உண்மை அறிந்து மன்னிப்பு கேட்ட வேதவள்ளி.. வளர்ப்பு சரிதான்.. பாடம் எடுத்த கயல்.. இன்றைய எபிசோட்
Oct 26, 2024, 08:38 AM IST
அன்பு மேல் அபாண்டமாக பொய் குற்றச்சாட்டை முன்வைத்ததை அறிந்த வேதவள்ளி கயல் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்ததில் இருந்து, கயல் அண்ணன் மூர்த்தி குறித்து விசாரித்து வந்த சமயத்தில் கயலின் அத்தை வேதவள்ளி அன்பு மீது அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தவறான தகவலால் சண்டை
மூர்த்தி கத்திக்குத்துடன் வலி பொறுக்க முடியாமல் சரிந்ததைக் கண்ட அன்பும், ஷாலினியும் மூர்த்தியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு மூர்த்திக்கு சிகிச்சை அளிக்க தாமதமாவதால் ஷாலினி அன்புவிடம் அழுததை பார்த்து, அவரது அம்மா வேதவள்ளியிடம் தவறான தகவல் கொடுக்கப்பட்டது.
அதை உண்மை என நம்பிய வேதவள்ளி, அன்பு என் மகளை கர்ப்பமாக்கி விட்டான் எனக் கூறி கயல் குடும்பத்தினரிடம் சண்டையிட்டு வந்தாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கயல் குடும்பத்தினர் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் தவித்தனர்.
உண்மை அறியும் கயல்
பின், அன்பு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவன் அல்ல என கயல் குடும்பத்தினரும் கயல் குடும்பத்திற்கு ஆதரவாக எழிலும் வேதவள்ளியை சமாதானம் செய்தனர்.
ஆனால், ஆத்திரம் அடங்காத வேதவள்ளி குடும்பத்தினர், இனி உங்கள் குடும்பத்தினருடன் எந்த உறவும் இல்லை என கடுமையாக பேசினார். இதனால் , கயல் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், மூர்த்தியின் உடல்நிலை குறித்து கயலுக்கு தெரியவருகிறது.
பின் மூர்த்தி கத்திக்குத்துடன் சிகிச்சை பெற்று வருவதயும், அவர் கயல் பெயரையும் அவரது மனைவி தனம் பெயரையும் தொடர்ந்து கூறிக்கொண்டே இருப்பதையும் அறிந்த கயல் இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்.
மூர்த்தியின் சத்தியத்திற்கு கட்டுப்பட்ட அன்பு - ஷாலினி
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், மூர்த்தியின் நிலையை கண்டு வேதனையில் மருத்துவமனைக்கு சென்றனர். பின், அங்குள்ள அன்பு மற்றும் ஷாலினியிடம் உண்மையை கேட்டு தெரிந்து கொண்டனர். இதையடுத்து, அன்புவும் ஷாலினியும் கர்ப்பத்தைக் கலைக்க மருத்துவமனைக்கு வரவில்லை. அவர்கள் மூர்த்திக்கு உதவவே மருத்துவமனைக்கு வந்துள்ளனர் என்பதை குடும்பத்தினர் அனைவரும் அறிந்தனர்.
மன்னிப்பு கேட்ட வேதவள்ளி
பின் உண்மையை தெரிந்து கொண்ட வேதவள்ளி கயலின் அம்மாவிடமும் கயலிடமும் மன்னிப்பு கேட்டார். அப்போது. என் மகன் நீங்கள் நினைத்த எந்த காரியத்தையும் செய்ய மாட்டான். நீங்கள் கொஞ்சம் பொறுமையாக பேசி இருந்திருக்கலாம் என கூறினார்.
வகுப்பெடுத்த கயல்
தொடர்ந்து வேதவள்ளி கயலிடமும் மன்னிப்பு கேட்டார். அபபோது பேசிய கயல், என்னிடம் மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம். இங்கு அன்பும், ஷாலினியும் மூர்த்தி செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முயன்று குற்றவாளிகள் போல் நிற்கின்றனர். உங்களிடம் யார் என்ன சொல்லி அனுப்பினார்கள் எனத் தெரியாது. இங்கு என் அம்மாவின் வளர்ப்பும் தவறு இல்லை. உங்கள் வளர்ப்பும் தவறு இல்லை. அது சரியாகத் தான் இருந்திருக்கிறது. அதற்கு இந்த பிரச்சனையே உதாரணம் எனக் கூறினார்.
அந்த சமயத்தில் மருத்துவர் மூர்த்திக்கு சிகிச்சை அளித்துவிட்டு வெளியே வந்த நிலையில், அவரிடம் மூர்த்தியின் உடல்நிலை குறித்து கேட்க அனைவரும் தயாராகினர். இது சம்மந்தமான வீடியோவை சன் டிவி வெளியிட்டுள்ளது. மேலும் தேவையான தகவல்களைப் பெற இரவு 7.30 மணிக்கு கயல் சீரியலைக் காணலாம்,
டாபிக்ஸ்