‘தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர் மன்றத்தைதான் உருவாக்குவர்..’; விடுதலை 2 -வில் வெற்றிமாறன் விஜயை தாக்கி இருக்கிறாரா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர் மன்றத்தைதான் உருவாக்குவர்..’; விடுதலை 2 -வில் வெற்றிமாறன் விஜயை தாக்கி இருக்கிறாரா?

‘தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர் மன்றத்தைதான் உருவாக்குவர்..’; விடுதலை 2 -வில் வெற்றிமாறன் விஜயை தாக்கி இருக்கிறாரா?

Kalyani Pandiyan S HT Tamil
Dec 20, 2024 04:05 PM IST

இன்று வெளியாகி இருக்கும் விடுதலை இரண்டாம் பாகத்தில் வெற்றிமாறன் விஜயை தாக்கி இருக்கிறாரா? இல்லையா என்பதை இங்கே பார்க்கலாம்.

‘தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர் மன்றத்தைதான் உருவாக்குவர்..’; விடுதலை 2 -வில் வெற்றிமாறன் விஜயை தாக்கி இருக்கிறாரா?
‘தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர் மன்றத்தைதான் உருவாக்குவர்..’; விடுதலை 2 -வில் வெற்றிமாறன் விஜயை தாக்கி இருக்கிறாரா?

விடுதலை பாகம் 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், அமுதன் வாத்தியாரை பிடிக்க, அரசு அதிகாரிகளால் டி கம்பெனியின் ஓசியாக பணியமர்த்தப்பட்டு இருப்பார். இன்னொரு பக்கம், வாத்தியாரை காப்பாற்றும் நோக்கத்தில் மக்கள் படையினர் அவரை அழைத்துக்கொண்டு, காட்டை விட்டு கீழே இறங்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பர். இதனை அமுதன் தன்னுடைய போலீஸ் படையை வைத்து தடுப்பார். இதில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடக்கும்.

 

 

விடுதலை படத்தில் விஜய்சேதுபதி
விடுதலை படத்தில் விஜய்சேதுபதி

ஒரு கட்டத்தில் போலீஸ் தரப்பின் ஆயுதங்களுக்கும், படைகளுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் வாத்தியார் தரப்பு திணறும். அப்போது வாத்தியார் விஜய்சேதுபதி தான் இருப்பதை விட, தன் தத்துவம் அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும் என்று போலீசிடம் சரணடையும் முடிவை எடுப்பார். அப்போது அவரை காப்பாற்றும் முயற்சியில் இருக்கும் இளைஞர்கள் உங்களுக்காக நாங்கள் உயிரை விடக்கூட தயார் என்பர். அந்த இடத்தில்தான் வாத்தியார் தத்துவம் இல்லாத தலைவர் ரசிகர் மன்றத்தை உருவாக்குவர். அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது என்று கூறி அவர்களை அங்கிருந்து தப்ப வைத்து தான் போலீசில் சரணடைவார். ஆக, இங்கு எங்கேயும் வெற்றிமாறன் விஜயை தாக்கவில்லை. அந்த வசனம் அந்த சூழ்நிலைகாக எழுதபட்டதாக இருக்கிறது.

விடுதலை 2 படம் எப்படி இருக்கிறது?

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி,விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ், சேத்தன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இன்று வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 1. இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், இந்தப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

கதையின் கரு என்ன?

முதல் பாகத்தில் போலீசுக்கும், மக்கள் படைக்கும் இடையே நடந்த மோதல், வாத்தியாரின் கைது, அதிகாரிகளின் அதிகார வர்க்கம் மக்களுக்கு எதிராக நடத்திய வெறியாட்டம் உள்ளிட்டவற்றை திரைக்கதையாக கொடுத்த வெற்றிமாறன், இந்த பாகத்தில் மக்கள் படை உருவான கதை, வாத்தியார் கம்யூனிசம் பாதையை தேர்ந்தெடுத்தற்கான காரணம், போலீசுக்கும், மக்கள் படைக்கும் இடையேயான போரில் ஜெயித்தது யார்? குமரேசனின் குற்ற உணர்வு அவனை என்ன செய்தது உள்ளிட்டவற்றை திரைக்கதையாக கொடுத்திருக்கிறார்.

வெற்றிமாறனுடன் விஜய்சேதுபதி
வெற்றிமாறனுடன் விஜய்சேதுபதி

கடந்த பாகம் முழுக்க முழுக்க குமரேசன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சூரியை சுற்றி இருந்த நிலையில், இந்த பாகம் முழுக்க, முழுக்க வாத்தியார் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த விஜய் சேதுபதியை சுற்றி அமைந்திருக்கிறது.

படம் முழுக்க வாத்தியாராக விரவி கிடக்கிறார் விஜய் சேதுபதி. வெற்றிமாறன் வழியே வாத்தியாராக அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் சமுதாயத்திற்கான பாடம். வாத்தியாரின் வாழ்கையில், வெவ்வேறு பருவங்களில் அவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு நடித்திருப்பது சிறப்பு. குறிப்பாக வயதான தோற்றத்தில் அவர் வெளிப்படுத்தும் மேனரிசங்கள் அல்டிமேட்.

அவரது மனைவியாக மஞ்சு வாரியர். தைரியமும், தெளிவும் நிறைந்த பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். மஞ்சு வாரியருக்கும், விஜய் சேதுபதிக்கான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. டி கம்பெனியின் ஓசியாக வரும் சேத்தன் காமெடி, வில்லனிசம் என இரண்டிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். ராஜீவ் மேனன் நடிப்பு புருவம் விரியவைக்கிறது. வாத்தியாரின், வாத்தியாராக வரும் கிஷோரின் நிதானம் கம்யூனிசம் கொள்கைகளை கனகச்சிதமாக உணரவைக்கிறது. சூரி பெரிதாக தெரியவில்லை. கென் கருணாஸின் ஆக்‌ஷன் அதகளம்.

வெற்றிமாறனின் அரசியல்

வாத்தியார் கதாபாத்திரத்தை உருவாக்கிய வெற்றிமாறன், வாத்தியார் தேர்ந்தெடுத்த கம்யூனிச பாதையில், பண்ணையார்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்திய வன்முறை, அவர்களுக்கு எதிராக மக்கள் வன்முறையை கையில் எடுத்ததால் நடந்த விபரீதங்கள், உயர் சாதி பெண்களை தாழ்த்தப்பட்ட ஆண்கள் காதலிப்பதற்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில், கணவன், மனைவி எப்படி இருக்க வேண்டும்? அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் அலட்சியமாக நடத்தும் கொலைகள் சரியானதா? அதிகார வர்க்கத்துக்கு ஜாதிய ஏற்றத்தாழ்வு எவ்வளவு உறுதுணையாக இருக்கிறது? ஒற்றுமையின் பலம் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை திரைக்கதையாக வடித்து கொடுத்து இருக்கிறார்.

காட்சிகள் சுவாரசியமாக, விறுவிறுப்பாக சென்றாலும், கம்யூனிசம் பாதையில் இடம்பெற்ற அதிகபட்ச வசனங்கள் கொட்டாவியை வரவழைக்கின்றன. இளையராஜா இன்னும் தரமான பின்னணி இசையை கொடுத்திருக்க வேண்டும். வழக்கம் போல வெற்றி மாறன் படத்தில் இடம்பெறும் டப்பிங் பிரச்சினை இந்த படத்திலும் இருக்கிறது.

 

 

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.