வீடியோவைப் பார்த்து ஷாக் ஆன கீர்த்தி.. அட்லியைப் பார்த்து என்ன சொன்னார் தெரியுமா? டைரக்டருக்கு வந்த சோதனை..
Dec 22, 2024, 01:32 PM IST
அட்லி எடுத்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கீர்த்தி சுரேஷ் சொன்ன வார்த்தை தான் இப்போது பாலிவுட், கோலிவுட்டில் ஒரே பேச்சு.
கீர்த்தி சுரேஷ், தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கோவாவில் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில நாட்களுக்குப் பிறகு, கீர்த்தி சுரேஷ் அவர் நடித்த பேபி ஜான் படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
துபாய்க்கு பறந்த பேபி ஜான் குழு
இந்நிலையில், பேபி ஜான் படத்தின் புரொமோஷனுக்காக கீர்த்தி சுரேஷ், வருண் தவான், அட்லி, அவரது மனைவி பிரியா ஆகியோர் துபாய் சென்றனர்.
அங்கு பிரியாவும் கீர்த்தி சுரேஷும் போட்டோக்கு போஸ் கொடுத்து நின்று கொண்டிருக்கையில் அட்லியோ போட்டோ எடுப்பதற்கு பதிலாக வீடியோ எடுத்துள்ளார். ஆனால், இதை அவருக்கே தெரியாமல் வருண் தவான் வீடியோ எடுத்து வந்தார்.
கிண்டலடித்த வருண் தவான்
வீடியோ எடுத்தது மட்டுமின்றி, சார் நீங்க எவ்ளோ பெரிய டைரக்டர். ஆனா நீங்க இப்படி போட்டோகிராஃபர் ஆகிட்டிங்களே என கிண்டலாக கேட்டார்.
அப்போது அட்லி இது எல்லாம் வாழ்க்கை பாடம் சார் (life lessons) என கூற, வேண்டும் என்றே வருண் தவான் மனைவி கற்றுக் கொடுத்த பாடமா (wifes lessons) என கிண்டலாக கேட்டார்.
அதிர்ச்சியான கீர்த்தி
இந்நிலையில், இவர்கள் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் பிரியாவும் கீர்த்தி சுரேஷும் போட்டோவைப் பார்க்க வந்தால், அட்லி போட்டோவிற்கு பதில் வீடியோ எடுத்து வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது, கீர்த்தி என்னடா வீடியோ எடுத்து வச்சிருக்க என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பேசினார். அதையும் சேர்த்து வருண் தவான் வீடியோ எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.
இப்பொழுது இந்த வீடியோ தான் பாலிவுட் முதல் கோலிவுட் வரை ட்ரெண்ட் ஆகி வருகிறது. பலரும் கீர்த்தி சுரேஷின் அப்பாவித்தனமான ரியாக்ஷனை குறிப்பிட்டு வருகின்றனர்.
பேபி ஜான் பட விழாவில் கீர்த்தி
சமீபத்தில், பேபி ஜான் படக்குழு படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் மும்பையில் கிறிஸ்துமஸ் விருந்துக்கு ஏற்பாடு செய்தது. புதுமணத் தம்பதியான கீர்த்தி சுரேஷ் தனது சக நடிகர்களான வருண் தவான் மற்றும் வாமிகா கப்பி ஆகியோருடன் இந்த நிகழ்ச்சியில் இணைந்தார். நடிகர் ஒரு சிவப்பு பாடிகான் உடை அணிந்து வந்த கீர்த்தி சுரேஷ் கழுத்தில் அவரது தாலியுடன் தோற்றமளித்தார். மறுபுறம், வருண் சிவப்பு ஜாக்கெட்டுடன் வெள்ளை டி-ஷர்ட் அணிந்திருந்தார், வாமிகா சிவப்பு லெதர் உடையில் காணப்பட்டார்.
பாரம்பரியத்தை கடைபிடிக்கும் கீர்த்தி
இதைக் கண்ட ரசிகர்கள், திருமணத்திற்கு பின் கீர்த்தி பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் வைரலான நிலையில், நெட்டிசன் அவரது புகைப்படத்தை வைரலாக்கினர், அத்துடன் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பின் பளபளப்பாக காணப்படுகிறார் என்று ஒருதரப்பும், தாலியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றதால், அவர் பாரம்பரியத்தை பின்பற்றுபவர் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.
பாலிவுட்டில் அறிமுகம்
கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் பேபி ஜான் திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது. காலீஸ் இயக்கியுள்ள இப்படம் தமிழில் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெறி படத்தின் தழுவலாக பேபி ஜான் உருவாகியுள்ளது. இந்த படத்தில் வருண் தவான் ஹீரோவாகவும், சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் வாமிகா கப்பி, ஜாரா ஜியானா மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் நடிக்கின்றனர்,
கீர்த்தி சுரேஷ் படங்கள்
இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷுக்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது. இவர் கதையின் நாயகியாக நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ரகு தாத்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் உச்ச நடிகையாக இருக்கும்போது திருமணம் செய்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பாரா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
டாபிக்ஸ்