Kayal serial: கடவுளாய் காப்பாற்றிய கயல்; சதி செய்த வடிவு.. காயப்போட்டு வெளுத்த வேதவள்ளி! -கயல் சீரியலில் இன்று!-sun tv kayal serial today latest episode promo on august 22 th and 2024 vedavalli angry because of vadivu speech - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: கடவுளாய் காப்பாற்றிய கயல்; சதி செய்த வடிவு.. காயப்போட்டு வெளுத்த வேதவள்ளி! -கயல் சீரியலில் இன்று!

Kayal serial: கடவுளாய் காப்பாற்றிய கயல்; சதி செய்த வடிவு.. காயப்போட்டு வெளுத்த வேதவள்ளி! -கயல் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 22, 2024 01:41 PM IST

Kayal serial: ஆனால் அதை தர்மலிங்கமும், வடிவும் திசை திருப்ப முயற்சிக்க, வேதவள்ளியோ எனக்கு கயல் மீது உண்மையாகவே பாசம் வந்துவிட்டது என்று உடைத்து பேசுகிறார். - கயல் சீரியலில் இன்று!

Kayal serial: கடவுளாய் காப்பாற்றிய கயல்; சதி செய்த வடிவு.. காயப்போட்டு வெளுத்த வேதவள்ளி! -கயல் சீரியலில் இன்று!
Kayal serial: கடவுளாய் காப்பாற்றிய கயல்; சதி செய்த வடிவு.. காயப்போட்டு வெளுத்த வேதவள்ளி! -கயல் சீரியலில் இன்று!

அதில், நெகிழ்ந்து போன வேதவள்ளி, கயல் மீது அன்பை பொழிகிறாள். ஆனால் அதை தர்மலிங்கமும், வடிவும் திசை திருப்ப முயற்சிக்க, வேதவள்ளியோ எனக்கு கயல் மீது உண்மையாகவே பாசம் வந்துவிட்டது என்று உடைத்து பேசுகிறார். இதை பார்த்து தர்மலிங்கம் அதிர்ச்சி அடைகிறார். இது தொடர்பான நிகழ்வுகள் கயல் சீரியலில் இன்று இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம். 

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

நேற்றைய தின எபிசோடில், அன்புவிற்கும், வேதவள்ளிக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் வேதவள்ளி டென்ஷனாக, ஒரு கட்டத்தில் அவருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. இந்த நிலையில் கயல் அன்பின் உதவியோடு, அவளுக்கு முதலுதவி செய்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றாள். அவரை பரிசோதித்த மருத்துவரும்முன்னமே முதல் உதவி செய்த காரணத்தால் அவரை மிகவும் எளிதாக காப்பாற்ற முடிந்தது என்று கூறி அதை செய்த கயலை பாராட்டினார். 

இதையடுத்து விக்னேஷும் அங்கே வர, ஷாலினியும் அவனும் உள்ளே சென்று வேதவள்ளியை பார்த்தார்கள் அப்போது ஷாலினி, வேதவள்ளியை பார்த்து ஏன் இப்படி கோபப்படுகிறாய்? கயல் மீதும், அன்பு மீதும் உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்பம் அவர்கள் இன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நீங்கள் உயிரை பிழைத்திருக்க முடியாது. மற்றவர்களை கஷ்டப்படுத்தி, மற்றவர்களை புண்படுத்தி, அப்படி என்ன நீங்கள் சாதித்து விடப் போகிறீர்கள் என்று கேட்டாள். 

பாதை மாறிய வேதவள்ளி

இன்றைய தினம், அவர்கள் இருந்ததால் உன்னை எளிதாக மருத்துவமனை கொண்டு வந்து விட்டார்கள். எளிதாக அணுகி காப்பாற்றி விட்டார்கள். ஆனால், நாங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால், என்ன செய்திருப்போம் என்று எங்களுக்கே தெரியாது என்றாள். 

இதையடுத்து வெளியே வந்த வேதவள்ளி கயலிடம் மன்னிப்பு கேட்டாள். இதைக் கேட்ட கயல், என்னம்மா பெரிய வார்த்தை எல்லாம் பேசுகிறீர்கள். என்னுடைய அம்மாவிற்கு இது நிகழ்ந்தால், என்ன செய்வேனோ அதை தான் உங்களுக்கும் செய்தேன் என்று சொல்ல, வேதவள்ளி நெகிழ்ந்து நின்றாள். இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு வர, கயல் அம்மாவும் அங்கே வந்து விடுகிறார். அவர் அவரிடம் விசாரிக்க, அவளோ எப்போதும் இல்லாதது போல நன்றாக இருக்கிறேன் சம்மந்தி என்று கூறினாள். 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, வடிவு தர்மலிங்கமும் அங்கே வந்துவிட்டார்கள். ஆரம்பத்திலேயே தர்மலிங்கம் வடிவை எச்சரித்து வாயை அங்கு அடக்கி பேசு என்று தான் அழைத்து வந்தார். ஆனால் வடிவோ, அங்கு உட்கார்ந்து வேதவள்ளி நீங்கள் செத்திருந்தால் இந்த குடும்பத்தை யார் காப்பாற்றி இருப்பார்; நீங்கள் செத்திருந்தால் அதற்கு காரணமானவர்களை சும்மா விடமாட்டேன் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். இதை கேட்ட அனைவரும் கடுப்பாகினர். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.