காலில் விழுந்ததால் காப்பாற்றப்படும் மூர்த்தி.. அபசகுணமாக நினைக்கும் கயல்.. இன்றைய எபிசோட்
திருமணம் முடிந்தும் அண்ணனை பார்க்காததால் அண்ணன் மூர்த்திக்கு ஏதோ பெரிய பிரச்சனை இருப்பதாக எண்ணி கயல் மிகவும் வருத்தப்படுகிறாள்.

திருமணம் முடிந்த கையோடு மறு வீட்டிற்கு வந்த கயல் அண்ணன் மூர்த்தியைக் காணாமல் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார். அந்த சயமத்தில் அவரது அண்ணி முகத்தில் பொட்டும் குங்குமமும் இல்லாமல் இருப்பதைக் கண்ட கயல் அதுகுறித்து விசாரிக்கிறார். அதை கவனித்த அவரது அண்ணியும் குங்குமம் வைக்க முயற்சி செய்யும் போது, குங்குமம் தவறி விழுகிறது.
அபசகுணமாக நினைக்கும் கயல்
இந்த செயல்கள் அனைத்தும் கயலிற்கு ஒருவிதமான குழப்பத்தை தொடர்ந்து ஏற்படுத்தியது. இதனால், ஆழந்த சிந்தனையில் இருக்கும் கயல், வீட்டில் நடப்பதெல்லாம் பார்த்தால் மிகவும் அபசகுணமாக இருக்கிறது. மூர்த்தி ஏதோ பெரிய பிரச்சனையில் மாட்டி இருக்கிறார் என கயல் எழிலிடம் கூறி வருத்தமடைகிறார்.
மகளின் திருமணத்திற்காக காய் நகர்த்தல்
இது இப்படி இருக்க, கயலின் அத்தையிடம், உன் மகள் ஏன் மருத்துவமனைக்கு சென்றார் தெரியுமா என கேள்வி எழுப்பி, புதிய பிரச்சனையும் ஆரம்பிக்கிறது. எப்படியாவது தன் மகளின் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்ற ஆசையில் இப்படிப்பட்ட செயல்களில் இவர் ஈடுபட்டு வருகிறார்.
தவிக்கும் அன்பு
முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூர்த்திக்கு வலி நிவாரணி மட்டும் கொடுத்துவிட்டு சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர் கூறி விடுகிறார். தனது அண்ணனை காப்பாற்ற பல முயற்சிகளை செய்தும் அன்புவால் மருத்துவரை சமாதானம் செய்ய முடியவில்லை. அதேசமயம் வலியால் துடிக்கும் அண்ணனை விட்டு எங்கேயும் செல்ல மனதும் வரவில்லை.
காலில் விழுந்து வேண்டுகோள்
இந்நிலையில், கயலின் அத்தைப் பெண் வேறொரு மருத்துவரிடம் கெஞ்சி காலில் விழுந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறார். இந்த சமயத்தில் தனக்கு இப்படி நடந்தது குறித்து கயலிற்கு தெரிய லேண்டாம். அவளை அபசகுணமாக நினைப்பர் என மூர்த்தி அன்பிடம் வேண்டுகிறார்.
தன் மாமா ரவுடி எல்லாம் இல்லை அவரும் குடும்பஸ்தன் தான். இவருக்கு எப்படி இதெல்லாம் நடந்தது. இவரை யார் குத்தினார்கள் என எங்களுக்கு தெரியாது. எப்படியாவது அவரை காப்பாற்றுங்கள் என மருத்துவரிடம் வேண்டிக் கேட்டுக்கொள்ள சிகிச்சை அளிக்க அவரும் சம்மதிக்கிறார்.
என்ன செய்ய போகிறார் கயல்
இதனால், மூர்த்தியின் உயிர் காப்பாற்றப்படுமா? கயலுக்கு உண்மை தெரியவருமா? மூர்த்தியை இந்த நிலைக்கு ஆளாக்கிய தீபிகாவின் தந்தையை கயல் என்ன செய்ய உள்ளார் என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர்
அம்மாவின் ஆசைக்காக, தான் இதுவரை வெறுத்து ஒதுக்கி வந்த பெரியப்பா, பெரியம்மா, அத்தை வீடு என அனைத்து சொந்தங்களை அனுசரித்து, அவர்களிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆன கயல் மூர்த்தியின் நிலையை அறிந்தால் என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்