இது தான் பல்ஸ்.. இத கெட்டியா புடிச்சிட்டா நாம்ம தான் கிங்.. எதை சொல்கிறார் அட்லி?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இது தான் பல்ஸ்.. இத கெட்டியா புடிச்சிட்டா நாம்ம தான் கிங்.. எதை சொல்கிறார் அட்லி?

இது தான் பல்ஸ்.. இத கெட்டியா புடிச்சிட்டா நாம்ம தான் கிங்.. எதை சொல்கிறார் அட்லி?

Malavica Natarajan HT Tamil
Dec 18, 2024 05:58 PM IST

இயக்குநர் அட்லி தன் படங்கள் ஏன் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் ஹிட் அடிக்கின்றன என்பதற்கான ரகசியத்தை பொது வெளியில் கூறியுள்ளார்.

இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் எது? என் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கு காரணம் என்ன? ரகசியத்தை சொன்ன அட்லி
இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் எது? என் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கு காரணம் என்ன? ரகசியத்தை சொன்ன அட்லி

தொடர் விமர்சனத்தை சந்தித்த அட்லி

அதன்பின், ராஜா ராணி என்னும் படத்தை எடுத்தார். இந்தப் படம் ஹிட் அடித்தாலும் படத்தை பலரும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து அட்லி எடுத்த தெறி மெர்சல், பிகில் போன்ற படங்களை எடுத்தார். இந்த அத்தனை படங்களும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட். அப்படி இருந்தும் இவரை மற்ற படங்களில் இருந்து காப்பி அடித்து படம் எடுப்பதாக விமர்சித்து வந்தனர்.

இந்தியாவின் வெற்றி இயக்குநர்

இந்த நிலையில் தான் அவர், பல விமர்சனங்களுக்கு மத்தியில் ஹிந்தி சினிமாவிற்கு சென்று ஷாருக் கானை வைத்து ஜவான் எனும் திரைப்படத்தை எடுத்தார். இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி 1000 கோடி வசூலைப் பிடித்தது. இதனால் அட்லி இந்திய அளவில் முக்கிய இயக்குநராக மாறிவிட்டார்.

இந்நிலையில், அவரின் தெறி படத்தை மையமாக வைத்து ஹிந்தியில் பேபி ஜான் எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளனர். இந்தப் படம் கிருத்துமஸை முன்னிட்டு வரும் 25ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அட்லி பிங்க் வில்லா எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அந்தப் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

நம்பிக்கையை காப்பாற்றிய அட்லி

அந்தப் பேட்டியில் தன்னுடைய படங்கள் ஏன் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கின்றன என்ற காரணத்தை விளக்கி உள்ளார். இந்திய மக்களைப் பொறுத்தவரை ரிஸ்க் எடுப்பது தான் மாஸ்.

இங்கு மாஸ் என்றால் ஒரு தாய் உணர்வு என வைத்துக் கொள்ளுங்கள்.

உதாரணமாக நான் ஜவான் படத்தின் கதையை ஷாருக் கான் சாரிடம் கூறியபோது, அவரிடம் விக்ரம் ரத்தோர் எனும் கதாப்பாத்திரம் நிச்சயம் மக்களால் கொண்டாடப்படும் எனக் கூறினேன். அப்போது அவர் அதை நம்பவில்லை. பின் படம் வெளியான உடன் இந்தியா மொத்தமும் அந்த கதாப்பாத்திரத்தை கொண்டாடியது.

எது மாஸ்?

அதற்கு காரணமும் இருக்கிறது. ஒரு பெண்ணுக்காக கண்ணீர் விடும்போது, ஒரு உணர்ச்சிக்காக கண்ணீர் விடும்போது, ஒரு குழந்தைக்காக கண்ணீர் விடும்போது, ஒரு தாய் கண்ணீர் விடும் போது அது வெகுஜன மக்களை பாதிக்கிறது.

ஒருவருக்கு சரியான காரணத்திற்காக கோபம் வந்தால் அதுவே மாஸ். நீங்கள் உண்மையில் சமூகத்திற்காக நிற்கும்போது, அதை வெகுஜன மக்கள் கொண்டாடுவர். இது தான் உண்மையாக மக்கள் விரும்புவது. இதை தெரிந்து கொண்டதால் தான் என்னுடைய அனைத்து படங்களும் மக்கள் மனதில் இடம் பிடித்தன. அவை பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டும் அடித்தன என்றார்.

விமர்சனத்திற்கு பதிலடி

முன்னதாக, ஷாருக்கானுடன் ஐபிஎல் பார்க்க சென்ற இயக்குநர் அட்லீயைப் பலரும் காப்பி மன்னன் என்றும், ஷாருக்கான் அருகில் நிற்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது; அவரை வைத்து படத்தை இயக்கமுடியுமா என்று பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். அப்போது அவற்றுக்குப் பதிலாக, நடிகர் ஷாருக்கானும் இயக்குநர் அட்லீயும் ‘ ஜவான்’ படத்தில் இணைவதாக அறிவிப்பு வெளியிட்டு விமர்சித்தவர் வாயை அடைத்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.