சிறுத்தை சிவா படத்தில் சூர்யாவின் ஜோடி யார் தெரியுமா?
நடிகர் சூர்யாவுடன் நடிகை பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி கண்ட திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.
அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் பல உச்சக்கட்ட திரை பிரபலங்கள் நடித்திருந்தாலும் கடைசி இரண்டு நிமிடத்தில் சூர்யா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அதேபோல் நடிகர் மாதவன் நடித்து ஜூன் 1ஆம் தேதி வெளியான ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என்ற திரைப்படத்திலும் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
பல படங்களை தன் கைவசம் வைத்துள்ள நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இதற்கிடையில் இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் நடிகர் சூர்யா கைகோர்த்துள்ளார். அடுத்த மாதம் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்திற்கு நடிகர் சூர்யாவுடன் நடிகை பூஜா ஹெக்டே சேர்ந்து நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

டாபிக்ஸ்