Surya Jyothika: ‘நெருக்கம் வேண்டாம்னு சூர்யா கெஞ்சினார்.. ஆனா ஜோ அவரை இழுத்து’- பிருந்தா!-brinda master latest interview about kaakha kaakha full movie ondra renda aasaigal surya jyothika romance - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Surya Jyothika: ‘நெருக்கம் வேண்டாம்னு சூர்யா கெஞ்சினார்.. ஆனா ஜோ அவரை இழுத்து’- பிருந்தா!

Surya Jyothika: ‘நெருக்கம் வேண்டாம்னு சூர்யா கெஞ்சினார்.. ஆனா ஜோ அவரை இழுத்து’- பிருந்தா!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 21, 2024 07:30 AM IST

Surya Jyothika: உண்மையில் கௌதம் மைனனுக்கு இந்த இடத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். காரணம் என்னவென்றால் அப்போது அவர் ஒரு புதுவிதமான ஸ்டைலை பாடல்களில் கொண்டு வந்தார். - பிருந்தா!

Surya Jyothika: ‘நெருக்கம் வேண்டாம்னு சூர்யா கெஞ்சினார்.. ஆனா ஜோ அவரை இழுத்து’- பிருந்தா!
Surya Jyothika: ‘நெருக்கம் வேண்டாம்னு சூர்யா கெஞ்சினார்.. ஆனா ஜோ அவரை இழுத்து’- பிருந்தா!

அப்போதே இருந்த காதல் 

இது குறித்து அவர் பேசும் போது, “காக்க காக்க திரைப்படத்தில் நன்றாக நடிக்கக் கூடிய, அர்ப்பணிப்பு நிறைந்த, அழகான சூர்யா இந்த பக்கம் கிடைத்தால், அந்த பக்கம் ஜோதிகா கிடைத்தார். உண்மையில் கௌதம் மைனனுக்கு இந்த இடத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். காரணம் என்னவென்றால் அப்போது அவர் ஒரு புதுவிதமான ஸ்டைலை பாடல்களில் கொண்டு வந்தார். 

மிக நேர்மையாக இருப்பார்கள்.

அந்த நேரத்திலேயே அவர்கள் இருவரும் காதலித்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் வெளியே அதனை காட்டிக் கொள்ளவே மாட்டார்கள். செட்டில் தொழில் ரீதியாக இருவரும் மிக நேர்மையாக இருப்பார்கள். நானும் என்னுடைய உதவியாளர்களும் அவர்களுக்கு இடையே காதல் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க, பல வேலைகளை பார்த்திருக்கிறோம். 

கண்டுபிடிக்க முடியாது.

ஆனால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியாது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒன்றா இரண்டா பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அது ஒரு சின்ன அறையில் எடுத்த பாடல் தான். சூர்யா கொஞ்சம் வெட்கப்படுவார். ஆனால் ஜோதிகா அப்படியல்ல. ஏய் கிட்டே வா என்று ஓப்பனாக பேசுவாள். சூர்யா என்னிடம் அக்கா மிகவும் நெருக்கமான காட்சிகளெல்லாம் வேண்டாம் என்று கெஞ்சுவார். 

சூர்யா அந்த அளவு கூச்ச சுபாவம்

நான் அப்போது அவரிடம் சூர்யா இதை எல்லாம் நீங்கள் செய்ய வேண்டும். அப்போதுதான் பின்னர் வரும் காட்சியில் ஜோதிகா இறக்கும் பொழுது, தாக்கம் சரியாக ஏற்படும். இதையடுத்து ஜோதிகாவிடம் மொத்த சூழ்நிலை விளக்கி,, சூர்யாவை அந்த சூழ்நிலைக்கு உள்ளே கஷ்டப்பட்டு கொண்டு வந்து அந்த பாடலை எடுத்தோம். 

ஒவ்வொரு நிமிடமும்

சூர்யா அந்த அளவு கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தார். ஆனால் அவர் மிகவும் அர்ப்பணிப்போடு வேலை செய்து கொடுப்பார். அவரிடம் என்ன பிடிக்கும் என்றால், எனக்கு எல்லாமும் தெரியும் என்ற ரீதியில் அவர் பழக மாட்டார். ஒவ்வொரு நிமிடமும் அடுத்ததாக கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்களில் அவரது கவனம் இருக்கும். எப்போதுமே கற்றுக்கொள்ள தயாராக இருப்பார். அந்தப் படத்தில் பணியாற்றியதற்கு எனக்கு ஃபிலிம் ஃபேர் விருது வழங்கப்பட்டது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.