தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kanguva Release Postponed: ’ரஜினியின் வேட்டையன் படம் எதிரொலி!’ கங்குவா ரிலீஸ் தள்ளி வைப்பு! ஜகா வாங்கினார் சூர்யா!

Kanguva Release Postponed: ’ரஜினியின் வேட்டையன் படம் எதிரொலி!’ கங்குவா ரிலீஸ் தள்ளி வைப்பு! ஜகா வாங்கினார் சூர்யா!

Kathiravan V HT Tamil

Aug 25, 2024, 08:24 PM IST

google News
Kanguva Release Postponed: நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படமும், நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதாக இருந்தது.
Kanguva Release Postponed: நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படமும், நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதாக இருந்தது.

Kanguva Release Postponed: நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படமும், நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதாக இருந்தது.

வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விநியோகிஸ்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

வரும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி அக்டோர் 10ஆம் தேதி அன்று கங்குவா திரைப்படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றய தினமே ரஜினி காந்த் நடித்த வேட்டையன் திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

அக்டோபர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமை விஜயதசமியும்,  அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமையும் தொடர் விடுமுறை நாளாக வருகின்றது. 

சூர்யாவின் கங்குவா

நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து உள்ளார். வில்லனாக அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான பாபி தியோல் நடித்து உள்ளார். இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்டப் பல நடிகர்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கும் இந்தப்படத்தில் வெளியான போஸ்டர்கள், பாடல், டீசர் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. 

கங்குவன் என்பது ஒரு மொழி.

இந்த திரைப்படம் தொடர்பாக இயக்குநர் சிவா பேசும் போது, " உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும். இது 3 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் நெருப்பு என்று பொருள். கங்குவன் என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், “கங்குவன் திரைப்படத்தை நாங்கள் 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். படத்தில் சூர்யா சார் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் கவர்ச்சியாகவும், சக்திவாய்ந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் ஃபேண்டஸி கலந்த திரைப்படமாக இருக்கும்.

ரஜினியின் வேட்டையன் 

ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'வேட்டையன்'. ரஜினிகாந்தின் 170 வது திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தை ஜெய்பீம் திரைப்பட புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். பேட்ட, தர்பார், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய பிறகு அவர் நான்காவது முறையாக மீண்டும் இந்தப்படத்தில் ரஜினியுடன இணைந்திருக்கிறார்.

அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அந்தா கனூன், கெராஃப்தார் மற்றும் ஹம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக இந்தப்படத்தில் இணைந்து இருக்கின்றனர். மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் இந்தப்படத்தில் ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் பான்-இந்தியா சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி