தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kalki 2898 Ad: 6 டன் கொண்ட புஜ்ஜி கார்.. எலான் மஸ்குக்கு அழைப்பு.. கல்கி 2898 Ad இயக்குநர் நாக் அஸ்வின் செய்த சம்பவம்!

Kalki 2898 AD: 6 டன் கொண்ட புஜ்ஜி கார்.. எலான் மஸ்குக்கு அழைப்பு.. கல்கி 2898 AD இயக்குநர் நாக் அஸ்வின் செய்த சம்பவம்!

Marimuthu M HT Tamil

May 29, 2024, 04:51 PM IST

google News
- Kalki 2898 AD: நாக் அஸ்வின் இயக்கத்தில் வரவிருக்கும் அறிவியல் புனைகதை திரைப்படத்தில் கல்கி கி.பி 2898-ல் பிரபாஸ் கதாபாத்திரமான பைரவாவின் உதவியாளர் ரோபோ கதாபாத்திரமாக இருக்கிறது, புஜ்ஜி என்னும் சிறப்புக் கார். அதுகுறித்த செய்திகள் இணையத்தை வட்டமடிக்கின்றன.
-  Kalki 2898 AD: நாக் அஸ்வின் இயக்கத்தில் வரவிருக்கும் அறிவியல் புனைகதை திரைப்படத்தில் கல்கி கி.பி 2898-ல் பிரபாஸ் கதாபாத்திரமான பைரவாவின் உதவியாளர் ரோபோ கதாபாத்திரமாக இருக்கிறது, புஜ்ஜி என்னும் சிறப்புக் கார். அதுகுறித்த செய்திகள் இணையத்தை வட்டமடிக்கின்றன.

- Kalki 2898 AD: நாக் அஸ்வின் இயக்கத்தில் வரவிருக்கும் அறிவியல் புனைகதை திரைப்படத்தில் கல்கி கி.பி 2898-ல் பிரபாஸ் கதாபாத்திரமான பைரவாவின் உதவியாளர் ரோபோ கதாபாத்திரமாக இருக்கிறது, புஜ்ஜி என்னும் சிறப்புக் கார். அதுகுறித்த செய்திகள் இணையத்தை வட்டமடிக்கின்றன.

Kalki 2898 AD: இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து உருவாகி வரும் பான் இந்தியத் திரைப்படம், கல்கி 2898 AD. இப்படம் அறிவியல் புனைகதை திரைப்படமாக உருவாகியுள்ளது. 

 கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் கல்கி 2898 AD- திரைப்படத்துக்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ’’புஜ்ஜி’’ என்ற வாகனம் குறித்த வீடியோ மற்றும் தகவல்களை வெளியிட்டதிலிருந்து, அந்த வாகனம் தொடர்பான செய்தி இணையதளங்களில் ஆக்கிரமித்தது. 

 இந்த பிரத்யேக காரை நடிகர் நாக சைதன்யா மற்றும் எஃப் 1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ஆகிய இருவரும் ஓட்டி சோதனை செய்தனர். இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கினை ஓட்டிப்பார்க்க, அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த ’புஜ்ஜி’ சிறப்புக் காரை, சென்னை மகேந்திரா நிறுவனமும், கோவையிலுள்ள ஜெயம் மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துக் கொடுத்து இருந்தது. 

'இது 6 டன் எடை கொண்ட கார்':

ஹைதராபாத்தில் கடந்த வாரம் நடந்த விழாவில் ’’புஜ்ஜியை’’ காட்சிப்படுத்திய பிறகு,  இயக்குநர் நாக் அஸ்வின் வாகனத்தை சென்னைக்கு எடுத்துச் சென்றார். அங்கு அது தெருக்களில் ஓட்டிக் காட்டப்பட்டது. 

இதனை ஓட்டிப் பார்க்க, எக்ஸ் சமூக தள இயக்குநர் எலான் மஸ்க்கிற்கு தனிப்பட்ட அழைப்பை விடுத்தார். புஜ்ஜிக்கும் அவரது சைபர்ட்ரக்கிற்கும் இடையிலான சாத்தியமான ஒத்துழைப்பை எடுத்துக்கூறினார். அந்த ட்வீட்டில்  இயக்குநர் நாக் அஸ்வின் கூறியதாவது "அன்புள்ள எலான் மஸ்க் சார் .. எங்கள் புஜ்ஜியைப் பார்க்கவும் ஓட்டவும் உங்களுக்கு அழைப்பு விடுகிறோம். இது 6 டன் எடையுள்ள வாகனம். முழுமையாக இது இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இது ஒரு எலக்ட்ரிக் மற்றும் பொறியியலின் ஒரு சாதனை ஆகும்.

இது உங்கள் சைபர் ட்ரக் வாகனத்துடன் ஒப்பிடுகையில்,  ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும் என்பதை தைரியமாக கூறுகிறேன். ( இரண்டு வாகனங்களையும் எலான் மஸ்க் அவர்கள் ஓட்டுவது ஒரு சிறந்த காட்சியாக இருக்கும்)’’ எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் புஜ்ஜி காரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளக் கணக்கு, இயக்குநர் நாக் அஸ்வினின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளது. 

புஜ்ஜியின் அறிமுகம்:

புஜ்ஜியை கடந்த வாரம் அறிமுகப்படுத்தும்போது இயக்குநர் நாக் அஸ்வின், முதலில் திரைக்குப் பின்னால் ஒரு வீடியோவை வெளியிட்டார். புஜ்ஜி வாகனத்தை உருவாக்கும்போது பதற்றமாகவும் பொறுமையிழந்தும் ஒரு ரோபோ இருக்கிறது. 

ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்வில், ‘புஜ்ஜி’என்ற மூன்று சக்கர வாகனம் பத்திரிகையாளர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. புஜ்ஜி வாகனத்துக்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார் மற்றும் கல்கி கி.பி 2898-ல் பிரபாஸின் கதாபாத்திரமான ’’பைரவா’’வின் பக்கபலமாக புஜ்ஜி காட்டப்படுகிறது. 

ஆனந்த் மஹிந்திராவின் குழுவினரின் உதவியுடன் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் புஜ்ஜியின் அறிமுகத்திற்குப் பிறகு டிவிட்டரில் மகிழ்ச்சியாக பல தகவல்களைப் பகிர்ந்தார்

இதுதொடர்பாக ஆனந்த மஹிந்திரா எழுதியதாவது, ‘’வேடிக்கையான விஷயங்கள், உண்மையில், எக்ஸ் தளத்தில் நடக்கும்.. இப்படி ஒரு வாகனத்தை தயாரிக்க, பெரிதாக உருவாக்க நினைத்த இயக்குநர் நாக் அஸ்வின் மற்றும் அவரது திரைப்படத் தயாரிப்பாளர்கள் குழுவைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். சென்னையில் உள்ள மஹிந்திரா ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள எங்கள் குழு, பவர்டிரெய்ன் கட்டமைப்பு, புதிய வகை வாகனத்தை உருவாக்க முயற்சித்ததன்மூலம் எதிர்கால வாகனத்திற்கான, பார்வையை உணர உதவியது, கல்கி படக்குழு "என்று அவர் வாழ்த்தி எழுதியிருந்தார். 

கல்கி கி.பி 2898 திரைப்படம் பற்றி:

கல்கி கி.பி. 2898, ஒரு டிஸ்டோபியன் உலகில் அமைக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைகதை ஆகும். இது ஜூன் 27ஆம் தேதி ரிலீஸாகிறது. இதில் கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே, தீபிகா பச்சன், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  புஜ்ஜி மற்றும் பைரவா குறித்த வீடியோ, மே 31 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி