கும் பணியினை இரண்டரை ஆண்டு காலம் கிடப்பில் போட்டுவிட்டு திமுக அமைச்சர்கள் கமிஷன் வாங்குவதிலேயே குறியாக இருந்தனர். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, திமுக இளைஞரணி மாநாட்டில் செலவழித்த நேரத்தையும் காட்டிய அக்கறையையும் சென்னை மக்கள் மீது காட்டி இருந்தால் பெருமளவு சேதாரத்தை குறைத்திருக்கலாம்.

தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு வாரமாக எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அப்போது உறங்கிய அரசு இயந்திரம், திடீரென பெருமழை பெய்தபின் அரசு என்ன செய்யமுடியும். தலைமைச்செயலர் மழை பெய்தபிறகுதான், மோட்டாரை கொண்டு வந்து தேங்கிய நீரை அப்புறப்படுத்த முடியும் என்கிறார், இது எவ்வளவு வேடிக்கையானது. ஆனால், முதலமைச்சர் சொல்கிறார் இந்தியாவுக்கே வழிகாட்டியான மாநிலம் தமிழ்நாடு என்கிறார், எதில் ஊழல் செய்வதில்! கமிஷன், கலெக்‌ஷன், கரெப்ஷனில் முதல் இடம் பெறுகின்றனர்' என்றார்.

மேலும் புயல் பாதிப்பு தொடர்பாக திமுக ஆட்சியில் முன்கூட்டியே அலுவலர்கள் நியமனம் செய்யப்படவில்லை எனவும்; மண்டல வாரியாக முறையாக அதிகாரிகளை நியமித்து ஆலோசனைகளை அரசு வழங்கவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். அதேபோல், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர் எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.