Amitabh Bachchan:'கல்கி 2898 கி.பி’ படத்தில் அஸ்வத்தாமாவாக அமிதாப் பச்சன்; மகாபாரதத்தில் உள்ள அஸ்வத்தாமாவின் பங்கு என்ன?
Amitabh Bachchan In Kalki 2898 AD:அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'கல்கி 2898' படத்தின் டீசரை அடுத்து அஸ்வத்தாமா மற்றும் அவரது கதை குறித்து இணையத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

Amitabh Bachchan In Kalki 2898 AD: கல்கி 2898 கி.பி. படத்தில் அமிதாப் பச்சன் நடித்த காட்சி மற்றும் கதாபாத்திரத்தின்பெயர் வெளியானதை அடுத்து அக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும், அமிதாப் பச்சன் கல்கி 2898 கி.பி. படத்தில் அஸ்வத்தாமாவாக இருந்தால் எப்படி இருக்கும் என AI மென்பொருள் மூலம் அமிதாப் பச்சனின் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த படத்தில் வேத வியாஸின் இந்து காவியமான மகாபாரதத்தின் முக்கிய நபரான அஸ்வத்தாமா என்ற கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். படத்தின் கதை காவியத்திலிருந்து ஈர்க்கப்பட்டு, ஒரு அறிவியல் புனைகதை கற்பனை மாற்றப்பட்டிருக்கிறது. அதே வேளையில், அமிதாப்பின் கதாபாத்திரம் நிச்சயமாக புராணக்கதையுடன் சில இணைப்புகளைக் கொண்டுள்ளது.
வெளியிடப்பட்ட கதாபாத்திர டீஸரில் இளம் அமிதாப், தாக்கப்பட்டு காயமடைந்து, நெற்றியில் பளபளப்பான ரத்தினக் கல்லுடன் காணப்படுகிறார். ஒரு குழந்தை அவனிடம் கேட்கிறது, “நீங்கள் கடவுளா? நீங்கள் ஏன் இறக்க முடியாது? நீங்க யாரு?’’ எனப் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறது. அதற்கு அவர், ”நான் துவாபர யுகத்திலிருந்து பத்தாவது அவதாரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். நான் துரோணாச்சாரியாரின் மகன், அஸ்வத்தாமா." எனப் பதிலுரைக்கிரார்.