தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விடுதலை 2வில் நடந்த எலும்பு முறிவு.. என் அப்பா சொன்ன அந்த வார்த்தை பலிச்சது.. எமோஷனலாகப் பேசிய கென் கருணாஸ்

விடுதலை 2வில் நடந்த எலும்பு முறிவு.. என் அப்பா சொன்ன அந்த வார்த்தை பலிச்சது.. எமோஷனலாகப் பேசிய கென் கருணாஸ்

Marimuthu M HT Tamil

Dec 22, 2024, 03:36 PM IST

google News
விடுதலை 2வில் நடந்த எலும்பு முறிவு.. என் அப்பா சொன்ன அந்த வார்த்தை என எமோஷனலாகப் பேசிய கென் கருணாஸ் குறித்துப் பார்ப்போம்.
விடுதலை 2வில் நடந்த எலும்பு முறிவு.. என் அப்பா சொன்ன அந்த வார்த்தை என எமோஷனலாகப் பேசிய கென் கருணாஸ் குறித்துப் பார்ப்போம்.

விடுதலை 2வில் நடந்த எலும்பு முறிவு.. என் அப்பா சொன்ன அந்த வார்த்தை என எமோஷனலாகப் பேசிய கென் கருணாஸ் குறித்துப் பார்ப்போம்.

விடுதலை 2வில் நடந்த எலும்பு முறிவு மற்றும் என் அப்பா சொன்ன அந்த வார்த்தை என எமோஷனலாகப் பேசிய கென் கருணாஸ் குறித்துப் பார்ப்போம். 

விடுதலை இரண்டாம் பாகத்தில் நடித்த நடிகர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

அதில் முதலாவதாக கென் கருணாஸ் பேசுகையில், ‘’பதற்றமாக இருக்கு. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக விடுதலை 2 படம் மாறுனதுக்கு நான் வெற்றிமாறன் சாருக்கு, இந்த மேடையில் நான் பெரிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு நிறையபேர் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

உதவி இயக்குநராக சுத்திட்டு இருந்தேன். வெற்றி சார் ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, ஒன்னே ஒன்னுதான் சொன்னார். கோவணம் கட்டணும்டான்னு சொன்னார். சரி சார்னு சொன்னேன். அது மட்டும் தான் எனக்குத்தெரியும்.

என் மண்டையை இப்படி வெட்டப்போறாங்கன்னு அப்போதான் தெரியும்: கென் கருணாஸ்

சூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனதுக்குப் பின் தான், என் பெயர் கருப்பன் என்று எனக்குத் தெரியும். என் மண்டையை இப்படி வெட்டப்போறாங்கன்னு தெரியும். வீட்டுக்கே என்னை அடையாளம் தெரியாத மாதிரி என்னை இப்படி ஆக்கிட்டாங்க. இந்தப் படத்தில் வொர்க் செய்யும்போது, தான் எனக்கு விலா எலும்பு முறிந்தது.

அங்கு சேறும் சகதியுமாக இருந்ததால் யாருக்கும் அங்கு கிரிப்பே இல்லை. அந்த ஃபைட்டுல தான் எனக்கு எலும்பு முறிவு ஆச்சு. அதை என் அப்பாகிட்ட சொல்லும்போது, கவலையே படாத, அது எல்லாம் தியேட்டரில் கத்தும்போது தெரியாதுன்னு சொன்னார்.

அதனால் நான் எல்லோருக்கும் நன்றி சொல்றேன். இந்தப் படத்தில் கருப்பனா நான் செய்த இந்த கேரக்டர். என்னை மொத்தமாக மாற்றியது என் இயக்குநர் வெற்றிமாறன் சார் தான். அவர் தான் எனக்கு எல்லாமே சொல்லிக்கொடுத்தார்.

என் தந்தையின் வாழ்த்து - கென் கருணாஸ்

சிதம்பரமாக இருந்த எனக்கு கருப்பன் மாதிரி ஒன்னு வரும்னு இந்தப் படத்தில் பண்ணுனதுக்கப்புறம் தான் தெரியும். எங்கப்பா என்னை எப்போதும் வாழ்த்தமாட்டார்.

எதுவும் சொல்லமாட்டார். முதல் பரிசு வாங்கிட்டேன் என்று என் அப்பாவிடம் சொன்னால் கூட, அங்கு வைச்சிட்டுப்போன்னு சொல்லிடுவார். என்ன ஒரு ஃபீலிங்ஸே இல்லாமல் இருக்கார்னு தோணும். விடுதலை 2 படத்தைப் பார்த்திட்டு, ரொம்ப நல்ல பண்ணியிருக்கனு தட்டிக்கொடுத்தார். சந்தோஷமாக இருந்தது. அது எக்ஸ்பிரஸே பண்ணமுடியாத ஃபீலிங்ஸில் இருந்துச்சு. விடுதலை 2 என்னுடைய வாழ்க்கையை ரொம்ப மாற்றியிருக்குனு நான் ரொம்ப நம்புறேன்'' என்றார்.

போராட்டங்கள் எல்லாமே எல்லாரும் இன்புற்றிருக்கத்தான்: நடிகர் தமிழ்

இதைத்தொடர்ந்து பேசிய நடிகர் மற்றும் இயக்குநர் தமிழ், ‘’ இந்த திரைப்படத்தில் மகாலட்சுமியின் அழுகை ஒவ்வொரு தாய்மார்களின் அழுகை. போராட்டங்கள் எல்லாமே எல்லாரும் இன்புற்றிருக்கத்தான். அதனால் தான் தோழர்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். நிறைய தோழர்களுக்கு அந்த அங்கீகாரம் கிடைக்காமல் கூட போயிருக்கலாம். ஆனால், அவர்களை நினைவுகூறவேண்டும் என்பது நமது கடமை.

தமிழர்கள் வந்து எல்லாத்தையும் நினைவுகூறுபவர்கள். அந்த வகையில் இந்தப் படம் பல தோழர்களை நினைவுபடுத்துவது கொண்டாட்டமாகப் பார்க்கிறேன்.

ஒரு காட்சிக்காக இரண்டு மணிநேரம் மலையில் ஏறி, நடந்து சென்று எடுப்போம். ஏன் இப்படி கஷ்டப்படணும்னு இருக்குல, ஒரு படைப்புக்காக இவ்வளவு கஷ்டப்பணும்னு இருக்குறதுதான் வெற்றி அண்ணனோட மிகப்பெரிய விசயமாகப் பார்க்கிறேன்.

வெற்றிமாறன் அண்ணன்கூட நான் வொர்க் செய்யும் ஐந்தாவது படம். ஒரு நாள் கூட பிரிவியூ போட்டதே கிடையாது. தன்னால் எவ்வளவு பெஸ்ட் கொடுக்கமுடியுமோ, அதுவரை உழைத்துக்கொண்டே இருப்பார்'’என்ற நடிகர் தமிழ் பேசியுள்ளார்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி